TN Rain Alert: லீவுக்கு வெளியே செல்ல திட்டமா? .. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் நோட் பண்ணுங்க!

TN Rain Alert: லீவுக்கு வெளியே செல்ல திட்டமா? .. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் நோட் பண்ணுங்க!
News Image

தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் பலவீனமான காற்றழுத்த தாழ்வு பாதை காரணமாக எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு என்பதை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனைப் பற்றிக் காணலாம்.

தமிழ்நாட்டில் எங்கெல்லாம் மழை?

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது.இதன் காரணமாக  ஆகஸ்ட் 15ம் தேதியான இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், காஞ்சிபுரம், செங்கல்பட்டு,ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன்  கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

அதேசமயம் இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன்  கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான பெய்யக்கூடும்” என கணிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 16ல் எங்கெல்லாம் மழை?

இதேபோல் ஆகஸ்ட் 16ம் தேதியான நாளை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், கடலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் மழை பெய்யுமா?

சென்னையைப் பொறுத்தவரை நேற்று பல இடங்களில் இரவு நேரத்தில் மழை பெய்தது. இதனால் மக்கள் சற்று மகிழ்ச்சியடைந்தனர். அந்த வகையில் ஆகஸ்ட் 15ம் தேதி வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

தென் தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் குமரிக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் ஆகஸ்ட் 15ம் தேதியான இன்று சுதந்திர தின விடுமுறை மற்றும் நாளை வார விடுமுறை என்பதால் பலரும் வெளி இடங்களுக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டு வருகின்றனர். இப்படியான நிலையில் தான் வானிலை ஆய்வு மையம் பெரும்பாலான இடங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks