2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!

2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
News Image

நாடு முழுவதும் சுதந்திர தின விழா இன்று கொண்டாடப்படும் நிலையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் நடைபெறும் விழாவில் முதலமைச்சர் விஜய் தேசிய கொடியேற்றி சிறப்புரையாற்ற உள்ளார்.

80வது சுதந்திர தின விழா

நம்முடைய இந்திய நாடு 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திரம் பெற்றது. இந்த நாள் எத்தனை தலைமுறை வந்தாலும் யாராலும் மறக்கவே முடியாத பொன் நாளாகும். ஒவ்வொரு ஆண்டும் இந்த தேதி வரவேண்டும் என்பதெல்லாம் இல்லை. ஆகஸ்ட் 15ம் தேதி என சொன்னாலே நம் மனதில் இனம்புரியாத மகிழ்ச்சி, சொல்ல முடியாத தேசப்பற்று குடிக்கொள்ளும். அப்படியான வகையில் 80வது சுதந்திர தினம் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.

தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்

அதன்படி சென்னையில் மாநில அரசு சார்பில் நடைபெறும் விழாவில் முதலமைச்சர் விஜய் தலைமைச் செயலகத்தில் உள்ள கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தவுள்ளார்.இதற்காக காலை 8.20 மணிக்கு அவர் தனது வீட்டில் இருந்து காரில் புறப்படுகிறார். கடற்கரை உழைப்பாளர் சிலை அருகே வந்தது. காவல்துறை மோட்டார் சைக்கிள்கள் அணிவகுத்து அவரை கோட்டைக்கு அழைத்துச் செல்லும். அங்கு காவல்துறை மரியாதையை ஏற்றப் பின் திறந்தவெளி ஜீப்பில் பயணித்து காவல்துறை அணிவகுப்பை பார்வையிடுவார். இதன்பின்னர் 8.45 மணியளவில் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்துகிறார்.

தொடர்ந்து சுதந்திர தின உரையாற்றும் முதலமைச்சர் விஜய் தவெக அரசின் செயல்பாடு மட்டுமல்லாமல் பல்வேறு புதிய அறிவிப்புகளையும் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் அவர்களின் வாரிசுகளுக்கான ஓய்வூதிய உயர்வு உள்ளிட்ட அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து பல்வேறு விருதுகளையும் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு வழங்கி சிறப்பிக்கிறார்.

பலத்த போலீஸ் பாதுகாப்பு

சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை மட்டுமல்லாமல் தமிழ்நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மக்கள் கூடும் இடங்களில் சிசிடிவி கொண்டு போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

வரலாற்று சம்பவம் செய்யும் விஜய்

1973ஆம் ஆண்டு வரை டெல்லியில் குடியரசுத் தினத்தன்று குடியரசுத் தலைவரும், சுதந்திர தினத்தன்று பிரதமரும் கொடியேற்றுவது வழக்கமாக இருந்தது. அதேசமயம் மாநிலங்களில் மக்களால் தேர்வு செய்யப்படாத ஆளுநர் ஏற்றி வந்தார். இந்த நடைமுறையை மாற்றி  போராட்டம் நடத்தி 1974ஆம் ஆண்டு சுதந்திர தினத்தன்று மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர்கள் கொடியேற்றலாம் என்ற முறையைக் கொண்டு வந்தார்.

அதன்பின் 2025 சுதந்திர தினம் வரை திமுக, அதிமுக என இரு திராவிட கட்சிகளைச் சேர்ந்த முதலமைச்சர்கள் தான் கொடியேற்றி மரியாதை செலுத்தினார்கள். முதல்முறையாக அவ்விரு கட்சிகளும் அல்லாத ஒரு கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த முதலமைச்சர் விஜய் கொடியேற்றுவது சிறப்பான நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks