Tamil Nadu Budget 2026: தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டின்படி மாநிலத்தின் கடன் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை:

முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசின் முதல் பட்ஜெட்டை, நிதியமைச்சர் மரிய வில்சன் தமிழ்நாடு சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில் பல்வேறு துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு மற்றும் முக்கிய திட்டங்கள் தொடர்பான விவரங்கள் இடம்பெற்று இருந்தன. இறுதியில் மாநிலத்தின் மொத்த வருவாய், செலவினங்கள் மற்றும் கடன் தொகை தொடர்பான விவரங்களும் பட்டியலிடப்பட்டுள்ளன.

தமிழ்நாடு அரசின் வருவாய் விவரங்கள்

மாநிலத்தின் சொந்த வரி வருவாய் 2026-27 நிதியாண்டில் 2 லட்சத்து 26 ஆயிரத்து 740 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது

மாநிலத்தின் சொந்த வரி அல்லாத வருவாய் 2026-27 நிதியாண்டில் 27 ஆயிரத்து 835 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடான 27 ஆயிரத்து 704 கோடி ரூபாயைவிட சற்றே அதிகரித்துள்ளது.

மத்திய அரசு வரிகளில், தமிழ்நாட்டின் பங்கு 2026-27 நிதியாண்டில் 62 ஆயிரத்து 531 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது மத்திய அரசு வரவு-செலவுத் திட்டம் 2026-27-இன் மதிப்பீடுகளை அடிப்படையாகக் கொண்டது

மத்திய அரசிடமிருந்து பெறும் உதவி மானியங்கள் 2026-27 நிதியாண்டில் 32 ஆயிரத்து 922 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது

தமிழ்நாடு அரசின் வருவாய் விவரங்கள்

தமிழ்நாடு அரசின் செலவினமானது 2026-27 நிதியாண்டில் 4 லட்சத்து 5 ஆயிரத்து 802 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதில்

ஊதியங்களுக்கான செலவினம் 2026-27 நிதியாண்டில் 91 ஆயிரத்து 32 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது

ஓய்வூதியம் மற்றும் ஓய்வுக்கால நலன் செலவுகளுக்காக 2026-27 நிதியாண்டில் 41 ஆயிரத்து 846 கோடி ரூபாய் மதிப்பிடப்பட்டுள்ளது.

ஊதியம் அல்லாத செயல்பாடுகள் மற்றும் பராமரிப்புகளுக்காக 19 ஆயிரத்து 698 கோடி ரூபாய் மதிப்பிடப்பட்டுள்ளது.

மானியங்கள் மற்றும் நிதி மாற்றங்களுக்கான செலவினம் 2026-27 நிதியாண்டில் ஒரு லட்சத்து 74 ஆயிரத்து 494 கோடி ரூபாய் மதிப்பிடப்பட்டுள்ளது

முந்தைய ஆண்டுகளில் திரட்டப்பட்ட பொதுக் கடனுக்கான வட்டிக்காக 2026-27 நிதியாண்டில் 78 ஆயிரத்து 683 கோடி ரூபாய் மதிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்: TN Budget 2026: சமூக நீதியை காப்பாற்றினாரா CM விஜய்? பட்ஜெட்டில் ஒதுக்கிய நிதி என்ன? முக்கிய திட்டங்களின் லிஸ்ட்

மூலதன செலவு

திருத்த வரவு-செலவுத் திட்டம் 2026-27ல் மூலதனச் செலவினம் 56,985 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது.

வருவாய் & நிதிப்பற்றாக்குறை

வருவாய் பற்றாக்குறை என்பது 2026-27 நிதியாண்டில் 55 ஆயிரத்து 775 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகள் 2026-27ல் மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் நிதிப் பற்றாக்குறையின்விகிதம் 3.00 சதவீதமாக மதிப்பிடப்பட்டுள்ளது. மேம்பட்ட வரி நிர்வாகம் மற்றும் வசூல் திறன் உள்ளிட்ட வருவாய் பெருக்க நடவடிக்கைகளின் விளைவாக, இது 2027-28ல் 53,933 கோடி ரூபாயாகவும், 2028-29ல் 51,058 கோடி ரூபாயாகவும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது

தமிழ்நாடு அரசின் மொத்த கடன்

பொதுக்கடன்களை பொறுத்தமட்டில் இவ்வரசு 2026-27, மொத்தம் 1,73,445 கோடி ரூபாய் கடன் பெறவும், 51,971 கோடி ரூபாய் திருப்பிச் செலுத்தவும் திட்டமிட்டுள்ளது. பொது கணக்கின் கீழுள்ள பொறுப்புகளும் பொதுக் கடனுடன் சேர்த்துக் கணக்கிடப்படுகின்றன. 2026-27 ஆம் ஆண்டிற்கான இடைக்கால வரவு-செலவு திட்டத்தில் மதிப்பிடப்பட்டிருந்த நிகர பொதுக்கடன் மற்றும் பொது கணக்கு பொறுப்புகள் 1,21,653 கோடி ரூபாய், 2026-27 ஆம் ஆண்டு திருத்த வரவு-செலவு திட்ட மதிப்பீடுகளில் 1,20,964 கோடி ரூபாயாக உள்ளது. இதன் விளைவாக, 31 மார்ச் 2027ஆம் நாளில் நிலுவைப் பொறுப்புகள் 10 லட்சத்து 98 ஆயிரத்து 768 கோடி ரூபாயாக இருக்கும் என தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: Read Full Article