ரீல்ஸ், ரீல் விடுவது தான் இந்த ஆட்சியின் சாதனையாக உள்ளது. பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் இடம் பெறவில்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழக அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதனை நிதியமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்தார். இதில் பல்வேறு துறை சார்ந்த அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக எதிர்க்கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

ரீல்ஸ், ரீல் விடுவது தான் தவெக அரசு

அந்த வகையில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்த கருத்தில், “இந்த பட்ஜெட்டில் எந்தவொரு முக்கிய அறிவிப்பும் இடம் பெறவில்லை. ஒரு சில மாற்றம் இருக்கும் என சொல்லி ஏற்கனவே உள்ள திட்டத்திற்கு ஸ்டிக்கர் ஒட்டியுள்ளார்கள். ஆட்சிப் பொறுப்பேற்றும் 85 நாட்கள் ஆன நிலையில் எந்தவொரு திட்டமும் கொண்டு வரவில்லை. வசனத்தைப் பேசியே ஓட்டி விட்டார்கள். எல்லாவற்றிற்கும் ரீல்ஸ், ரீல் விடுவது தான் இந்த ஆட்சியின் சாதனையாகப் பார்க்கப்படுகிறது. ஆட்சிக்கு வரும் முன் மக்கள் எதிர்பார்க்கும் திட்டங்கள் நிறைவேற்றப்படும் என வீர வசனம் பேசினார்கள். இந்த பட்ஜெட்டை பார்க்கும்போது எந்தவொரு திட்டமும் முழுமையாக இடம்பெறவில்லை. தேர்தல் வாக்குறுதிகள் சொன்னது நிறைவேற்றப்படவில்லை. மகளிர் உரிமைத்தொகை ரூ.2500, ஆண்டுக்கு 6 சிலிண்டர், முதியோர் உதவித்தொகை, வேலையில்லா பட்டதாரிகளுக்கு உதவித்தொகை என பல அறிவிப்புகளை வெளியிட்டார்கள்.

இப்படி சொன்னது எதுவும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. வருவாய் பற்றாக்குறை ரூ.55,785 கோடி என சொல்லியிருக்கிறார்கள். நிதி பற்றாக்குறை 1,21,819 கோடி என தெரிவித்திருக்கும் நிலையில் இதையெல்லாம் தவெக அரசு எப்படி சரிசெய்யப் போகிறது?.. ஏற்கனவே இருந்த திமுக அரசு நிதி ஆதாரத்தை பெருக்க நிபுணர் குழு அமைத்தனர். ஆனால் 5 ஆண்டுகளில் ரூ.5 லட்சம் கோடி கடன் தான் பெற்றார்கள்.

நிதி பற்றாக்குறை, ஒட்டுமொத்த கடன் பற்றாக்குறை என இருக்கும்போது எப்படி சரி செய்ய முடியும்?.. இதற்காக விளக்கமே சொல்லப்படவில்லை. இந்த அரசு எப்போதும்போல திமுக அரசைப் போல பட்ஜெட் என சொல்லி சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்கள். கால அவகாசம் கொடுத்தால் மட்டும் என்னவாக போகிறது. கடன் வாங்கி தான் அரசை நடத்த வேண்டிய சூழல் தான் இன்று நிலவுகிறது” என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

பிரேமலதா கடும் விமர்சனம்

தேமுதிக எம்.எல்.ஏ. பிரேமலதா பேசுகையில், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசுகையில், “இந்த பட்ஜெட்டில் விவசாயிகள் கடன் முழுமையாக தள்ளுபடி இடம்பெறாதது வருத்தத்திற்குரியது. நீர்மிகை மாநிலமாக தமிழ்நாடு உருவாக வேண்டும் என்ற கோரிக்கை இடம்பெறவில்லை. கடன் தொகையை குறைக்க என்ன வழி என்பது பட்ஜெட்டில் இடம்பெறவில்லை என தெரிவித்தார். அதேசமயம் கூவம் உள்ளிட்ட நதிகள் சீரமைப்பு, சாலைகள் வசதி, சூரிய சக்தி மின்சாரம், போக்குவரத்து துறையில் மின் பேருந்துகள் போன்ற திட்டம் பற்றிய அறிவிப்பை வரவேற்கிறேன். இது செயலாக்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.

Source: Read Full Article