தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2026-27-ஆம் நிதி ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் மரியா வில்சன் அவர்கள் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில், தலைநகர் சென்னையை உலகத் தரத்தில் நவீன உள்கட்டமைப்பு மற்றும் திட்டமிடுதலுடன் மேம்படுத்துவதற்காக ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டு, நிதி ஒதுக்கடும் செய்யப்பட்டுள்ளது.

விரிவுபடுத்தப்பட்ட சென்னைக்கான பெருந்திட்டம்

மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியை வேகப்படுத்தும் நோக்கில், சென்னை பெருநகரப் பகுதியை 5,904 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் விரிவுபடுத்துவதற்கான ஓர் விரிவான முழுமைத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. சென்னை பெருநகரப் பகுதியில் அதிவேகமான மற்றும் சீரான விரிவாக்கத்தை சாத்தியமாக்குவதற்காக, இந்த ஒருங்கிணைந்த திட்டமிடல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நீண்ட கால வளர்ச்சிக்கான நிதி ஒதுக்கீடு

நகரத்தின் தடையற்ற நீண்ட கால வளர்ச்சி மற்றும் மாற்றத்திற்கான வழிகாட்டியாக இந்த வரைபடம் திகழும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டப் பணிகளைச் சிறப்பாக செயல்படுத்தவும் முடுக்கிவிடவும் ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஸ்மார்டர் மொபிலிட்டி மற்றும் பசுமைச் சென்னை உள்ளிட்ட நவீன அம்சங்களுடன், வளர்ந்து வரும் நகர்ப்புறத் தேவைகளை நிறைவேற்றும் வகையில் சென்னை புதுப்பொலிவு பெறவுள்ளது.

Source: Read Full Article