Tamil Nadu Budget 2026 Department Wise: முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழ்நாடு அரசின் முதல் பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித்துறை மேம்பாட்டிற்காக 2026-27 நிதியாண்டில் ரூ.44,527 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் பட்ஜெட்

முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழ்நாடு அரசின் முதல் பட்ஜெட்டை, நிதியமைச்சர் மரிய வில்சன் சட்டமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார். அப்போது, தவெக தலைமையிலான ஆட்சி அமைந்த பிறகு முன்னெடுக்கப்பட்ட வளர்ச்சி திட்டங்கள், ஊழலை ஒழிப்பதற்கான நடவடிக்கைகள், அரசு நிர்வாகத்தில் மேற்கொள்ளப்பட்ட மறுசீரமைப்புகள் போன்றவை பட்டியலிடப்பட்டன. மேலும், மதுபான உற்பத்தி ஆலைகளுக்கான கூடுதல் சிறப்பு கட்டணம் பதிவுத்துறையில் நேரடியாக வர வேண்டிய அவசியமின்மை மற்றும் சுரங்க நடவடிக்கைகள் கண்காணிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளால் மாநிலத்திற்கு கூடுதலாக சுமார் 15 ஆயிரம் கோடி ரூபாய் வருவாயாக கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என நிதியமைச்சர் மரிய வில்சன் தெரிவித்தார். தொடர்ந்து ஒவ்வொரு துறைக்கும் ஒதுக்கிய நிதி விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

ஒவ்வொரு துறைக்கும் ஒதுக்கப்பட்ட நிதி விவரங்கள்:

பள்ளிக்கல்வித்துறை மேம்பாட்டிற்காக 2026-27 நிதியாண்டில் ரூ.44,527 கோடி ஒதுக்கீடு

உயர்கல்வித்துறை மேம்பாட்டிற்காக 2026-27 நிதியாண்டில் ரூ.8,393 கோடி ஒதுக்கீடு

தொழிலாளர் மற்றும் திறன் மேம்பாட்டிற்காக 2026-27 நிதியாண்டில் ரூ.2,022 கோடி ஒதுக்கீடு

சிறப்பு திட்டம் செயலாக்கத்திற்கு 2026-27 நிதியாண்டில் ரூ.17,150 கோடி ஒதுக்கீடு

இளைஞர் நலன் & விளையாட்டு துறை மேம்பாட்டிற்காக 2026-27 நிதியாண்டில் ரூ.1,051 கோடி ஒதுக்கீடு

சமூக நீதித்துறை மேம்பாட்டிற்காக 2026-27 நிதியாண்டில் ரூ.3,937 கோடி ஒதுக்கீடு

பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலன் மேம்பாட்டிற்காக 2026-27 நிதியாண்டில் ரூ.1,700 கோடி ஒதுக்கீடு

மாற்றுத்திறனாளிகள் நலன் மேம்பாட்டிற்காக 2026-27 நிதியாண்டில் ரூ.1,485 கோடி ஒதுக்கீடு

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மேம்பாட்டிற்காக 2026-27 நிதியாண்டில் ரூ.9,718 கோடி ஒதுக்கீடு

மருத்துவத்துறை மேம்பாட்டிற்காக 2026-27 நிதியாண்டில் ரூ.23,357 கோடி ஒதுக்கீடு

கூட்டுறவுத்துறை மேம்பாட்டிற்காக 2026-27 நிதியாண்டில் ரூ.8,028 கோடி ஒதுக்கீடு

வேளாண்மை மற்றும் உழவர் நலன் மேம்பாட்டிற்காக 2026-27 நிதியாண்டில் ரூ.14,984 கோடி ஒதுக்கீடு

கால்நடை பராமரிப்பு, பால் வளம், மீன்வளம் மேம்பாட்டிற்காக 2026-27 நிதியாண்டில் ரூ.4,780 கோடி ஒதுக்கீடு

தொழில் வளர்ச்சி மேம்பாட்டிற்காக 2026-27 நிதியாண்டில் ரூ.4,414 கோடி ஒதுக்கீடு

சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் மேம்பாட்டிற்காக 2026-27 நிதியாண்டில் ரூ.2,142 கோடி ஒதுக்கீடு

கைத்தறி, கைவினை, கதர் துறை மேம்பாட்டிற்காக 2026-27 நிதியாண்டில் ரூ.1,678 கோடி ஒதுக்கீடு

செயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல் தொழில்நுட்பம் மேம்பாட்டிற்காக 2026-27 நிதியாண்டில் ரூ.398 கோடி ஒதுக்கீடு

Source: Read Full Article