சட்டப்பேரவையில் அதிமுக கொறடா அக்ரி எஸ்.கிருஷ்ணமூர்த்தி கொண்டு வந்த லெட்டர்பேட் வைத்து அமைச்சர் செங்கோட்டையன் செய்த சம்பவம் சிரிப்பலையை ஏற்படுத்தியது.

மிலாதுன் நபி விடுமுறைக்குப் பின் தமிழக சட்டப்பேரவை இன்று வழக்கம்போல கூடியது. இன்று கேள்வி - பதில் நேரம் செயல்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதிலளித்தனர். இதனைத் தொடர்ந்து நேபாளம் நாட்டில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பு குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சிகள் முடிவு செய்தன. ஆனால் அதற்குள் அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம் அளிக்க முற்பட்டதால் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டது.

இதனைத் தொடர்ந்து பெரும் விவாதத்திற்கிடையே எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தில் பேச அனுமதிக்குமாறு அமைச்சர் ராஜ்மோகன் சபாநாயகரிடம் பரிந்துரை செய்தார். பின்னர் இந்த விஷயத்தில் எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள் பேசினார்கள்.

அக்ரி கிருஷ்ணமூர்த்தி சம்பவம்

இதற்கிடையில் ஜவ்வாது மலைப்பகுதியில் உள்ள பிரச்னைகள் பற்றி அதிமுக எம்.எல்.ஏ.வும், சட்டமன்ற கொறடாவுமான அக்ரி எஸ்.கிருஷ்ணமூர்த்தி பேசினார். அப்போது அதிமுக முன்னாள் முதலமைச்சர்கள் செய்த விஷயங்களை பட்டியலிட்டு கொண்டே வந்தார். உடனடியாக குறுக்கிட்ட சபாநாயகர், வரலாற்றைச் சொல்ல இது இடமில்லை என்ன கேள்வியோ அதை மட்டும் கேளுங்கள் என கடிந்து கொண்டார்.

<iframe title="Vijaya Prabhakaran on CM Vijay | CM விஜய் பற்றி எல்லைமீறி பேசிய விஜய பிரபாகரன்! பிரேமலதா ரியாக்‌ஷன்" src="https://www.youtube.com/embed/HId4AKL95KA" width="1101" height="619" frameborder="0" allowfullscreen="allowfullscreen">

ஜமுனாமரத்தூர் வரை உள்ள ஒரு வழிப்பாதையை இருவழிப்பாதையாக மேம்பாடு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது என பல விஷயங்களைப் பேசினார். மீண்டும் குறுக்கிட்ட சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், என்ன கேள்வியோ அதை மட்டும் கேளுங்கள். ஒரு முன்னாள் அமைச்சர் நீங்கள் இப்படி நீண்ட விஷயங்களைப் பேச வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டார். இதனையடுத்து திருவண்ணாமலை மாவட்டத்தில் தனது தொகுதியில் அரசாணை வெளியிடப்பட்டு நிலுவையில் உள்ள திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கி தரமான சாலைகள் அமைக்க வேண்டும் என அக்ரி கிருஷ்ணமூர்த்தி கோரிக்கை விடுத்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய அவை முன்னவர் அமைச்சர் செங்கோட்டையன், “அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் லெட்டர்பேடை நான் பார்த்தேன். அதில் ஓபிஎஸ் புகைப்படம் உள்ளது. ஓ.பன்னீர்செல்வம் கட்சி மாறி விட்டார். ஆனால் அதிமுக எம்.எல்.ஏ. லெட்டர்பேடில் படம் மாறவில்லை” என குறிப்பிட்டார். இதனால் சட்டப்பேரவையில் சிறிது நேரம் கலகலப்பு நிலவியது. எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுகவினர் அதிர்ச்சியடைந்தனர்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் பேச முயன்ற அக்ரி கிருஷ்ணமூர்த்தியை தடுத்த சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் சில விஷயங்களை நகைச்சுவையாக எடுத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொன்றுக்கும் பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை என தெரிவித்தார். இருந்தாலும் நாங்கள் அனைவரும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒற்றுமையாக இருக்கிறோம் என அக்ரி கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.

Source: Read Full Article