Tambaram to Chengalpattu : டிராஃபிக் டென்ஷன் போச்சு! தாம்பரம் டூ செங்கல்பட்டுக்கு சல்லுனு போகலாம்.! -தவெக அரசின் மாஸ் பிளான்

Tambaram to Chengalpattu : டிராஃபிக் டென்ஷன் போச்சு! தாம்பரம் டூ செங்கல்பட்டுக்கு சல்லுனு போகலாம்.! -தவெக அரசின் மாஸ் பிளான்
News Image

சென்னையில் தொடரும் போக்குவரத்து நெரிசல்

தமிழகத்தின் தலைநகரான சென்னையில் நாளுக்கு நாள் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது. போக்குவரத்து நெரிசலும் உச்சத்தை தொட்டுள்ளது. இதனால் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்லவே பல மணி நேரங்கள் சாலையில் காத்திருக்க வேண்டிய நிலையானது உள்ளது. மேலும் சென்னையில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்லவும், வெளி மாவட்டங்களில் இருந்து சென்னைக்குள் வருவதற்கும் பல மணி நேரங்கள் ஆகிறது. குறிப்பாக தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தீர்வு காணும் வகையில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசும் முக்கிய திட்டத்தை செயல்படுத்தவுள்ளது.

தாம்பரம்- செங்கல்பட்டு மேம்பாலம்

இது தொடர்பாக இன்று சட்டசபையில் முக்கிய கேள்விக்கு தமிழக அரசு பதில அளித்துள்ளது. அந்த வகையில், தமிழக சட்டமன்றத்தில் நடைபெற்ற கேள்வி நேரத்தின் போது பேசிய முன்னாள் முதலைமச்சர் எடப்பாடி பழனிசாமி,   சென்னையில் இருந்து திருச்சி செல்லும் நெடுஞ்சாலை போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள சாலையாக உள்ளது. எனவே தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரையிலான சாலையில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க கடந்த அதிமுக ஆட்சியில் திட்டமிடப்பட்டது. இதற்கான அறிக்கை தயாரித்து மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. மத்திய அரசும் இந்த திட்டத்தை செயல்படுத்த தயாராக இருந்தது. ஆனால் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது. எனவே இந்த அரசு தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரை உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்துமா.? என கேள்வி எழுப்பினார்.

கன்னியாகுமரி- சென்னை 8 வழிச்சாலை திட்டம்

இதற்கு பதில் அளித்த பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, நெடுஞ்சாலைத்துறை மானிய கோரிக்கையில் சென்னை முதல் கன்னியாகுமரி வரை 8 வழிச்சாலையாக திட்டம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைத்துறை திட்டங்கள் தொடர்பாக ஒன்றிய அமைச்சரின் சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசிக்கப்பட்டது. முக்கியமாக சென்னை- கன்னியாகுமரி வரை அதிகமாக போக்குவரத்து உள்ள வழித்தடமாக உள்ளது. எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இந்த சாலையை 8 வழிச்சாலையாக கொண்டு வரவேண்டும். தற்போது விபத்துகள் அதிகம் ஏற்படும் சாலையாக இந்த சாலை உள்ளது.

உயர்மட்ட மேம்பாலம்- மத்திய அரசோடு ஆலோசனை

மேலும் திருச்சியில் இருந்து செங்கல்பட்டு வரை 4 மணி நேரத்திற்குள் வந்து விட முடிகிறது. அடுத்தாக செங்கல்பட்டில் இருந்து சென்னை விமான நிலைம் வருவதற்கு 3 மணி நேரத்திற்கும் மேல் ஆகிறது. இதே போல பெங்களூர் இருந்து திருவள்ளூர் வரை விரைவாக வரமுடியும். சென்னைக்குள் வருவதற்கு பல மணி நேரங்கள் ஆகிறது. அடுத்த மாதம் ஒன்றிய அமைச்சரோடு ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது. அப்போது தாம்பரம்- செங்கல்பட்டு வரை உயர்மட்ட மேல்பால திட்டம் தொடர்பாக ஆலோசனை செய்து முடிவெடுக்கப்படும் என தெரிவித்தார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks