TASMAC shops : 717 டாஸ்மாக் கடைகளுக்கு பதிலாக FL-2 மதுபான கிளப் தொடங்க அனுமதி.? விஜய் அரசை வெளுத்தெடுக்கும் நயினார்

TASMAC shops : 717 டாஸ்மாக் கடைகளுக்கு பதிலாக FL-2 மதுபான கிளப் தொடங்க அனுமதி.? விஜய் அரசை வெளுத்தெடுக்கும் நயினார்
News Image

717 டாஸ்மாக் கடைகள் மூடல்

தமிழகத்தில் புதிதாக தவெக அரசு அமைந்துள்ள நிலையில், கல்வி நிலையங்கள், பேருந்து நிலையங்கள், வழிபாட்டு தளங்களுக்கு அருகில் உள்ள சுமார் 717 டாஸ்மாக் கடைகளை அகற்ற முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டார். இதனையடுத்து பல இடங்களில் டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டது. இதனை பொதுமக்கள் வரவேற்ற நிலையில், மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளுக்கு பதிலாக பொழுதுபோக்குக் கிளப்புகளுக்கான FL-2 உரிமங்களைப் வழங்கப்பட்டு வருவதாகவும், இந்த கிளப்புகள் விதிகளை மீறி அனைவருக்கும் மது விற்கும் வணிகக் கூடங்களாகச் செயல்படுவதாகப் புகார்கள் எழுந்துள்ளது.

FL-2 மதுபான உரிம விவரங்களை தவெக அரசு மறைப்பது ஏன்?

இது தொடர்பாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் மூடப்பட்ட 717 டாஸ்மாக் கடைகளின் முகவரிகளை மறைத்த முதல்வர் விஜய் அரசு, இப்போது புதிய FL-2 (தனியார் கிளப்) மதுபான உரிமங்களின் விவரங்களையும் தர மறுப்பது RTI மூலம் அம்பலமாகியுள்ளது. இதன் மூலம் தலைமைச் செயலக மதுவிலக்குத் துறைக்கே இந்த அடிப்படைத் தகவல்கள் தெரியாதா அல்லது முறைகேடுகளை மறைக்க அரசு திட்டமிட்டுச் சதி செய்கிறதா என்ற வலுவான சந்தேகம் எழுகிறது.

FL-2 உரிமங்களை வழங்கிய தவெக அரசு

பொழுதுபோக்குக் கிளப்புகளுக்கான FL-2 உரிமங்களைப் பெற்றுக்கொண்டு, அவை விதிகளை மீறி அனைவருக்கும் மது விற்கும் வணிகக் கூடங்களாகச் செயல்படுவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. ஒருபுறம் 717 டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டதாக விளம்பர நாடகமாடிவிட்டு, மறுபுறம் FL-2 உரிமங்களை வாரி வழங்குவது என்பது மக்களின் கண்களில் மண்ணைத் தூவி, மது வியாபாரத்தைத் தனியாரிடம் தாரைவார்க்கும் துரோகச் செயலாகும்.

FL-2 மதுபான உரிம விவரங்களை தவெக அரசு மறைப்பது ஏன்?

தமிழகத்தில் மூடப்பட்ட 717 டாஸ்மாக் கடைகளின் முகவரிகளை மறைத்த முதல்வர் திரு. @TVKVijayHQ அவர்களின் அரசு, இப்போது புதிய FL-2 (தனியார் கிளப்) மதுபான உரிமங்களின் விவரங்களையும் தர மறுப்பது RTI மூலம் அம்பலமாகியுள்ளது. இதன் மூலம்… pic.twitter.com/cxGqtyWHLd
— Nainar Nagenthran (@NainarBJP) July 31, 2026

FL-2 உரிமங்களை விவரங்களை வெளியிடுங்க

தகவல் அறியும் உரிமைச் சட்ட விதிகளுக்குப் புறம்பாக, உரிய தகவல்களைத் தராமல் மாவட்ட வாரியாக அலைக்கழிக்கும் அதிகாரிகளின் இச்செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. தவெக அரசு மக்கள் நலனுக்கானது என்றால், 2026 ஜனவரிக்குப் பிறகு வழங்கப்பட்ட மற்றும் புதுப்பிக்கப்பட்ட அனைத்து FL-2 உரிமங்களின் விவரங்களையும் உடனடியாகப் பொதுவெளியில் வெளியிட வேண்டும் என வலியுறுத்துவதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks