தமிழ்நாட்டில் எல் நினோ வரும் அக்டோபர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்படும் 12 மாவட்டங்கள் என்பதைக் காணலாம்.

இதுதொடர்பாக நேற்று வேளாண் பட்ஜெட் முடிந்ததும் அந்த துறை செயலாளரான சங்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “எல் நினோவால் தமிழ்நாட்டில் 12 மாவட்டங்கள் பாதிக்கப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது கடலின் வெப்பநிலை நடுநிலையாக கடந்த வாரம் வரை இருந்தது. வரும் காலங்களில் அவை நேர்மறையாக மாறும் என எதிர்பார்க்கிறோம். இதனால் வடகிழக்கு பருவமழை வழக்கமான அளவில் இருக்கும் என எதிர்பார்க்கிறோம் இதனால் மழை பெய்து காவிரியில் தண்ணீர் வந்தால் எல்லா பிரச்னையும் தீரும் என்று நம்புகிறோம்” என கூறினார்.

முன்னதாக வேளாண் அமைச்சர் வினோத் பட்ஜெட் உரையில், இந்த சூப்பர் எல்.நினோ பற்றி பேசினார். அப்போது அதிக தாக்கம் ஏற்படும் மாவட்டங்களில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தால் தயாரிக்கப்பட்டுள்ள மாவட்ட வேளாண்மை இடை ஏற்பாட்டு திட்டம் மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பப்பட்டு அவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள நடவடிக்கைகளை ஒருங்கிணைந்து செயல்படுத்த அனைத்து ஏற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என கூறினார். மேலும் அமைச்சர் மரிய வில்சன் பொது பட்ஜெட்டை தாக்கல் செய்யும்போது சூப்பர் எல்.நினோ பாதிப்புகளை சமாளிக்க ரூ.340 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக கூறினார்.

சூப்பர் எல்.நினோ என்றால் என்ன?

எல் நினோ என்பது வழக்கத்திற்கு மாறாக மத்திய மற்றும் கிழக்கு வெப்பமண்டல பசிபிக் பெருங்கடலில்
வெப்பமான கடல் மேற்பரப்பு வெப்பநிலைகளைக் கொண்ட ஒரு இயற்கையான காலநிலை மாற்றமாகும். இது உலகளாவிய அளவில் வானிலை, விவசாயம் மற்றும் கடல்சார் சூழல் அமைப்புகளைச் சீர்குலைக்கிறது. இதன்காரணமாக வறட்சி, கனமழை, வெப்பநிலை உயர்வு போன்ற வானிலை தாக்கங்கள் வழக்கத்திற்கு மாறாக இருக்கும்.

பாதிக்கப்படும் மாவட்டங்கள் என்னென்ன?

தமிழ்நாட்டிலும் இதன் தாக்கம் கொஞ்சம் கொஞ்சமாக எதிரொலிக்க தொடங்கியுள்ளது. இதில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர், நாமக்கல், திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம், திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்கள் வறட்சியால் நேரடியாக பாதிக்கப்படலாம் என கணிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை 40 சதவிகிதம் குறைவாக பெய்திருக்கும் நிலையில் அக்டோபர் இரண்டாவது வாரம் வரைஇயல்பை விடக் கடுமையான வெப்பத்தின் தாக்கம் மற்றும் வறண்ட காற்று தமிழ்நாட்டில் வீச வாய்ப்புள்ளது என சொல்லப்பட்டுள்ளது. இதனால் குறுவை சாகுபடி, நெல், கரும்பு, பருத்தி பயிர்களின் விளைச்சல் பாதிக்கப்படும் என கூறப்படுகிறது, அதேசமயம் சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் அதிதீவிர கனமழை மற்றும் வெள்ள அபாயம் ஏற்படலாம் எனவும் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Source: Read Full Article