தொடரும் மாணவர்கள் போரட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதன் காரணமாக பல லட்சம் மாணவர்கள் பாதிக்கப்பட்ட நிலையில், டெல்லியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி சார்பாக மிகப்பெரிய அளவில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டம் நாடு முழுவதும் பல இடங்களுக்கும் பரவியது. இதனையடுத்து நீட் தேர்வு வினாத்தாள் கசிவிற்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகினார். இதனையடுத்து நீட் தேர்வு உள்ளிட்ட வினாத்தாள்கள் கசிவிடப்படும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில் நாடாளுமன்றத்தில் சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது.

இதனையடுத்து போராட்டம் டெல்லியில் ஓய்ந்த நிலையில் ஜார்கண்ட் மாநிலத்தில் அரசு பணிகள் தேர்வாணயத்தில் வினாத்தாள்கள் கசிந்ததாக கூறி மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முடிவை எட்டாத மாணவர்கள் போராட்டம்

அந்த வகையில், ஜார்க்கண்ட் அரசுப் பணிகள் தேர்வாணையத்தின் தேர்வின் வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தியும், முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரியும் மாணவர்கள் ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஜூலை 25 ஆம் தேதி முதல் இந்த போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், அரசுக்கும் மாணவர்கள் அமைப்பிற்கும் இடையே நடைபெற்ற கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையின் போது வினாத்தாள் கசிவான அரசு பணியாளர் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் இந்த பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படாத காரணத்தால் தோல்வியை நோக்கி பேச்சுவார்த்தை முடிவு சென்றது.

சிபிஐ விசாரணை வேண்டும்- மாணவர்கள்

ஆனால் மாணவர்களின் கோரிக்கை 98% நிறைவேற்றப்பட்டுள்ளதாக அரசு தரப்பு தெரிவித்தது. இதனை ஏற்றுக்கொள்ளாத மாணவர்கள் அமைப்பு 13 தேர்வுகளில் 3 தேர்வகளை மட்டும் ரத்து செய்வதாக அரசு அறிவித்துள்ளது. இதனை ஏற்றுக்கொள்ள முடியாத என கூறினார். எனவே தேர்வு முறைகேடுகள் தொடர்பாக விசாரணை நடத்த சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். எனவே அரசின் செயலை கண்டித்தும், தங்களது கோரிக்கை வலியுறுத்தியும் இன்று சட்டமன்றத்தை முற்றுகையிடப்போவதாக மாணவர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த போராட்டத்தில் கட்சி சார்பின்றி மாணவர்கள் அனைவரும் கலந்து கொண்டு தங்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

சட்டமன்ற முற்றுகை போராட்டம்

தங்கள் போராட்டம் அமைதியானதாகவும் ஜனநாயக ரீதியிலானதாகவும் இருக்கும் என்று போராட்டக்காரர்கள் தெரிவித்தனர். மாணவர்களின் இந்த போராட்டத்திற்கு எந்தவொரு அரசியல் கட்சி மற்றும் அமைப்பின் கொடியும் இன்றி நடைபெறும் போராட்டத்திற்குப் பெற்றோர்கள் தார்மீக ஆதரவை வழங்குமாறும் மாணவர்கள் அமைப்பு கேட்டுகொண்டுள்ளது. இன்றைய போராட்டதின் காரணமாக ஜார்கண்ட் தலைமைசெயலகம் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு அதிகரிகப்பட்டுள்ளது.

Source: Read Full Article