Social Media: 2 மணி நேரம் தான் டைம்..! சமூக வலைதளங்களுக்கு கெடு விதித்த மத்திய அரசு - காரணம் என்ன?

Social Media: 2 மணி நேரம் தான் டைம்..! சமூக வலைதளங்களுக்கு கெடு விதித்த மத்திய அரசு  - காரணம் என்ன?
News Image

Social Media: சர்ச்சைக்குரிய வீடியோக்களை 2 மணி நேரத்திற்குள் நீக்க வேண்டும் என சமூக வலைதளங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

சமூக வலைதளங்களுக்கான விதியை கடுமையாக்கிய அரசு

நீட் தேர்வு குளறுபடிகள் தொடர்பாக இளைஞர்கள் போராட்டத்தை முன்னெடுத்த போது, இன்ஸ்டாகிராமில் பிரதமர் மோடியின் வெளியிட்ட வீடியோ நீக்கப்பட்ட சர்ச்சையனாது. இதையடுத்து மெட்டா குழுமத்தின் உயர்மட்ட அதிகாரிகள் அரசு தரப்பில் நேரில் வரவழைக்கப்பட்டு மன்னிப்பு கோர செய்தனர். இந்நிலையில், சமூக ஊடகங்களுக்கான விதிகளை கடுமையாக்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பான அறிக்கையின்படி, சமூக வலைதளங்கள் இணையத்தில் உள்ள உணர்திறன் மிக்க உள்ளடக்கங்களை (சென்சிடிவ் கன்டென்ட்களை) நீக்குவதற்கு வழங்கப்பட்ட கால அவகாசத்தை, முன்னர் இருந்த 24 மணி நேரத்திலிருந்து தற்போது இரண்டு மணி நேரமாக மத்திய அரசு குறைத்துள்ளது.

நெறிமுறைகளில் மாற்றம்..!

டீப்ஃபேக்குகள் மற்றும் பிற செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட கன்டென்ட் உள்ளிட்ட, செயற்கையாக உருவாக்கப்பட்ட தகவல்களால் (SGI) ஏற்படும் தீங்குகளைக் கையாள்வதற்கான ஒழுங்குமுறை கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில், தகவல் தொழில்நுட்பம் (இடைத்தரகர் வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் ஊடக நெறிமுறைகள் குறியீடு) விதிகள், 2021-இல் பிப்ரவரி 10, 2026 அன்று செய்யப்பட்ட திருத்தங்களின் ஒரு பகுதியாக இந்த மாற்றம் அமைந்துள்ளது.

காலக்கெடு குறைப்பு..!

இந்தத் திருத்தங்கள், அனைத்துப் பிரிவுகளிலும் ஒருங்கிணைந்த நடவடிக்கைக்கான காலக்கெடுவையும் கடுமையாக்குகின்றன. அரசாங்கத்திடமிருந்து முறையான, நியாயமான அறிவிப்பு அல்லது நீதிமன்ற உத்தரவுகளைப் பெற்றவுடன், சட்டவிரோதத் தகவல்களை அகற்றுவதற்கான காலக்கெடு 36 மணிநேரத்திலிருந்து மூன்று மணிநேரமாகக் குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல், குறை தீர்க்கும் காலக்கெடு 72 மணிநேரத்திலிருந்து 36 மணிநேரமாகக் குறைக்கப்பட்டுள்ளது. அதே சமயம், நிர்வாணம் மற்றும் ஆள்மாறாட்டம் உள்ளிட்ட உணர்வுப்பூர்வமான விஷயங்கள் தொடர்பான புகார்கள் மீது, முன்பு 24 மணிநேரமாக இருந்த நடவடிக்கை, இப்போது இரண்டு மணிநேரத்திற்குள் எடுக்கப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்: CM Vijay: சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?

சமூக வலைதள நிறுவனங்களுக்கு உத்தரவு:

தகவல் தொழில்நுட்ப விதிகளின்படி, இந்தியாவில் 50 லட்சத்திற்கும் அதிகமான பயனர்களைக் கொண்ட முக்கிய சமூக வலைதள நிறுவனங்கள், பாலியல் வன்கொடுமை, குழந்தைப் பாலியல் துஷ்பிரயோகம் அல்லது அது தொடர்பான நடத்தைகளைச் சித்தரிக்கும் உள்ளடக்கத்தையும், முன்னர் அகற்றப்பட்ட உள்ளடக்கத்தைப் பெருமளவில் ஒத்திருக்கும் உள்ளடக்கத்தையும் முன்கூட்டியே கண்டறிவதற்காக, தானியங்கு கருவிகள் அல்லது பிற பொருத்தமான வழிமுறைகள் உள்ளிட்ட தகுந்த தொழில்நுட்ப நடவடிக்கைகளைச் செயல்படுத்த நியாயமான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

தகவல் தொழில்நுட்ப விதிகளின் கீழ் தங்களின் சட்டப்பூர்வ கடமைகளை நிறைவேற்றத் தவறும் நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 79வது பிரிவின் கீழ் கிடைக்கும் பாதுகாப்பை இழக்க நேரிடும் என அரசு எச்சரித்டுள்ளது. மேலும், வழிகாட்டுதல்களை பின்பற்றாதவர்கள் மீது உரிய சட்டங்களின் கீழ் வழக்குத் தொடரப்படவோ அல்லது பிற நடவடிக்கைகள் எடுக்கப்படவோ வழிவகுக்கும் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks