Senthil Balaji: அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது

Senthil Balaji: அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
News Image

Senthil Balaji: வழக்கு பிரச்னைகளில் இருந்து விடுபட டெல்லியின் உதவியை செந்தில் பாலாஜியும், அவரது சகோதரரும் நாட தொடங்கியுள்ளனர்.

திமுக மீது நம்பிக்கையிழந்த செந்தில் பாலாஜி?

அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி மீது, அப்போதைய எதிர்க்கட்சி தலைவரான ஸ்டாலின் அடுக்கடுக்கான ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். ஆனால், திமுகவில் இணைந்த மிகக் குறுகிய காலகட்டத்திலேயே, ஸ்டாலின் தலைமையிலான அரசின் மிக முக்கியமான அதிகார மையமாக செந்தில் பாலாஜி உருவெடுத்தார். ஊழல் வழக்கில் கைதானபோதும் இலாகா இல்லாத அமைச்சராக தொடரை வைத்ததே, அவருக்கான முக்கியத்துவத்தை உணர்த்தும் ஒரு உதாரணமாக குறிப்பிடலாம். ஆனால், ஆட்சி மாற்றத்திற்கு பிறகு உடன் பிறப்புகள் தரப்பிலிருந்து குவிந்த புகார்களால் கரூர் கம்பெனி மீது திமுக தலைமை அதிருப்தியில் உள்ளதாம். இதனை உணர்ந்த கையோடு, தனது பிரச்னைகளை இனி தாம் தான் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்ற முடிவுக்கு செந்தில் பாலாஜி வந்துள்ளாராம்.

செந்தில் பாலாஜி மீது குவிந்துள்ள வழக்குகள்:

போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக மோசடி, டாஸ்மாக் மதுபான கொள்முதல் முறைகேடு, தவெக ஆட்சியை கவிழ்க்க குதிரை பேரம் என பல வழக்குகள் செந்தில் பாலாஜிக்கு எதிராக மலைபோல் எழுந்து நிற்கின்றன. பார்களை முறைகேடாக நடத்த அனுமதி, சோலார் மின்சார இணைப்பு வழங்குவதில் முறைகேடு, நிலக்கரி கொள்முதலில் ஊழல் என பல திமுக வரலாற்றில் எந்தவொரு மூத்த நிர்வாகி மீதும் இல்லாத அளவில் அளவிற்கு பல புகார்கள் குவிந்து கிடக்கின்றன. இதனால் தான் கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் கூட முழுமையாக விஜய்க்கு எதிராக திரும்பாமல், திமுகவிற்கும் எதிர்வினையாக மாறியது.

கண்டுகொள்ளாத திமுக..!

இந்நிலையில் தான், திமுகவின் தோல்விக்கான காரணங்களை ஆராய அமைக்கப்பட்ட குழுவினரிடம், செந்தில் பாலாஜி மற்றும் கரூர் கம்பெனி தொடர்பாக மூத்த உடன்பிறப்புகள் ஏராளமான குறைகளை கொட்டி தீர்த்துள்ளனர். இதனை அறிந்த திமுக தலைமைக்கு, செந்தில் பாலாஜி மீதிருந்த மதிப்பு சரிந்துள்ளதாம். இதனால் தான் தவெக எம்.எல்.ஏக்களிடம் குதிரை பேரம் நடத்தியதாக செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கை, திமுக பெரியதாக கண்டுகொள்ளவில்லையாம்.

இதையும் படியுங்கள்: TVK Vijay: பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?

டெல்லிக்கு தூவிடும் செந்தில் பாலாஜி..!

அறிவாலயத்தின் பல்ஸை உணர்ந்த செந்தில் பாலாஜி, இனி யாரையும் நம்பாமல் தன்னை தானே காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற முடிவுக்கு வந்துவிட்டாராம். அதன்படி, மத்திய விசாரணை அமைப்புகளில் உள்ள வழக்குகளை தீர்க்க டெல்லி தலைவர்களிடம் பேச்சுவார்த்தயை தொடங்கியுள்ளாராம். அதேநேரம், திமுக தலைமையில் இருந்து வரும் அழைப்புகளை முடிந்தவரை தவிர்த்து வருகிறாராம். சென்னையில் இருந்தாலும் கூட ஸ்டாலின் மற்றும் உதயநிதியை சந்திப்பதை பெரிய அளவில் தவிர்ப்பதோடு, சட்டப்பேரவையிலும் கட்சிக்காரர்களுடன் பெரிய அளவில் பேசிக்கொள்வதும் இல்லையாம். இதனால் கிட்டத்தட்ட திமுகவின் தொடர்பு எல்லைக்கு வெளியே தான் பெரும்பாலான நாட்களில் அவர் உள்ளாராம். இதனால் அவர் தொடர்ந்து திமுகவில் இருப்பாரா அல்லது தன்னை காப்பாற்றிக் கொள்வதற்காக மத்தியில் ஆளும் கட்சியை நோக்கி நகர்வாரா? என்ற சந்தேகம் அறிவாலயத்திற்கே எழுந்துள்ளதாம்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks