Sekar Babu: திருக்கோயில் அறங்காவலர் குழுவினர் போலீசாருடன் வாக்குவாதமத்தில் ஈடுபட்ட நிலையில், அரை மணி நேரம் கழித்து சேகர் பாபு வாகனம் அனுமதிக்கப்பட்டது.

தடுத்து நிறுத்தப்பட்ட சேகர் பாபு கார்..!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் முருகப்பெருமானின் பிரசித்தி பெற்ற ஆறுபடை வீடுகளில் ஐந்தாம் படை திருக்கோயிலாகும். இந்த திருக்கோயிலில் ஆடி கிருத்திகை தெப்பத் திருவிழா நிகழ்ச்சி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்று ஒவ்வொரு ஆண்டும் சாமி தரிசனம் செய்யும் முன்னாள் இந்து சமய அறநிலை துறை அமைச்சரும் தற்போதைய சட்டமன்ற உறுப்பினருமான பி.கே சேகர்பாபு,நேற்றும் தனது குடும்பத்துடன் சாமி தரிசனய் செய்ய வருகை தந்திருந்தார். அப்போது மலைக்கோவில் அடிவாரத்தில் அவரது இரண்டு சொகுசு கார்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் போலீஸ் அதிகாரிகளுக்கும் முன்னாள் அமைச்சர் சேகர்பாபுவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அறங்காவல் குழுவினர் வாக்குவாதம்:

இதனிடையே சேகர் பாபு வருகை தொடர்பான தகவலறிந்து அவரை வரவேற்க வந்த திருக்கோயில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் காவல்துறை அதிகாரிகளிடத்தில் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, அவர் முன்னாள் அமைச்சர் மட்டுமல்ல தற்போதைய சட்டமன்ற உறுப்பினரும் ஆவார் . அவரது காரை விடுங்கள் என்று கேட்டுக் கொண்டனர் ஆனாலும், சேகர் பாபுவின் கார் மேலே வருவதற்கு அனுமதி இல்லை. அதற்கான சிறப்பு அனுமதி என்னிடம் எதுவும் வழங்கப்படவில்லை. ஆகையால் அவரது காரை மேலே அனுமதிக்க முடியாது, மலைக்கோவிலில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்று போலீசார் தெரிவித்ததால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை காரை அமர்ந்தபடி பார்த்துக்கொண்டிருந்த சேகர்பாபு, தனக்கா இப்படி ஒரு நிலை என மிகவும் ஆச்சரியத்துடன் ஏமாற்றத்துடனும் முகத்தை கொண்டிருந்தார்.

அனுமதிக்கப்பட்ட சேகர் பாபுவின் கார்

போலீஸ் அதிகாரிகளுக்கும் அறங்காவலர் குழு உறுப்பினர்களுக்கும் 30 நிமிடத்திற்கு மேலாக முன்னாள் அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது . இதனைத் தொடர்ந்து தொலைபேசி வாயிலாக திருக்கோயில் அதிகாரி தகவல் தெரிவித்த பிறகு முன்னாள் இந்து சமய அற நிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு கார் மலை கோவிலுக்கு செல்லலாம் என காவல்துறையினர் அனுமதித்தனர். இதையடுத்து அவர் குடும்பத்துடன் மேலே சென்று சாமி தரிசனம் செய்து வீடு திரும்பினார்.

ஆட்சி மாறியதும்.. காட்சி மாற்றம்..

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக இருந்த கடந்த 5 ஆண்டுகளிலும், சேகர்பாபு அனைத்து கோயில்களிலும் விவிஐபி மரியாதையுடன் சாமி தரிசனம் செய்து வந்தார். திமுக ஆட்சியின் மிக முக்கிய புள்ளியாகவும் இருந்ததால், மாநில அளவில் மிகப்பெரிய செல்வாக்கு கொண்டுவராக விளங்கினார். ஆனால், ஆட்சி அதிகாரம் பறிபோனதும் ஒட்டுமொத்த சூழலும் மாறியுள்ளது. சேகர்பாபுவின் காரையே போலீசார் மறித்துள்ளனர் என கூறி, இதுதொடர்பான வீடியோக்களை நெட்டிசன்கள் தீவிரமாக பரப்பி வருகின்றனர்.

Source: Read Full Article