ஆகஸ்ட்டில் விடுமுறை

விடுமுறை என்றாலே அனைவருக்கும் கொண்டாட்டம் தான், அந்த வகையில் எப்போது விடுமுறை கிடைக்கும் வெளியூர்களுக்கு சுற்றுலா செல்லலாமா.? அல்லது உறவினர்கள் வீட்டிற்கு செல்லலாமா என திட்டமிடுபவர்களுக்கு குஷியான மாதமாக ஆகஸ்ட் மாதம் இருந்து வருகிறது. அந்த வகையில் சுதந்திர தினம், வரலட்சுமி விரதம் என அடுத்தடுத்து விடுமுறை கிடைத்தது. இது மட்டுமில்லாமல் ஒரு சில மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறையும் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் மாணவர்கள் மட்டுமில்லாமல் அரசு ஊழியர்களும் குஷியில் இருந்து வந்தனர்.

ஆகஸ்ட் 26ஆம் தேதி- மிலாது நபி விடுமுறை

இந்த நிலையில் அடுத்த எப்போது விடுமுறை வரும் என காத்திருந்த மாணவர்களக்கு மட்டுமில்லாமல் அரசு ஊழியர்களுக்கும் ஜாலியான அறிவிப்பாக வருகிற ஆகஸ்ட் 26 ஆம் தேதி தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மிலாது நபி பண்டிகையையொட்டி தமிழக அரசு சார்பாக அரசு ஒவ்வொரு வருடமும் விடுமுறையானது அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து வருகிற புதன் கிழமை அரசு விடுமுறையாக உள்ளதால் மாணவர்கள் குஷியில் உள்ளனர். இறைத்தூதர் நபிகள் நாயகம் அவர்களின் பிறந்த நாளை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் மிலாது நபி தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்நாளை முன்னிட்டு பல்வேறு மாநிலங்களில் அரசு விடுமுறை அறிவிக்கப்படுவது வழக்கம்.

டாஸ்மாக் கடைக்கு விடுமுறை

பள்ளிவாசல்கள் மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் சிறப்பு பிரார்த்தனைகள், மார்க்கச் சொற்பொழிவுகள் மற்றும் சமுதாய நல நிகழ்ச்சிகள் நடைபெறும். எனவே வருகிற புதன் கிழமை அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போல தமிழகம் முழுவதும் அன்றைய தினம் டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசின் உத்தரவை மீறி டாஸ்மாக் கடைகளை திறந்து மது விற்பனை செய்தால் சட்ட ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Source: Read Full Article