ஒவ்வொரு திட்டத்துக்கும் கூட்டு மதிப்பு நிர்ணய முடிவு

தமிழகத்தில் அடுக்குமாடி திட்டங்களில் வீடு விற்பனையை , கூட்டு மதிப்பு அடிப்படையில் தான் பதிவு செய்ய வேண்டும் என 2023 டிசம்பர் 1 - ல் அரசு உத்தரவிட்டது. இதன் படி கட்டடங்களுக்கு , அதன் வகை வசதிகள் அடிப்படையில் கூட்டு மதிப்பு நிர்ணயிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதில் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டதால் தெரு வாரியாக கட்டடங்களுக்கு கூட்டு மதிப்பு நிர்ணயிக்கப்பட்டது. இதுவே தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் , தெரு மதிப்பு என்பதை மாற்றி , ஒவ்வொரு திட்டத்துக்கும் , அதன் வகைப்பாடு அடிப்படையிலும் , உள்ளாட்சிகள் நிலை அடிப்படையிலும் , கூட்டு மதிப்பு நிர்ணயிக்க முடிவு செய்யப்பட்டது.

இது தொடர்பாக, பதிவுத்துறை தலைவர் அருண் சுந்தர் தயாளன் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது ;

அடுக்குமாடி குடியிருப்புகளில் கட்டட மதிப்பு , பொதுப்பணித்துறை மதிப்பு அடிப்படையில் , கூட்டு மதிப்பு நிர்ணயிக்க வேண்டும். இதில் உள்ளாட்சிகள் நிலை , வீடு வாங்குவோரின் வருவாய் வகைப்பாடு அடிப்படையில் வழிகாட்டுதல்களை கடைபிடிக்க வேண்டும்.

இதன்படி , குறைந்த வருவாய் , நடுத்தர வருவாய் பிரிவினருக்கான வீடுகளில், சென்னை மற்றும் இதர மாநகராட்சிகளில், ஒரு சதுரடி 2,180 ரூபாய், நகராட்சிகளில் ஒரு சதுரடி, 1,920 ரூபாய், பிற பகுதிகளில், 1,840 ரூபாய் என்ற அடிப்படை மதிப்பை கருத்தில் வைத்து , கூட்டு மதிப்பு நிர்ணயிக்க வேண்டும்.

உயர் வருவாய் பிரிவு, எலைட், சொகுசு வகை வீடுகளுக்கு , சென்னை உள்ளிட்ட மாநகராட்சிகளில் , ஒரு சதுரடி, 3,230 ரூபாய், நகராட்சிகளில் , ஒரு சதுரடிக்கு 2,840 ரூபாய், பிற பகுதிகளில் ஒரு சதுரடிக்கு , 2,710 ரூபாய் நிர்ணயிக்க வேண்டும்.

கட்டடத்தின் மதிப்பில் ஆண்டுக்கு ஒரு சதவீதம், தேய்மானமாக கணக்கீடு செய்யலாம்.இதன் அடிப்படையில் , மையக்குழு வழிகாட்டுதலின்படி, மாவட்டப் பதிவாளர்கள் கூட்டு மதிப்புகளை நிர்ணயிக்கலாம். அந்த மதிப்பை ஏற்பதில், மாறுபட்ட கருத்து இருந்தால் , பதிவுத் துறை டி.ஐ.ஜி.,யிடம் மேல்முறையீடு செய்யலாம். ஏற்கனவே டி.ஐ.ஜி நிர்ணயித்த கூட்டு மதிப்பு தொடர்பான , மேல்முறையீடுகள் அனைத்தையும், கூட்டு புலனாய்வு கமிட்டிக்கு அனுப்ப வேண்டும் என இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Source: Read Full Article