புதுச்சேரியை உலுக்கும் 'RTI' குண்டு: 5 ஆண்டுகளில் மது வருமானம் ரூ.1,733 கோடியாக அதிகரிப்பு!

புதுச்சேரியை உலுக்கும் 'RTI' குண்டு: 5 ஆண்டுகளில் மது வருமானம் ரூ.1,733 கோடியாக அதிகரிப்பு!
News Image

புதுச்சேரி: புதுச்சேரி அரசின் கலால் துறைக்கு 2025–26 நிதியாண்டில் 1,733.5 கோடி வருவாய் கிடைத்துள்ளதாகவும், கடந்த ஐந்து ஆண்டுகளில் கலால் வருவாய் ரூ.637 கோடி அதிகரித்துள்ளதாகவும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (ஆர்டிஐ) மூலம் பெறப்பட்ட தகவலில் தெரியவந்துள்ளது.

புதுச்சேரி அரசின் கலால் துறைக்கு 2025-26-ம் நிதியாண்டில் மட்டும் ரூ.1,733.5 கோடி வருவாய் கிடைத்து உள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் கலால் வருவாய் ரூ.637 கோடி வரை உயர்ந்து இருப்பது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) மூலம் தெரியவந்து உள்ளது.

இதுகுறித்த விரிவான விவரம் வருமாறு:

சமூக ஆர்வலர் மனு

புதுச்சேரி குயவர்பாளையத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் அசோக் ராஜா என்பவர், கலால் துறையிடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பல்வேறு கேள்விகளை முன்வைத்து மனு தாக்கல் செய்து இருந்தார். அதில், “கடந்த 2021-ம் ஆண்டு முதல் 2026-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் புதுச்சேரியில் எத்தனை ‘ரெஸ்டோ பார்களுக்கு’ அனுமதி வழங்கப்பட்டு உள்ளது? கலால் துறைக்கு கிடைத்த வருவாய் எவ்வளவு? புதிதாக மொத்த மதுபான விற்பனை உரிமங்கள் வழங்கப்பட்டதா? எப்.எல்.2 உரிமத்துக்கான ஆண்டு கட்டணம் மற்றும் அவற்றின் செயல்பாட்டு நேரங்கள் என்ன?” என்பது உள்ளிட்ட பல்வேறு விவரங்களை கேட்டு இருந்தார்.

கலால் துறை விளக்கம்

இதற்கு கலால் துறையின் பொதுத் தகவல் தொடர்பு அலுவலர் சத்யநாராயணன் அளித்துள்ள அதிகாரப்பூர்வ பதிலில் கூறி இருப்பதாவது:–

புதுச்சேரி கலால் சட்ட விதிகளின்படி ‘ரெஸ்டோ பார்’ என்ற பெயரில் தனியாக எந்தவொரு உரிமமும் வழங்கப்படுவது இல்லை. உணவு சேவை வழங்கும் ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களுக்கு சுற்றுலாப் பிரிவின் கீழ் எப்.எல்.2 (FL-2) உரிமம் வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி, கடந்த 2021 முதல் 2026 வரையிலான காலகட்டத்தில் மொத்தம் 194 எப்.எல்.2 உரிமங்கள் புதிதாக வழங்கப்பட்டு உள்ளன. அதேநேரத்தில், இந்த காலகட்டத்தில் புதிய மொத்த மதுபான விற்பனை உரிமங்கள் (ஹோல்சேல்) எதுவும் வழங்கப்படவில்லை.

ரூ.637 கோடி உயர்வு

கலால் துறைக்கு கிடைத்துள்ள ஆண்டு வருவாய் விவரம் வருமாறு:

2021–22 நிதியாண்டு – ரூ.1,096 கோடி

2022–23 நிதியாண்டு – ரூ.1,402.61 கோடி

2023–24 நிதியாண்டு – ரூ.1,487.66 கோடி

2024–25 நிதியாண்டு – ரூ.1,538.81 கோடி

2025–26 நிதியாண்டு – ரூ.1,733.50 கோடி

இதன்படி, கடந்த 2021-22-ம் நிதியாண்டில் ரூ.1,096 கோடியாக இருந்த கலால் துறை வருவாய், 2025-26-ம் நிதியாண்டில் ரூ.1,733.50 கோடியாக அதிகரித்து உள்ளது. இதன் மூலம் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் கலால் துறையின் வருவாய் ரூ.637 கோடி அளவுக்கு உயர்ந்து இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

தொலைவு கட்டுப்பாடு இல்லை

மேலும், பள்ளிக்கூடங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் இயங்கும் ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களுக்கு சுற்றுலாப் பிரிவின் கீழ் வழங்கப்படும் எப்.எல்.2 உரிமங்களுக்கு, வழக்கமான தொலைவு தொடர்பான கட்டுப்பாடுகள் பொருந்தாது.

எப்.எல்.2 உரிமத்துக்கான ஆண்டு கட்டணமாக ரூ.7 லட்சம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்த உரிமம் பெற்ற ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களில் காலை 8 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை மதுபானங்கள் வழங்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

புதுச்சேரியில் சுற்றுலாத்துறை வளர்ச்சியைக் காரணம் காட்டி மதுபானக் கடைகள் மற்றும் உணவக பார்களுக்கு அதிகளவில் உரிமங்கள் வழங்கப்பட்டு வருவதும், இதன் மூலம் அரசுக்கு நூற்றுக்கணக்கான கோடிகள் வருவாய் பெருகி வருவதும் இந்த ஆர்டிஐ தகவல்கள் மூலம் தெரியவந்து உள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks