சுற்றுலாத்துறை அறிவிப்புகள்

தமிழக சட்டமன்றத்தில் இன்று சுற்றுலாத்துறை மானிய கோரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இப்போது சுற்றுலாத்துறை சார்பில் பல்வேறு அறிவிப்புகளை அமைச்சர் ராஜேஷ்குமார் வெளியிட்டார்.

கன்னியாகுமரி, திருப்பூர், கிருஷ்ணகிரி மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள அணைப்பகுதிகளில் ரூ.48 கோடி மதிப்பீட்டில் சுற்றுலா வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

சுற்றுலாத் தலங்களை மேம்படுத்த விரிவான திட்ட அறிக்கைகள் ரூ.30 கோடி மதிப்பீட்டில் தயாரிக்கப்படும்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களில் ரூ.18 கோடி மதிப்பீட்டில் சுற்றுலா வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

சொகுசு கப்பல் சுற்றுலா மற்றும் சொகுசு படகு சுற்றுலாவிற்கான சாத்தியக்கூறு அறிக்கைகள் ரூ.2.00 கோடிமதிப்பீட்டில் தயாரிக்கப்படும்.

உலகளவில் சொகுசு கப்பல் சுற்றுலா மற்றும் சொகுசு படகு சுற்றுலா போன்றவை சுற்றுலாப் பயணிகளை பெரிதும் கவர்ந்து வருகின்றன. சுற்றுலாப் பயணிகளுக்கு ஆழ்ந்த சுற்றுலா அனுபவங்களை வழங்கும் வகையில், கடலோர சொகுசு கப்பல் சுற்றுலா (Cruise Tourism) மற்றும் சொகுசு படகு (Ferry Tourism) சுற்றுலாத் திட்டம் ஆகியனவற்றை சென்னை-கோவளம், பூம்புகார்- தரங்கம்பாடி -நாகப்பட்டினம், இராமேஸ்வரம் - தூத்துக்குடி -கன்னியாகுமரி போன்ற வழித்தடங்களில் அறிமுகப்படுத்த சாத்தியக் கூறு அறிக்கைகள் ரூ.2.00 கோடிமதிப்பீட்டில் தயாரிக்கப்படும்.

சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பினை உறுதிசெய்யும் வகையில் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ரூ.2.00 கோடி மதிப்பீட்டில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்.

கிராமிய சுற்றுலாத் திட்டம் ரூ.60.00 இலட்சம் மதிப்பீட்டில் அறிமுகப்படுத்தப்படும்.

தமிழ்நாட்டில் கிராமிய சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கிலும், கிராமத்தின் பொருளாதார வளர்ச்சி, கலாச்சாரப் பாதுகாப்பு, நகர-கிராம இணைப்பு, கைவினைப் பொருட்கள் விற்பனை மற்றும் உள்நாட்டு உணவு வகைகளின் சிறப்புகளை வெளிக்கொணரும் வகையில் ரூ.60.00 இலட்சம் மதிப்பீட்டில் "கிராமிய சுற்றுலாத் திட்டம்" அறிமுகப்படுத்தப்படும்.

தமிழ்நாட்டின் பல்வேறு புகழ்பெற்ற திரைப்பட சுற்றுலா படப்பிடிப்புத் தளங்களில், வாகனம் நிறுத்துமிடம் மற்றும் அடிப்படை வசதிகள் பொது-தனியார் பங்களிப்புடன் ஏற்படுத்தப்படும்.

தமிழ்நாட்டின் முக்கிய சுற்றுலாத் தலங்களான திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மற்றும் நீலகிரி மாவட்டம் ஊட்டியில் கம்பிவட ஊர்தி (Rope Car) அமைத்திட சாத்தியக்கூறு அறிக்கை பெறப்பட்டு திட்டத்தை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் முக்கிய சுற்றுலாத் தலங்கள் மற்றும் கும்பக்கரை அருவியிலிருந்து வெள்ளகவி வட்டக்கானல் வழியாக கொடைக்கானல் பேருந்து நிலையம் வரையிலும் மற்றும் நீலகிரி மாவட்டம், ஊட்டியில் அரசு மருத்துவமனை, இரயில் நிலையம் மற்றும் முக்கிய சுற்றுலாத் தலங்களை கம்பிவட ஊர்தி வசதி மூலம் இணைப்பது தொடர்பான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. சாத்தியக்கூறு அறிக்கை பெறப்பட்டவுடன் திட்டத்தை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் படகு இல்லங்களில் உள்ள இயந்திரப் படகுகள், மின்படகுகளாக ரூ.17.82 கோடி மதிப்பீட்டில் படிப்படியாக மாற்றி அமைக்கப்படும்.

Source: Read Full Article