Property Registration : நிலம், வீடு பத்திரப்பதிவு செய்ய போறீங்களா.? காத்திருந்த மக்களுக்கு சூப்பர் செய்தி சொன்ன பதிவுத்துறை

Property Registration : நிலம், வீடு பத்திரப்பதிவு செய்ய போறீங்களா.? காத்திருந்த மக்களுக்கு சூப்பர் செய்தி சொன்ன பதிவுத்துறை
News Image

சுப முகூர்த்த நாளில் பத்திர பதிவு

சொந்தமாக நிலம் வாங்க வேண்டும், வீடு வாங்க வேண்டும் என்பது பலரின் கனவாக இருக்கும். அந்த வகையில் சிறுக சிறுக சேமித்த பணத்தில் வீடுகள் வாங்குவார்கள். அந்த வகையில் பத்திர பதிவு செய்யும் போது பல விதிமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் பத்திர பதிவு செய்ய முன் கூட்டியே டோக்கன்கள் வாங்க வேண்டும். இல்லையென்றால் பத்திர பதிவு செய்ய இயலாது. எனவே பத்திர பதிவு செய்வதற்கு முன்னதாக எந்த தேதியில் முன்பதிவு செய்யப்போகிறோம் என பதிவுத்துறையிடம் டோக்கன் பெற வேண்டும். அந்த வகையில் இந்த பத்திர பதிவு கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில், சுப முகூர்த்த நாட்களில் ஏராளமானோர் தங்கள் வீடு அல்லது நிலத்தை பதிவு செய்ய திட்டமிடுவார்கள்.

ஆவனி சுபமுகூர்த்த நாள்

ஆனால் அன்றைய தினம் அதிகமான கூட்டம் இருப்பதால் பத்திர பதிவு செய்ய டோக்கன் கிடைக்காது. எனவே சிறுக சிறுக சேமித்த பணத்தில் நிலமோ அல்லது வீடோ வாங்குபவர்கள் சுப முகூர்த்த நாளில் பத்திர பதிவு செய்ய முடியாமல் வேதனை அடைவார்கள். இந்த நிலையில், சுப முகூர்த்த நாளில் பத்திர பதிவு செய்பவர்களுக்கு வசதியாக கூடுதல் டோக்கன்கள் வழங்கப்படவுள்ளது. இது தொடர்பாக பதிவுத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஆவணி மாதத்தில் வரும் சுபமுகூர்த்த தினமான 31.08.2026 அன்று அதிகளவில் பத்திரப் பதிவுகள் நிகழும் என்பதால் கூடுதலாக முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யுமாறு பல்வேறு தரப்பு பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன.

கூடுதல் டோக்கன்- பதிவுத்துறை அறிவிப்பு

எனவே, ஆவணி மாதத்தில் வரும் சுபமுகூர்த்த தினமான 31.08.2026 அன்று ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 முன்பதிவு வில்லைகளும், இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200-க்கு பதிலாக 300 முன்பதிவு வில்லைகளும், அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 சாதாரண முன்பதிவு வில்லைகளோடு ஏற்கெனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு வில்லைகள் கூடுதலாக 4 தட்கல் முன்பதிவு வில்லைகளும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks