Parandur Airport: பரந்தூர் இனி கிடையாது.. அப்போ சென்னை புது ஏர்போர்ட் இந்த 3 ஏரியாவுல ஒரு இடத்துலதானா?

Parandur Airport: பரந்தூர் இனி கிடையாது.. அப்போ சென்னை புது ஏர்போர்ட் இந்த 3 ஏரியாவுல ஒரு இடத்துலதானா?
News Image

சென்னையில் பெருகி வரும் மக்கள்தொகை, முதலீடுகளை ஈர்ப்பதை கருத்தில் கொண்டு மத்திய அரசு காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் விமான நிலையம் அமைக்கும் என்று அறிவித்தது. சென்னையின் இரண்டாவது விமான நிலையமாக அமையும் என்று அறிவிக்கப்பட்ட இந்த விமான நிலையத்திற்காக 5 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் வரை கையகப்படுத்தப்பட்டது.

பரந்தூர் விமான நிலையம்:

கடந்த தேர்தல் வாக்குறுதியின்போது தவெக தலைவர் விஜய், தவெக ஆட்சி அமைந்தால் பரந்தூர் விமான நிலையம் அமைக்கப்படாது என்று உத்தரவாதம் அறிவித்திருந்தார். இந்த நிலையில், தேர்தல் வாக்குறுதியின்படி பரந்தூரில் விமான நிலையம் அமைக்கப்படாது என்று முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.

தற்காலிகமாக மீனம்பாக்கம் விமான நிலையத்தை விரிவுபடுத்துவதுடன், புதிய விமான நிலையம் அமைப்பதற்கான இடம் விரைவில் தேர்வு செய்யப்படும் என்றும் அறிவித்துள்ளார். முதலமைச்சர் விஜய்யின் இந்த அறிவிப்பால் தற்போது புதிய விமான நிலையம் எங்கே அமைக்கப்படும்? என்ற கேள்வியும், எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

கடந்த முறை விமான நிலையம் அமைப்பதற்கு பரந்தூருடன் சேர்த்து ஆலோசிக்கப்பட்ட இடங்கள் இதனால் மீண்டும் விமான நிலையம் அமைக்க பரிசீலிக்கப்படலாம் என்று கருதப்படுகிறது. அது எந்தெந்த இடங்கள் என்பதை கீழே காணலாம்.

1. பன்னூர்:

திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள பன்னூர் இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அதிக தொழிற்சாலைகள் நிறைந்த ஸ்ரீபெரும்புதூரில் இருந்து 20 நிமிட தொலைவில் இந்த பன்னூர் உள்ளது. விமான நிலையம் அமைப்பதற்கு குறைந்த பட்சம் 4 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் வரை தேவைப்படும் சூழலில், இந்த பகுதியில் நிலம் கையகப்படுத்த முடியுமா? விவசாய நிலங்கள் இருக்கிறதா? என்ற ஆய்வு மீண்டும் மேற்கொள்ளப்படும் என்று கருதப்படுகிறது.

2. திருப்போரூர்:

செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ள திருப்போரூம் விமான நிலையம் அமைக்க தீவிரமாக ஆய்வு செய்ய்பட்ட இடங்களில் ஒன்றாகும். சென்னையில் இருந்து சுமார் 46.4 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இந்த பகுதியில் விமான நிலையம் அமைப்பதற்கு ஏதுவான நிலங்கள் இருக்கிறதா? விவசாய நிலங்கள் அதிகளவில் இருக்கிறதா? பாதுகாக்கப்பட்ட பகுதிகள் இருக்கிறதா? என்று பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்று கருதப்படுகிறது.

3. படாளம்:

செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ள படாளம் கடந்த முறை பரிசீலிக்கப்பட்டாலும், தொழில்நுட்ப மற்றும் நில அளவீடு ஆகிய காரணங்களால் தவிர்க்கப்பட்டது. சுமார் 2 மணி நேரம் சென்னையில் இருந்து படாளம் வரை செல்வதற்கு நேரம் எடுத்துக்கொள்ளும். கடந்த முறை தவிர்க்கப்பட்ட இந்த இடம் மீண்டும் தற்போது விமான நிலையம் அமைப்பதற்கான பட்டியலில் இடம்பெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

தொழில் வளர்ச்சி, பெருகி வரும் விமானங்கள், விமானங்களை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை ஆகியவற்றின் காரணமாக சென்னைக்கு பெரிய அளவிலான விமான நிலையமும் தேவையான ஒன்றாக உருவெடுத்து வருகிறது.

இந்த சூழலில், ஏற்கனவே பரிசீலிக்கப்பட்ட இடங்களை தவெக அரசு இந்த முறை பரிசீலிக்குமா? அல்லது முற்றிலும் புதிய இடத்தை தேர்வு செய்யுமா? என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks