O Panneer Selvam: திமுக துதிபாடிய ஓபிஎஸ்.. ஆஃப் செய்த செங்கோட்டையன்.. ரவுண்டு கட்டிய தவெக!

O Panneer Selvam: திமுக துதிபாடிய ஓபிஎஸ்.. ஆஃப் செய்த செங்கோட்டையன்.. ரவுண்டு கட்டிய தவெக!
News Image

சட்டசபையில் திமுகவைப் பற்றி புகழ்ந்து பேசிய ஓ.பன்னீர்செல்வத்தை தவெக அமைச்சர்கள் வெளுத்து வாங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

திமுக புகழ் பாடிய ஓபிஎஸ்

தமிழக சட்டப்பேரவை இன்று வழக்கம்போல கூடியது. இதில் பொது பட்ஜெட், வேளாண் பட்ஜெட் மீதான விவாதத்தை முன்னாள் முதலமைச்சர், தற்போதைய திமுக எம்.எல்.ஏ. ஓ.பன்னீர்செல்வம் தொடங்கினார்.

அப்போது, தவெக அரசு ஏற்படுத்திய சூழல் வித்தியாசத்திலும் வித்தியாசமானது. செய்வதை மட்டும் சொல்லுவோம் என அளித்த வாக்குறுதிகளை மறந்து விட்டது. பெயர் மாற்றம் பட்டியல் போல பட்ஜெட் வெளியாகியுள்ளது. இந்த அரசு ஆட்சிப் பொறுப்பேற்றபின் அரங்கேறிய காட்சிகளை நினைத்துப் பார்க்க வேண்டும். துறை ரீதியான ஆய்வுக்கூட்டம், அமைச்சரவை கூட்டம் எல்லாம் முதலமைச்சர் மேற்கொண்டார். பட்ஜெட்டில் வெற்றி தமிழக திட்டங்கள் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. திரும்பும் இடமெல்லாம் மு.க.ஸ்டாலின் உருவாக்கிய திமுக திட்டங்கள் ஜொலித்துக் கொண்டிருக்கிறது. இதில் தவெக அரசின் திட்டங்களை தேடிக் கொண்டிருக்கிறேன் என கூறினார்.

இதற்கு பதிலளித்த அவை முன்னவர் அமைச்சர் செங்கோட்டையன், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற 5 ஆண்டு கால ஆட்சி உள்ளது. 3 மாதத்தில் அனைத்தையும் நிறைவேற்ற முடியாது. அப்படி நீங்கள் சரித்திரம் படைத்தால் சொல்லுங்கள் என சொன்னார்.

தொடர்ந்து பேசிய ஓபிஎஸ், தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற முன்னோடி திட்டங்களை சட்டசபையில் அறிவிக்கவில்லை என்பது தான் எங்களின் வாதமாக உள்ளது என தெரிவித்தார். உடனே குறுக்கிட்ட செங்கோட்டையன், தமிழகம் பாராட்டும் ஒரு தூய ஆட்சியை ஏமாற்றத்தை உருவாக்கும் ஆட்சி என கூறுவது வேடிக்கையாக உள்ளது. நீங்கள் (ஓபிஎஸ்) கட்சி மாறி இருக்கிறீர்கள் என்பதற்காக துதிபாட வேண்டிய அவசியமில்லை என பதிலடி கொடுத்தார்.

இதற்கு, அப்படியாக கட்சி மாறியவர் முதலில் செங்கோட்டையன் தான் என ஓபிஎஸ் சொன்னார். உடனே எழுந்த அமைச்சர் ராஜ்மோகன், இடத்தை முதலில் மாற்றியவர் செங்கோட்டையன் என்றாலும், அவரது சட்டைப்பையில் இருக்கும் ஜெயலலிதா படத்தை மாற்ற வேண்டாம் என சொன்னவர் எங்கள் முதலமைச்சர். ஆனால் ஓபிஎஸ் சட்டைப்பையைப் பார்க்கும்போது இடம் மட்டுமல்லாமல் படமும் மாறியிருக்கிறது.

பின்னர் எழுந்த ஆதவ் அர்ஜூனா, செங்கோட்டையன் இடம் மாறியிருந்தாலும் ஜெயலலிதா படத்தை இன்னும் வைத்திருக்கிறார். ஆனால் ஜெயலலிதாவால் முதலமைச்சராக்கப்பட்ட ஓபிஎஸ் சட்டைப்பையில் யார் படம் இருக்கிறது என மக்களுக்கு நன்றாக தெரியும்” என கூறினார். இதனால் டென்ஷனான ஓபிஎஸ், நான் பேசி முடித்ததும், அமைச்சர்கள் பதிலளித்தால் நன்றாக இருக்கும் என தெரிவித்தார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks