நயினார் நாகேந்திரன் சர்ச்சை பேச்சு

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று சென்னையில் நடைபெற்ற நிகழ்சி ஒன்றில் பேசுகையில், சட்டமன்றத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை விமர்சித்து அப்பா எங்கே என தேடுவதாக முதலமைச்சர் விஜய் தெரிவித்த கருத்தை சர்ச்சைக்குரிய வகையில் கூறியிருந்தார். இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நயினார் நாகேந்திரன் தனது பேச்சிற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என கண்டனங்கள் வலுத்து வருகிறது. இந்த நிலையில், தமிழக டிஜிபிக்கு ஆன்லைன் மூலம் சென்னையில் வழக்கறிஞராக பணியாற்றி வரும் வர்த்தினி என்பவர் கொடுத்துள்ள புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில், தொலைகாட்சியில் நயினார் நாகேந்திரன் அவர்கள் ஒரே நாடு 2.0 நிகழ்ச்சியில் பேசியதன் காணொளியை பார்த்தேன்.

டிஜிபிக்கு பறந்த புகார்

அதில் நயினார் நாகேந்திரன் பொதுவெளியில்/ஊடகங்களின் முன்னிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அவர்களையும், அவரது தாயாரையும் குறிவைத்து மிகவும் இழிவான, அவதூறான மற்றும் வகையில் மரியாதைக்குறைவான கருத்துக்களை தெரிவித்துள்ளார். அதனைக் கண்டு ஒரு பெண்ணாகவும், தாயாகவும் மிகுந்த மன வேதனைக்கு உள்ளானேன் என குறிப்பிட்டுள்ளார்.

எனவே இந்த பேச்சு தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்கள் மற்றும் இணைய ஊடகங்களில் பரவி வருகின்றன. அந்த விடியோ/ஆடியோ பதிவுகள் இப்புகாருடன் ஆதாரமாக இணைக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

குற்றவியல் நடவடிக்கை எடுங்க

1. இப்புகாரை முறையாகப் பதிவு செய்து, சம்பந்தப்பட்ட வீடியோ மற்றும் ஆடியோ பதிவுகளை உடனடியாக பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
2. நயினார் நாகேந்திரன் அவர்கள் பேசிய முழுமையான உரையைப் பெற்று, அதில் பயன்படுத்தப்பட்டுள்ள வார்த்தைகள் மற்றும் அவற்றின் சூழ்நிலையை விசாரிக்க வேண்டும்.
3. அவரது பேச்சு தொடர்பாக இந்திய சட்டங்களின் கீழ் குற்றம் ஏதேனும் நடைபெற்றுள்ளதா என்பதை விசாரித்து, பொருந்தக்கூடிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
4. குறிப்பாக, அவதூறு, திட்டமிட்டு அவமதித்தல், பெண்மீது இழிவான/அவமரியாதையான கருத்து, ஆபாசமான அல்லது சட்டவிரோதமான உள்ளடக்கத்தை பொதுவெளியில் பரப்புதல் உள்ளிட்ட குற்றங்கள் நடைபெற்றுள்ளனவா என்பதை விசாரிக்க வேண்டும்.
5. சம்பந்தப்பட்ட சமூக ஊடகப் பதிவுகள், வீடியோ பதிவுகள் மற்றும் அவற்றின் பரவல் தொடர்பான டிஜிட்டல் ஆதாரங்களை பாதுகாக்க வேண்டும்.
6. இந்தப் பேச்சு சட்டத்தின் கீழ் குற்றமாக இருப்பது விசாரணையில் தெரிய வந்தால், உரிய குற்றவியல் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.
ஜனநாயகத்தில் அரசியல் கருத்து வேறுபாடுகளுக்கும் கடுமையான விமர்சனங்களுக்கும் முழுமையான இடம் இருக்க வேண்டும். ஆனால் அரசியல் விமர்சனத்தின் பெயரில் தனிநபர்களையும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களையும் இழிவுபடுத்தும் நடைமுறை அனுமதிக்கப்படக்கூடாது.

நயினாரை கைது செய்ய திட்டமா.?

எனவே, இப்புகாரை வெறும் அரசியல் புகாராகக் கருதாமல், சம்பந்தப்பட்ட வீடியோ/ஆடியோ ஆதாரங்களின் அடிப்படையில் சட்டரீதியாக விசாரித்து, குற்றம் இருப்பின் உரிய நடவடிக்கை எடுக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்வதாக அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பாஜக மாநில தலைவர் நயினாருக்கு எதிராக கண்டனம் வலுத்து வருகிறது. உடனடியாக நயினார் நாகேந்திரன் மன்னிப்பு கேட்க வேண்டும் எனமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். அதேநேரம் நயினார் நாகேந்திரன் சர்ச்சை கருத்து தொடர்பாக அவரை கைது செய்யவும் போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Source: Read Full Article