முதலமைச்சர் விஜயை விமர்சிக்கிறேன் என்ற பெயரில் அவருடைய குடும்பத்தைப் பற்றி பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அநாகரீகமாக பேசி சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

கமலாலயத்தில் நடைபெற்ற விழா

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் அதிகாரப்பூர்வ இதழான ஒரே நாடு இதழின் இரண்டாம் பதிப்பு அறிமுக நிகழ்ச்சி சென்னை கமலாலயத்தில் இந்திய நாட்டின் 80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், மூத்த நிர்வாகிகளான தமிழிசை சௌந்தரராஜன், வானதி சீனிவாசன், வி.பி.துரைசாமி உள்ளிட்ட பலரும் கலந்துக் கொண்டனர்.

முதலமைச்சர் விஜய் பற்றி சர்ச்சைப் பேச்சு

இந்நிகழ்ச்சியில் பேசிய நயினார் நாகேந்திரன், இறந்த மாட்டு தோலினால் செருப்பு செய்யலாம். இறந்த ஆட்டுத் தோலினால் ஆடை செய்யலாம். இறந்த மனிதன் தோலினால் என்ன செய்ய முடியும்?.. இன்றைக்கு அப்படிப்பட்ட மனிதர்கள் ஆட்சி செய்யக்கூடிய சூழல் அமைந்துள்ளது. சட்டமன்றத்தில் சென்று அப்பா எங்கே என கேட்கிறார்கள். வீட்டிற்கு சென்று அம்மாவிடம் கேட்டால் தானே அப்பா யார் என்று சொல்வார்கள். சட்டசபையில் சென்று அப்பாவை கேட்டால் யாருக்கு தெரியும். இப்படிப்பட்ட ஆட்சி தான் இன்றைக்கு தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது.

பிரதமர் மோடி செய்த சாதனைகளை சொல்லிக்கொண்டே போகலாம். அதெல்லாம் மக்களுக்கு சென்று சேர்ந்தால் கூட தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய மாநில கட்சிகளின் ஆதிக்கம் காரணமாக அவை வாக்கு வங்கியாக மாறுவதில்லை. ஒவ்வொரு காலகட்டத்திற்கும் ஒவ்வொரு சூழ்நிலை நிகழ்கிறது. கடந்த திமுக ஆட்சி காலத்தில் மாற்றம் வர வேண்டும் என நினைத்துக் கொண்டிருக்கும் போது இடையில் இன்னொரு சூழல் (தவெக) வந்துவிட்டது. இந்த சூழல் மாறி வரும்போது நிச்சயமாக தமிழ்நாட்டில் ஆளும் கட்சியாக பாஜக இருக்கும்.

எனக்கு ஒரு மிகப்பெரிய நம்பிக்கை இருக்கிறது. அதன் அடையாளம் தான் தஞ்சாவூரில் நடந்த காவிரி பிரச்சனைக்கான ஆர்ப்பாட்டம் என பார்க்கிறேன். கிட்டத்தட்ட 5000 பேருக்கு மேல் அதில் பங்கேற்றனர். அதன் பிறகு நடந்த தேசியக்கொடி பேரணி இரண்டு தினங்களுக்கு முன்பு நடந்தது. பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவர்கள் சோர்ந்து போய் விட்டார்கள் என சொல்கிறார்கள். பிரிந்துபோன கட்சியின் தலைவர்கள் எல்லாம் மீண்டும் இங்கு வந்து சேர்ந்தது தான் வரலாறு என நைனா நாகேந்திரன் தெரிவித்தார்.

முதலமைச்சர் விஜய் குடும்பத்தைப் பற்றி நயினார் நாகேந்திரன் அநாகரீகமாக பேசியதற்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது. ஏற்கனவே நடிகை த்ரிஷா பெயரை பயன்படுத்தி விஜயை விமர்சித்த நிலையில் பின் வருத்தம் தெரிவித்தார். தற்போது முதலமைச்சரின் குடும்பத்தைப் பற்றி பேசியுள்ளதால் அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தவெக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Source: Read Full Article