Kilambakkam Railway Station Update: கிளாம்பாக்கம் ரயில் நிலையம் திறப்பு எப்போது? ரயில்வே நிர்வாகம் கொடுத்த அதிகாரப்பூர்வ சர்ப்ரைஸ்!

Kilambakkam Railway Station Update: கிளாம்பாக்கம் ரயில் நிலையம் திறப்பு எப்போது? ரயில்வே நிர்வாகம் கொடுத்த அதிகாரப்பூர்வ சர்ப்ரைஸ்!
News Image

Chennai Kilambakkam Railway Station News: சென்னை கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தை அடையும் வகையில் அமைக்கப்பட்டு வரும் புதிய இரயில்வே ஹால்ட் நிலையம், எதிர்வரும் தீபாவளிப் பண்டிகைக் காலத்தில் மக்கள் பயன்பாட்டிற்குத் திறக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தென்னக இரயில்வேயின் கூடுதல் கோட்ட மேலாளர் (ADRM) ஐ. செந்தில் குமார் தெரிவித்துள்ளார். சென்னை புறநகர் மற்றும் பல்வேறு மாவட்டங்களுக்குப் பயணம் செய்யும் லட்சக்கணக்கான மக்களுக்குப் பெருமளவில் பயனளிக்கும் வகையிலும், கிளாம்பாக்கம் பகுதியை ஒரு முழுமையான பன்முகப் போக்குவரத்து முனையமாக மாற்றும் நோக்கிலும் இந்த புதிய ரயில் நிலையப் பணிகள் தீவிரமாக முடுக்கப்பட்டு வருகின்றன.

நீண்ட நாள் எதிர்பார்ப்பும் தாமதத்திற்கான காரணங்களும்

வண்டலூர் மற்றும் ஊரப்பாக்கம் இரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் அமைக்கப்பட்டு வரும் இந்த கிளாம்பாக்கம் இரயில் நிலையப் பணிகள் 2024 ஆம் ஆண்டிலேயே தொடங்கப்பட்டு, கடந்த ஆண்டே திறக்கப்பட வேண்டியதாக இருந்தது. இருப்பினும், இரயில்வே நிர்வாகம் மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுமம் (CMDA) இணைந்து மேற்கொண்டு வரும் திட்டப் பணிகளில் சில தாமதங்கள் ஏற்பட்டன. ஜி.எஸ்.டி சாலையைக் கடந்து, பேருந்து முனையத்தையும் புதிய இரயில் நிலையத்தையும் நேரடியாக இணைக்கும் வகையில் சுமார் 450 மீட்டர் நீளத்திற்கு அமைக்கப்படும் நடைபாலம் (Skywalk) கட்டுமானமே இந்தத் தாமதத்திற்கு முக்கியக் காரணமாக அமைந்தது.

தற்போதைய கட்டுமானப் பணிகளின் நிலை

இரயில்வே நிலைய மேம்பாட்டுக்காகத் தமிழக அரசு சார்பில் ரூ.20.82 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் முதல் நடைமேடை (Platform 1) கட்டுமானப் பணிகள் முழுமையாக நிறைவடைந்து விட்டன. அத்துடன் தற்காலிக பயணச்சீட்டு வழங்கும் அலுவலகம், கழிப்பறை வசதிகள் மற்றும் இரயில் தண்டவாளப் பணிகள் அனைத்தும் முடிவடைந்துள்ளன. தற்போது 2 மற்றும் 3 ஆம் நடைமேடைகளின் பணிகள் இறுதிச் கட்டத்தை எட்டியுள்ளன. மேலும், சி.எம்.டி.ஏ மேற்கொள்ளும் 450 மீட்டர் நடைபாலக் கட்டுமானத்தில் இதுவரை 30 சதவீதப் பணிகள் நிறைவுற்றுள்ளன. இரயில் தண்டவாளங்களின் மேல் நடைபாலத்தை இணைக்கும் பணிக்காகச் சிறப்பு அனுமதி கோரப்பட்டுள்ளது. அக்டோபர் மாதத்திற்குள் சி.எம்.டி.ஏ தனது பாலக் கட்டுமானப் பணிகளை முடித்ததும், எஞ்சியுள்ள இரயில்வே பணிகளும் உடனடியாக நிறைவு செய்யப்படும்.

பயணிகள் சந்திக்கும் அசௌகரியங்களும் தீர்வும்

தற்போது கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தை அடைய மாநகரப் போக்குவரத்து கழகத்தின் (MTC) பேருந்துகள் மட்டுமே முக்கிய ஆதாரமாக விளங்குகின்றன. பண்டிகைக் காலங்கள் மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் நகரின் மையப் பகுதியிலிருந்து கிளாம்பாக்கம் சென்று சேர்வதற்குள் பயணிகள் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கின்றனர். மேலும் டாக்சி மற்றும் ஆட்டோக்களில் செல்ல வேண்டிய நிலை ஏற்படும்போது ரூ.500 முதல் ரூ.1000 வரை அதிக கட்டணம் செலவழிக்க வேண்டிய கட்டாயமும் உள்ளது. இதனால் பயணிகள் பல மணி நேரத்திற்கு முன்பே புறப்பட வேண்டிய சூழல் உள்ளது. இந்த நிலையை மாற்ற, தீபாவளிக்குள் இரயில் நிலையம் திறக்கப்பட்டால் புறநகர் மின்சார இரயில்கள் மூலம் பயணிகள் மிகக் குறைந்த செலவிலும் விரைவாகவும் பேருந்து நிலையத்தைச் சென்றடைய முடியும்.

நிலையப் பராமரிப்பு மற்றும் வருங்காலத் திட்டங்கள்

இப்புதிய இரயில் நிலையத்தின் எதிர்காலப் பராமரிப்பு மற்றும் நிர்வாகப் பொறுப்புகள் குறித்து இரயில்வே துறைக்கும் தமிழக அரசிற்கும் இடையே ஒப்பந்தம் (MoU) தயார் செய்யப்பட்டு வருகிறது. அத்துடன், ஆதம்பாக்கம் பறக்கும் இரயில்வே (MRTS) நிலையத்தில் உள்ள வளைவு காரணமாக நடைமேடைக்கும் இரயிலுக்கும் இடையே இடைவெளி அதிகரித்து பயணிகளுக்குப் பாதுகாப்பின்மை ஏற்படுவது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, அங்கு நடைமேடையை உயர்த்துவது உள்ளிட்ட தொழில்நுட்பச் தீர்வுகளை இரயில்வே வல்லுநர்கள் ஆராய்ந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பறக்கும் இரயில் சேவையைச் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்துடன் இணைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்த வரைவு இரயில்வே வாரியத்தின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், நடப்பாண்டிலேயே அதுவும் நடைமுறைக்கு வர வாய்ப்புள்ளதாகவும் செய்தியாளர் சந்திப்பில் வளக்கமளிக்கப்பட்டுள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks