டாஸ்மாக்கில் புதிய கட்டுப்பாடுகள்

தமிழகத்தில் சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்த கடைகள் மூலம் தினந்தோறும் 100 முதல் 130 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில் புதிதாக பதவியேற்றுள்ள தவெக அரசு டாஸ்மாக்கில் பல்வேறு கட்டுப்பாட்டுகளை விதித்தது. அந்த வகையில் வழிபாட்டு தளங்கள், கல்வி நிலையங்கள், பேருந்து நிலையங்களுக்கு அருகில் இருக்கும் 717 கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டு அந்த கடைகளும் மூடப்பட்டது. அடுத்ததாக மதுப்பிரியர்களின் தொடர் குற்றச்சாட்டாக இருப்பது டாஸ்மாக் கடைகளில் பாட்டில் ஒன்றுக்கு 10 ரூபாய் கூடுதலாக வசூலிக்கப்படுவதாக புகாராக கூறி வந்தனர்.

11 வகையான மதுபான விற்பனைக்கு தடை

அந்த வகையில் கூடுதல் பணம் வசூலிப்பதை தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுத்த தமிழக அரசு, முதலில் டாஸ்மாக ஊழியர்களின் கோரிக்கையை கேட்டு அந்த ஊழியர்களின் ஊதியம் 25% அதிகரித்து இனி டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு கூடுதல் பணம் வசூலிக்க கூடாது எனவும், அப்படி வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனால் மதுப்பிரியர்கள் குஷியில் துள்ளி குதித்த நிலையில், ஷாக் கொடுக்கும் வகையில் டாஸ்மாக்கில் 11 மதுபான வகைகளை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI)மதுபான தொழிற்சாலைகளில் தொடர் சோதனை மேற்கொண்டது. அந்த வகையில் என்ரிகா எண்டர்பிரைசஸ் நிறுவனத்தில் ஆய்வை நடத்திய நிலையில், மதுபானத்தில் இயற்கை சுவைக்கு மாறாக செயற்கை சுவையூட்டும் பொருட்கள் சேர்க்கப்பட்டிருப்பது தெரியவந்ததையடுத்து அந்த நிறுவனத்தின் மதுபானங்களுக்கு தடை உத்தரவு விதிக்கப்பட்டது.

தடை விதிக்கப்பட்ட மதுபானங்கள்

1.ஹனி பீ ஃபைன் பிராந்தி(HONEY BEE FINE Brandy (Indian Brandy)
2. என்ரிகா விஎஸ்ஓபி செலக்ட் பிராந்தி (ENRICA VSOP SELECT BRANDY)
3.என்ரிகா பிளாட்டினம் ரிசர்வ் எக்ஸ்ஓ பிராந்தி (ENRICA PLATINUM RESERVE XO BRANDY)
4..விஎஸ்ஓபி எக்ஷா கோல்ட் பிராந்தி (VSOP EXSHAW GOLD BRANDY)
5.லூயிஸ் வெர்னன்ட் எக்ஸ்ஓ பிளெண்டட் பிரீமியம் பிராந்தி (LOUIS VERNANT XO BLENDED PREMIUM BRANDY)
6.மெக்டொவல்ஸ் விஎஸ்ஓபி பிராந்தி (Mc Dowells VSOP Brandy (Blended Brandy)
7.நம்பர் 1 மெக்டொவல்ஸ் ஃபைன் பிராந்தி (NO.1 McDowells Fine Brandy (Indian Brandy)
8.என்ரிகா பிரீமியம் பிரெஞ்ச் பிராந்தி (ENRICA PREMIUM FRENCH BRANDY)
9.மென்ஸ்கிளப் டீலக்ஸ் பிராந்தி (MENSCLUB Deluxe Brandy (Indian Brandy))
10.வீரன் ஸ்பெஷல் பிராந்தி (VEERAN SPECIAL BRANDY)
11.என்ரிகா ஓல்ட் இண்டி கிளாசிக் டார்க் ரம் (ENRICA OLD INDIE CLASSIC DARK RUM)

குடிமகன்கள் குஷி

இந்த நிலையில் தடை விதிக்கப்பட்ட 24 மணி நேரத்தில் அந்த தடையை நீக்கப்பட்டு மறு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதனால் மதுப்பிரியர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். இவ்வளவு நாள் மோசமான சரக்குகளை குடித்து வந்தோமோ என அதிர்ச்சியில் இருந்த நிலையில், தற்போது அந்த 11 மதுபானங்களை டாஸ்மாக்கில் விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டிருப்பதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அந்த வகையில் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் கொடுத்த அறிக்கையின் அடிப்படையில் தடை உத்தரவு நீக்கப்பட்டுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கொடுத்த தடையை வெறும் 24 மணி நேரத்தில் நீக்கும் அளவிற்கு அப்படி என்ன நடந்தது @CMOTamilNadu @VigneshTvkCbe ?

பயமா? பதற்றமா? பேக்கரி டீலிங்கா?
என்னவா இருக்கும்?#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள் pic.twitter.com/8ag70qt7Tn

— AIADMK IT WING (@AIADMKITWINGOFL) August 15, 2026

அதே நேரம் 24 மணி நேரத்தில் தடை நீக்கப்பட்டது தொடர்பாக அதிமுக கேள்வி எழுப்பியுள்ளது. இது தொடர்பாக அதிமுக ஐடி விங் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொடுத்த தடையை வெறும் 24 மணி நேரத்தில் நீக்கும் அளவிற்கு அப்படி என்ன நடந்தது.? பயமா? பதற்றமா? பேக்கரி டீலிங்கா? என்னவா இருக்கும்? என கேள்வி எழுப்பியுள்ளது.

Source: Read Full Article