Kanimozhi: அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி

Kanimozhi: அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி
News Image

Udhayanidhi Kanimozhi: சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினின் அநாகரீகமான பேச்சுக்கு, கனிமொழி இதுவரை எதிர்ப்பு தெரிவிக்காதது ஏன்? என தவெகவினர் சாடி வருகின்றனர்.

உதயநிதியின் சர்ச்சை பேச்சு

விவசாயக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தஞ்சையில் நேற்று சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுக ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில் பேசுகையில், முதலமைச்சர் விஜயை கடுமையாக விமர்சிக்க, மேடை அருகே நின்றிருந்த சிலர் த்ரிஷா, த்ரிஷா என முழக்கமிட்டனர். அவர்களுக்கு பதிலளிக்கும் வகையில், ஆபசமாகவும், அநாகரீகமாகவும், இரட்டை அர்தத்திலும் உதயநிதி பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது. உள்ளூர் தொடங்கி தேசிய ஊடகங்கள் வரையிலும் அவருக்கு கடும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன. அமைச்சர்கள் என். ஆனந்த், ஆதவ் அர்ஜுனா மற்றும் ராஜ் மோகன் உள்ளிட்ட பலரும், உதயநிதியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எதிர்க்கட்சி தலைவர் என்ற மாண்பை மறந்து இழிவாக பேசிய உதயநிதிக்கு எதிராக இன்று தவெக சார்பில் ஆர்பாட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கனிமொழி எங்கே? - தவெகவினர் கேள்வி

உதயநிதியின் பேச்சுக்கு பல்வேறு தரப்பில் இருந்து கடும் கண்டனம் குவிந்தாலும், தவெகவினர் கனிமொழியை நோக்கி கேள்வி எழுப்பி வருகின்றனர். இதுதொடர்பான பதிவுகளில், “திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான பல குற்றங்கள் நடந்தபோதியிலும், அண்ணனின் ஆட்சி என்பதால் பெரும்பாலான நேரங்களில் கனிமொழி வாய் மூடி அமைதியையே பதிலாக கொண்டிருந்தார். அதேநேரம், தவெக ஆட்சிக்கு வந்த பிறகு பெண்களுக்கு எதிரான ஒவ்வொரு குற்றச்சம்பவத்திற்கும் முதல் ஆளாக கண்டனம் தெரிவித்து வருகிறார். அவரது விமர்சனங்கள் அரசை நல்வழிப்படுத்த உதவுகிறது என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால்,  பெண்களுக்கான பாதுகாப்பையும், மாண்பையும் முக்கியம் என கனிமொழி கருதுவது உண்மையாக இருந்தால், இந்நேரம் உதயநிதியின் பேச்சுக்கு எதிர்ப்பையும், கண்டனத்தையும் பதிவு செய்து இருக்க வேண்டாமா?” என தவெகவினர் கேள்வி எழுப்புகின்றனர்.

பெண்கள் பாதுகாப்பும் அரசியல்தானா? - தவெகவினர் காட்டம்

மேலும், “ஸ்டாலினின் ஆட்சி என்பதற்காக கடந்த 5 ஆண்டுகளில் அமைதியாக இருந்த கனிமொழி, தற்போது மீண்டும் மருமகனுக்காக மவுனத்தை பதிலாக வழங்கப் போகிறாரா? ஒருவேளை எதிர்தரப்பினர் பெண்களுக்கு எதிராக செயல்பட்டால் மட்டும் தான் கனிமொழி முதல் நபராக ஓடி வந்து கண்டிப்பாரா? அல்லது உதயநிதியின் பேச்சு அரசியல் மாண்புக்கும் பொதுவெளிக்கும் பொருத்தமற்றது என கனிமொழிக்கு தோன்றவில்லையா? உதயநிதியின் கருத்தை யார் பேசி இருந்தாலும் ஏற்றுக்கொள்ள முடியாது, அந்த வகையில் தவெகவினர் யாராவது இப்படி பேசியிருந்தால் கனிமொழி இப்படி அமைதி காத்து இருப்பாரா? எனில் பெண்களின் பாதுகாப்பு மற்றும் மாண்பு என்பதும் வெறும் அரசியல் நாடகம் தானா? உண்மையிலேயே பெண்களின் முன்னேற்றம் குறித்து அக்கறை என்பது எல்லாம் இன்றி, வாக்கு அரசியலுக்காக மட்டுமே மகளிர் விவகாரத்தில் திமுகவால் முன்னிறுத்தப்படுகிறாரா?” எனவும் தவெகவினர் அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்: TN Weather News: 7 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் மழை எச்சரிக்கை - சென்னை? தமிழக வானிலை அறிக்கை

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks