முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!

முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!
News Image

முதலமைச்சர் விஜய் பற்றி சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கு தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஆனந்த் கடுமையான கண்டனங்களை தெரிவித்துள்ளார்.

சர்ச்சைக்குள்ளான உதயநிதியின் பேச்சு

தஞ்சாவூர் மேகதாது விவகாரம், காவிரி நீர் பிரச்னை, விவசாயிகளை தவெக அரசு வஞ்சிப்பது உள்ளிட்ட விஷயங்களை வலியுறுத்தி திமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கினார். இந்த நிகழ்வில் திமுக மட்டுமல்லாது தற்போது அதன் கூட்டணியில் உள்ள கட்சிகளின் தலைவர்கள், தொண்டர்கள் என பலரும் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி, முதலமைச்சர் விஜயை மிக கடுமையாக சாடினார். அப்போது கூட்டத்தில் இருந்த தொண்டர்கள் நடிகை த்ரிஷா பெயரை சொல்லி கூச்சலிட்டனர். இதனைத் தொடர்ந்து இரட்டை அர்த்தத்தில் கருத்து ஒன்றை உதயநிதி சொல்ல கூட்டத்தினர் ஆர்ப்பரித்தனர். ஆனால் அவரின் பேச்சு சர்ச்சையாக வெடித்தது. சமூக வலைத்தளங்களில் பொறுப்புள்ள எதிர்க்கட்சி தலைவராக இருந்துக் கொண்டு இப்படி பேசலாமா என உதயநிதியை பலரும் விமர்சித்து வருகின்றனர். அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் கண்டனம்

இந்த நிலையில் தமிழக நீர்வளத்துறை அமைச்சரும், தவெக பொதுச்செயலாளருமான ஆனந்த் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், “எதிர்க்கட்சித் தலைவர் என்ற மாண்பும் மரபும் மிக்க மிகப்பெரிய பொறுப்பை உணராமல், வாய்க்கு வந்தபடி பேசிய ஒருவரை என்ன சொல்லுவது என்றே தெரியவில்லை. தன் தாத்தாவும் தந்தையும் வகித்தும்கூடவா முதல்வர் பதவியின் தகுதியும் தராதரமும் தெரியாமல் ஒருவர் இருக்க முடியும்?.

Also Read: த்ரிஷா.. த்ரிஷா.. கத்திய திமுக தொண்டர்கள்! உதயநிதி ஸ்டாலின் சொன்னது என்ன தெரியுமா?

அவை அடக்கமும் நாவடக்கமும் இல்லாத ஒருவரா நம் தமிழகத்தின் துணைமுதல்வராக இருந்திருக்க முடியும்?. மக்கள் மத்தியில் இத்தகையக் கேள்விகள் இமாலய அளவிற்கு எழுந்துள்ளன. எல்லை மீறி இழிவாகப் பேசியவர்கள் என்ன பதில் சொல்லப் போகிறார்கள் ?.

நாகரீகமான அணுகுமுறை - நாகரீகமான தாக்குதல் கற்றுக்கொடுத்து எங்களைக் கட்டுப்படுத்தி வளர்க்கும்  தமிழ்நாடு முதலமைச்சரை இப்படி அநாவசியமாகவும் அநாகரிகமாகவும் தொட்டவர்கள் நிலை என்னவாயிற்று என்பதை யாராக இருந்தாலும் உணர்ந்தே ஆக வேண்டும். மக்கள் உணர்த்தியே தீருவர். அதில் மாற்றமும் இல்லை. மாற்றுக் கருத்தும் இல்லை.

அமைதி காக்கச் சொல்லி எங்கள் தலைவர் தளபதியின் நாகரிக வளர்ப்பு எங்களைத் தடுக்கிறது. வேறு என்ன சொல்ல?. அறிஞர் அண்ணா பாணியில் ‘வசவாளர்கள் வாழ்க’ என்று சொல்லலாம்.ஆனால், ஆபாசநிதிகளை?.  மாண்பும் மரியாதையும் தகுதியும் தராதரமும் மிக்க எங்கள் தலைவர்  தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் சொல்வதுபோல மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றனர். யாரும் மறந்துவிட வேண்டாம் என்று எச்சரிக்கிறோம்” என பதிவிட்டுள்ளார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks