Kanchipuram Metro Rail Update: காஞ்சிபுரம் மக்களுக்கு அதிர்ச்சி! பரந்தூர் விமான நிலையம் ரத்து: மெட்ரோ ரயிலில் உருவான புதிய மாற்றம்!

Kanchipuram Metro Rail Update: காஞ்சிபுரம் மக்களுக்கு அதிர்ச்சி! பரந்தூர் விமான நிலையம் ரத்து: மெட்ரோ ரயிலில் உருவான புதிய மாற்றம்!
News Image

Poonamallee to Sunguvarchatram Metro Route Details: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் விரிவாக்கத் திட்டத்தில் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. முன்னதாகப் பூந்தமல்லியிலிருந்து பரந்தூர் வரை மெட்ரோ ரயில் பாதையை அமைப்பதற்குத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், பரந்தூர் புதிய விமான நிலையத் திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதால், இந்த மெட்ரோ திட்டத்திலும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன்படி, இனி பூந்தமல்லியிலிருந்து சுங்குவார்சத்திரம் வரையிலான 28 கிலோமீட்டர் தொலைவிற்கு மட்டுமே மெட்ரோ ரயில் பணிகள் மேற்கொள்ளப்படும் எனச் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகள்

சென்னையின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும் பயணத்தைச் சீராக்கவும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் 116 கிலோமீட்டர் தொலைவிற்கு முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இதில் மாதவரம் முதல் சிறுசேரி சிப்காட் வரை, கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி பணிமனை வரை மற்றும் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை எனப் பல வழித்தடங்களில் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்தப் பணிகள் அனைத்தையும் வரும் 2028-ஆம் ஆண்டிற்குள் முழுமையாக முடித்து மக்கள் பயன்பாட்டிற்குச் சமர்ப்பிக்க மெட்ரோ ரயில் நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது.

திட்ட மாற்றத்திற்கான பின்னணி

முந்தைய ஆட்சியின்போது, பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும் என அரசு சார்பில் முறைப்படி அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, பூந்தமல்லியில் இருந்து பரந்தூர் வரை 53 கிலோமீட்டர் தொலைவிற்கு மெட்ரோ ரயில் திட்டத்தை விரைவாகச் செயல்படுத்த அரசு முடிவு செய்தது. இதற்கான விரிவான அறிக்கை தயாரிக்கப்பட்டு, அரசாணையும் வெளியிடப்பட்டு ஆரம்பக் கட்டப் பணிகள் நடைபெற்று வந்தன. இருப்பினும், நாட்டில் ஏற்பட்ட அரசியல் ஆட்சி மாற்றத்திற்குப் பின் புதிதாகப் பொறுப்பேற்ற த.வெ.க. அரசு, பரந்தூர் புதிய விமான நிலையத் திட்டத்தைக் கைவிட்டு ரத்து செய்தது. இதன் காரணமாகவே மெட்ரோ திட்டத்தின் தூரமும் குறைக்கப்பட்டுத் தற்போதைய மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

நிதி ஒதுக்கீடும் அதிகாரிகளின் விளக்கமும்

இந்தத் திடீர் மாற்றங்கள் குறித்துச் சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் அளித்துள்ள விளக்கத்தில், பூந்தமல்லி - பரந்தூர் மெட்ரோ ரயில் திட்டத்தை முதற்கட்டமாகப் பூந்தமல்லி முதல் சுங்குவார்சத்திரம் வரையிலான 28 கிலோமீட்டர் தூரத்திற்கு ரூ.8,779 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்த உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர். இந்தத் திட்டம் மத்திய மற்றும் மாநில அரசுகளின் கூட்டுப் பங்களிப்புடன் நிறைவேற்றப்படவுள்ளது. சென்னை மாநகரத்தின் அடுத்தகட்ட நகர்ப்புற வளர்ச்சிக்கும் சீரான போக்குவரத்து மேம்பாட்டிற்கும் இந்த மெட்ரோ ரயில் விரிவாக்கம் மிகப்பெரிய அளவில் பங்களிக்கும் என்றும் அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks