Chennai Metro Rail : உள்ளகரம் To எல்காட் வரை மெட்ரோ ரயில்.! எதிர்பார்த்த மக்களுக்கு குஷியான செய்தி சொன்ன சென்னை மெட்ரோ

Chennai Metro Rail : உள்ளகரம் To எல்காட் வரை மெட்ரோ ரயில்.! எதிர்பார்த்த மக்களுக்கு குஷியான செய்தி சொன்ன சென்னை மெட்ரோ
News Image

சென்னை மெட்ரோ ரயில் பணி

சென்னையில் போக்குவரத்து நெரிசலால் சிக்கி தவித்து வரும் நிலையில், உரிய இடங்களுக்கு குறித்த நேரத்தில் செல்ல முடியாமல் மக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.  இந்த நிலையில் எந்தவித போக்குவரத்து நெரிசலும் இல்லாமல் குறிப்பிட்ட நேரத்தில் இலக்கை சென்று அடைய மெட்ரோ ரயில் பயணம் பெரிய அளவில் உதவியாக இருந்து வருகிறது. அந்த வகையில், சென்னையில் பல கட்டங்களாக மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் போக்குவரத்து நெரிசல் அதிகமுள்ள பகுதியாக உள்ளகரம் மெட்ரோ நிலையத்திலிருந்து எல்காட் மெட்ரோ நிலையம் வரை உள்ள பகுதியில் மெட்ரோ ரயிலுக்கான கடைசி தூண் அமைக்கும் பணியானது நிறைவடைந்துள்ளது. இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

உள்ளகரம் To எல்காட் மெட்ரோ ரயில் பணி

சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம்-2, வழித்தடம்-5-ல் ECV-03 திட்டத்தின் கீழ் மேடவாக்கம்-1 மெட்ரோ நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள 25 மீட்டர் உயரமுள்ள கடைசி தூணின் (தூண் P814) வார்ப்புப் பணியை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. உள்ளகரம் மெட்ரோ நிலையத்திலிருந்து எல்காட் மெட்ரோ நிலையம் வரை உள்ள இந்த 11.3 கி.மீ. நீளமுள்ள இப்பகுதியில் மொத்தம் 513 பெரிய அடித்தளத் தூண்கள் (piers) அமைக்கப்பட்டுள்ளன. இதற்காக 2351 தூண்கள் (Piles) அமைக்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் மிகவும் சவாலானப் பகுதிகளில் ஒன்று, மேடவாக்கம் கூட்டுச் சாலை அருகிலுள்ள தூண் P879 முதல் செம்மொழிச் சாலையில் உள்ள தூண் 1868 வரையிலான பகுதியாகும். இப்பகுதியில் அமைக்கப்பட்ட தூண்கள் இந்தப் பிரிவிலேயே மிக உயரமானவை ஆகும்.

பாலத்திற்கு மேல் மெட்ரோ பாலம்

இவற்றின் அதிகபட்ச உயரம் சுமார் 29 மீட்டர். இந்தப் பகுதியில் அமைந்துள்ள மெட்ரோ வழித்தடமானது, ஏற்கனவே உள்ள மேடவாக்கம் மேம்பாலத்திற்கு மேலே சுமார் 29 மீட்டர் உயரத்தில் கடந்து செல்கிறது. மேலும், 125 மீட்டர் ஆரம் கொண்ட கூர்மையான வளைவுப் பாதையில் 57 மீட்டர் நீளமுள்ள இரும்பு இணைப்புப் பாலம் (Steel Girder Span) அமைக்கப்பட்டுள்ளது. பொறியியல் ரீதியான சவாலை மேலும் அதிகரிக்கும் விதமாக, மேடவாக்கம்-1 மற்றும் மேடவாக்கம்-2 ஆகிய மெட்ரோ நிலையங்களும் இந்தப் பகுதியில் சாலை மட்டத்திலிருந்து சுமார் 29 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளன.

மெட்ரோ தூண்- சவாலான பணி

அதிக மக்கள் நடமாட்டம், போக்குவரத்து நெரிசல் மிகுந்த சந்தைப் பகுதிகளில் இத்தகைய சிக்கலான கட்டுமானங்களை மேற்கொள்வது பெரும் சவாலாக இருந்தது. குறிப்பாக போக்குவரத்தை மாற்றி அமைப்பது, பயன்பாட்டில் உள்ள மேம்பாலத்திற்கு மிக அருகிலும் அதற்கு மேலேயும் பணிகளைப் பாதுகாப்பாக நிறைவேற்றுவது ஆகியவை பிரதான சவால்களாக இருந்தன. துல்லியமான திட்டமிடல் சிறப்பான ஒருங்கிணைப்பு மற்றும் சீரான செயல்பாடுகளின் மூலம் இந்தச் சவால்கள் வெற்றிகரமாக எதிர்கொள்ளப்பட்டன.

இரண்டாம் கட்ட மெட்ரோ- எப்போது முடிவடையும்.?

தற்போது 513-வது மற்றும் கடைசித் தூணான P814-ன் கான்கிரீட் அமைக்கும் பணிகள் நிறைவடைந்திருப்பது, இத்திட்டத்தின் முக்கியமான ஒரு மைல்கல்லாகும். தூண் அமைக்கும் பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டத் திட்டத்தை உரிய நேரத்தில் முடிக்கும் வகையில், U-girder அமைத்தல் மற்றும் மெட்ரோ இரயில் நிலையங்களை அமைக்கும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருவதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks