Iran warns US : எங்களை தொட்டா சும்மா விட மாட்டோம்.! அமெரிக்காவை அலறவைக்கும் ஈரான்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?

Iran warns US : எங்களை தொட்டா சும்மா விட மாட்டோம்.! அமெரிக்காவை அலறவைக்கும் ஈரான்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
News Image

ஈரான்- அமெரிக்கா போர்

ஈரான் - இஸ்ரேல் இடையே பல ஆண்டுகாலமாக தொடர்ந்து மோதல் இருந்து வருகிறது. அந்த வகையில் ஈரான் அணு ஆயூதம் தயாரிப்பதற்கு எதிராக இஸ்ரேல் அமெரிக்கா துணையோடு கடந்த பிப்ரவரி மாதம் ஈரான் மீது தாக்குதலை நடத்தியது. இதில் ஈரானில் உள்ள பல இடங்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. இதனையடுத்து ஈரான் பதிலடி தாக்குதலை நடத்தியது. குறிப்பாக இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க படைத்தளங்களை குறிவைத்து தாக்கியது. இதனை சற்றும் எதிர்பார்க்காத அமெரிக்கா அதிர்ச்சி அடைந்தது.  மேலும் வளைகுடா நாடுகளில் இருந்து பல நாடுகளுக்கு வர்த்தகம் நடைபெறும் ஹார்மூஸ் ஜலசந்தியை மூடப்பட்டது.

ஹார்மூஸ் ஜலசந்தி மூடல்

இதனால் கச்சா எசண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டதால் பல நாடுகளல் பெட்ரோல், டீசல், எரிவாயு விலையானது உயர்ந்தது. மேலும் சமையல் எரிவாயு முன்பதிவு செய்வதிலும், விநியோகம் செய்வதிலும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இதனையடுத்து அமெரிக்கா- ஈரான் இடையே போர் முடிவுக்கு கொண்டு வர பல நாடுகள் அமைதி பேச்சுவார்த்தையில் இறங்கியது. இருந்த போதும் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் முடிவுக்கு வராத நிலைதான் நீடித்து வருகிறது.

இந்த நிலையில் மோதல் 100 நாட்களுக்கு மேல் நீடித்த நிலையில் ஈரானை சரண்டையவைக்க முடியாமல் அமெரிக்காவும், இஸ்ரேலும் திணறியது. இதனையடுத்து  அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த மாதம் தற்காலிக அமைதி ஒப்பந்தம் எட்டப்பட்டது. ஆனால், அந்த ஒப்பந்தத்திற்குப் பிறகும் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக பயணித்த சில கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல்கள் நடந்ததாக கூறப்படுகிறது.

ஈரானை கடுமையாக தாக்க திட்டம் போட்ட ட்ரம்ப்

இதையடுத்து, அதிருப்தி அடைந்த அமெரிக்க  அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் மீது மீண்டும் தாக்குதலை நடத்தினார்.  ஈரானின் முக்கிய ராணுவ மற்றும் முக்கிய தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் தனது  நிபந்தனைகளை ஏற்கும்படி ஈரானுக்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கில், ஈரான் மீதான தாக்குதலை கடுமையாக்க அமெரிக்க அதிபர் திட்டமிட்டார். இதற்காக கூடுதல் ரானுவ படைகளை வளைகுடா நாடுகளை நோக்கி அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க மக்கள், அப்பகுதியை விட்டு வெளியேறத் தயாராக இருக்க வேண்டும் என்று அமெரிக்கா வெளியிட்ட பாதுகாப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தப்படலாம் என தகவல் வெளியாகி வருவதால், இதற்கு பதிலடி கொடுக்க ஈரானும் தயாராகி வருகிறது.

பதலடி கொடுக்க தயாராகும் ஈரான்

அந்த வகையில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள ஈரான், தங்கள் நாட்டின்  எரிசக்தி கட்டமைப்புகளை குறிவைத்து தாக்கினால், மேற்காசியாவில் உள்ள முக்கிய எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி மையங்கள் மீது பதிலடி நடத்தப்படும் என்று ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.  அந்த வகையில்,ஈரான் தயாரித்துள்ளதாகக் கூறப்படும் இலக்குப் பட்டியலில், உலகின் மிகப்பெரிய எண்ணெய் வயல்களில் ஒன்றான சவுதி அரேபியாவின் கவார் எண்ணெய் வயல், நாளொன்றுக்கு 70 லட்சத்திற்கும் அதிகமான பீப்பாய்கள் உற்பத்தி செய்யும் அப்காய்க் மற்றும் குரைஸ் எண்ணெய் செயலாக்க மையங்கள் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஈரானின் இலக்கு என்ன.?

அதேபோல், ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள ஜகும் எண்ணெய் வயலும், நாளொன்றுக்கு 10 லட்சத்திற்கும் அதிகமான பீப்பாய்களை சுத்திகரிக்கும் திறன் கொண்ட ருவேஸ் சுத்திகரிப்பு ஆலையும் ஈரானின்  இலக்குகளாக கூறப்படுகிறது. ஈரான் இந்த பகுதியில் தாக்குதல் நடத்தினால் உலகம் முழுவதும் எண்ணெய் விநியோகம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு பொருளாதாரம் சீரழியும் என கூறப்படுகிறது. எனவே அமெரிக்காவிற்கு பதிலடி கொடுக்க ஈரான் தயாராக இருப்பதாகவே கூறப்படுகிறது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks