விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், நீர் வளப் பாதுகாப்பு மற்றும் சேமிப்பு தொடர்பான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் துறை சார்ந்த அலுவலர்களுடன் நடைபெற்றது.

நீர் வளப் பாதுகாப்பு மற்றும் சேமிப்பு தொடர்பான ஆய்வுக்கூட்டம்

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், நீர் வளப் பாதுகாப்பு மற்றும் சேமிப்பு தொடர்பான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர்ஷேக் அப்துல் ரஹ்மான், அவர்கள் தலைமையில் துறை சார்ந்த அலுவலர்களுடன்நடைபெற்றது.

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவிக்கையில், விழுப்புரம் மாவட்டத்தில் நீர் வளப் பாதுகாப்பு மற்றும் சேமிப்பு தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து வாரந்தோறும் ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்றைய தினம் நடைபெற்ற கூட்டத்தில் நீர்வளத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, பேரூராட்சித்துறை ஆகிய துறை சார்ந்த அலுவலர்களுடன் நீர் வளப் பாதுகாப்பு மற்றும் சேமிப்பு குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்தவகையில், மழைநீர் சேகரிப்பை மேம்படுத்துதல், ஊரக மற்றும் நகர் புற பகுதிகளில் உள்ள நீர் நிலைகளான ஏரி, குளங்கள், குட்டைகள் மற்றும் வரத்து வாய்க்கால்கள் உள்ளிட்ட நீர் ஆதாரங்களை பாதுகாத்தல், நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துதல், குடிநீர் விநியோகத்தை உறுதிசெய்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடன் விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மேலும், மாவட்டத்தில் உள்ள நீர்வளத்துறை, ஊரகவளரச்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து நீர் நிலைகளில் தூர்வாருதல், ஏரிக்கரைகளை பலப்படுத்துதல், ஏரி வாய்கால்களை சரிசெய்து பராமரித்தல் போன்ற பணிகளின் முன்னேற்றம் குறித்து கேட்டறியப்பட்டு, பணிகளை பருவ மழைக்கு முன்பாகவே முடித்திட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. ஊரகப் பகுதிகள், நகராட்சி மற்றும் பேரூராட்சி கட்டுப்பாட்டில் உள்ள ஆழ்துளைக் கிணறுகள் பயன்பாட்டில் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். பழுதடைந்துள்ள ஆழ்துளைக் கிணறுகள் இருக்கும் பட்சத்தில் உடனடியாக சரிசெய்து பயன்பாட்டிற்கு கொண்டுவர அறிவுறுத்தப்பட்ட நிலையில் தற்போது அதன் விவரங்கள் குறித்து கேட்டறிந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதுமட்டுமல்லாமல், மாவட்டத்தில் உள்ள பழுதடைந்து நீண்ட நாட்களாக பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளைக் கிணறுகள் மற்றும் கிணறுகளை கண்டறிந்து மழைநீர் சேமிக்கும் கட்டமைப்புகளாக மாற்றிட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

மாவட்டத்தில் நீர் நிலைகளை பாதுகாத்து, நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தி குடிநீர் ஆதாரங்களை பாதுகாக்கும் வகையில் நீர்வளத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, பேரூராட்சித்துறை ஆகிய துறை சார்ந்த அலுவலர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.

Source: Read Full Article