இந்தியா - இலங்கை அணிகள் மோதும் 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியின் கடைசி நாள் இன்று நடந்து வருகிறது. இந்த போட்டியின் தொடக்கம் முதலே இந்தியா ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில், இந்த போட்டியில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் மிகவும் பிரகாசமாக இந்தியாவிற்கு இருந்தது.

இந்திய கனவை நொறுக்கிய சோனல் தினுஷா:

ஃபாலோ ஆன் ஆகிய இலங்கை அணிக்காக சூர்யபண்டாரா 92 ரன்கள் எடுத்து போராடினாலும் 4வது நாளான நேற்று 6 விக்கெட்டுகளை இழந்த இலங்கை வெறும் 16 ரன்கள் மட்டுமே முன்னிலை வகித்திருந்தது. டெயிலண்டர்கள் மட்டும் பின்வரிசையில் இருந்த சூழலில், எஞ்சிய 4 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியா எளிதான இலக்கை அடைந்து வெற்றி பெறும் என்றே அனைத்து ரசிகர்களும் கருதினர்.

ஆனால், இந்தியாவின் கனவை சோனல் தினுஷா தவிடுபொடியாக்கினார். கேசவ் நுவந்தா நங்கூரமாக மறுமுனையில் நிற்க சோனல் தினுஷா பொறுப்புடன் ஆடினார். அவர் மிகவும் நிதானமாக ஆட, நுவந்தா நன்கு ஒத்துழைப்பு அளித்தார். பிரசித் கிருஷ்ணா, சிராஜ், மானவ் சுதர், சரன்ஷ் ஜெயின், ஜடேஜா ஆகியோர் மாறி, மாறி பந்துவீசினர்.

ஒத்துழைத்த நுவந்தா:

ஆனாலும், இந்த ஜோடி இந்திய பந்துவீச்சுக்கு பெரும் சிரமத்தை உருவாக்கினர். சிறப்பாக ஆடிய தினுஷா அபாரமாக ஆடி அரைசதத்தை கடந்தார். ஓரிரு ரன்களாகவும், ஏதுவான பந்தை பவுண்டரிக்கும் அனுப்பிய நுவந்தா அரைசதத்தை நெருங்கினார். இந்த ஜோடியை மானவ் சுதர் பிரித்தார். சிறப்பாக ஆடிய நுவந்தா 150 பந்துகளில் 4 பவுண்டரி 46 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

தினுஷா சதம்:

218 ரன்களின்போது 7வது விக்கெட்டிற்கு சேர்ந்த இந்த ஜோடி 330 ரன்களில் பிரிந்தது. 65வது ஓவரில் சேர்ந்த இந்த ஜோடி 40 ஓவர்கள் களத்தில் நின்று 112 ரன்களை 7வது விக்கெட்டிற்கு சேர்த்தது. அடுத்து வந்த பிரபாத் ஜெயசூர்யாவும் ஒரு 28 பந்துகள் ஆடி 2 ரன்கள் எடுத்து அவுட்டாக, 9வது விக்கெட்டிற்கு சேர்ந்த தினுஷா - லஹிரு குமாரா ஜோடியும் இந்திய அணிக்கு தலைவலியாக உருவெடுத்துள்ளது.

மறுமுனையில் அரைசதம் கடந்து ஆடிய சோனல் தினுஷா அபாரமாக ஆடி சதத்தை விளாசினார். கடைசி நாளில் 3 செசன்கள் வரை இலங்கை அணி தாக்குப்பிடித்தது மட்டுமின்றி 181 ரன்கள் முன்னிலையும் பெற்றுள்ளது. 394 ரன்களை கடந்து இலங்கை அணி தற்போது ஆடி வருகிறது.

வெற்றியைப் பறிகொடுத்த இந்தியா:

எஞ்சியுள்ள ஒரு செசசினில் இந்திய அணி இலங்கை அணி நிர்ணயிக்கும் இலக்கை எட்டிப்பிடித்து வெற்றி பெறுவது என்பது சாத்தியமே இல்லாதது ஆகும். இதனால், இந்த போட்டி டிரா ஆவதற்கே சாத்தியக்கூறுகள் மிக மிக அதிகபட்ச வாய்ப்பு உள்ளது.

தோல்வியின் பிடியில் இருந்த இலங்கையை அந்த அணியின் சோனல் தினுஷா தனது அபாரமான பேட்டிங்கால் டிராவாக இந்த போட்டியை மாற்றிக் காட்டியுள்ளார்.

Source: Read Full Article