தமிழ்நாட்டின் சட்டமன்ற கூட்டத்தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இன்று நடந்த மானியக்கோரிக்கையில் சமூகநீதித்துறையின் புதிய அறிவிப்புகளை அந்த துறையின் அமைச்சர் வன்னியரசு வெளியிட்டார்.

அவர் சட்டமன்றத்தில் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது,

1. ஊட்டி பழங்குடியினர் ஆய்வு மையத்தின் விரிவாக்கமாக சென்னை நந்தனத்தில் பழங்குடியினர் பண்பாட்டு மையம்

2. சமூக நீதித்துறையின் கீழ் செயல்படும் 23 ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினர் நலப்பள்ளிகள் தரம் உயர்த்தப்படும்.

3. பொருளாதாரத்தில் பின்தங்கிய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு கல்வி, நிதி உதவிகளை ஒருங்கிணைத்து வழங்க சமூக நீதி அறக்கட்டளை உருவாக்கப்படும்.

4. மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையில் உள்ள வேறுபாடுகளை களைந்து சமமாக உயர்த்தி வழங்குதல்

5. பொருளாதாரத்தில் பின்தங்கிய 1 லட்சம் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின குடும்பத் தலைவிகளின் மேம்பாட்டிற்கான விடிவெள்ளி - மகளிர் வாழ்வாதார திட்டம்

6. வீடற்ற தூய்மை பணியாளர்களுக்கு 2,500 கான்கிரீட் வீடுகள் வழங்குதல்

7. 1000 ஆதிதிராவிட விவசாயிகளுக்கு 90 சதவீத மானியத்துடன் விரைவு மின் இணைப்பு

8. வீடற்ற பழங்குடியின மக்களுக்கு 2 ஆயிரம் கான்கிரீட் வீடுகளை கட்டிக் கொடுத்தல்

9. பள்ளிகளல் தினசரி தூய்மை, குடிநீர், கழிப்பறை மற்றும் பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்தும் திட்டம்

10. வீடற்ற ஆதிதிராவிட குடும்பங்களுக்கு 5 ஆயிரம் கான்கிரீட் கட்டித் தரப்படும்

11. மாத உணவுக்கட்டணம் பள்ளி மாணவர்களுக்கு ரூபாய் 1800 ஆகவும், கல்லூரி மாணவர்களுக்கு ரூபாய் 2 ஆயிரமாகவும் உயர்வு

12. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல பள்ளிகளுக்கான வருடாந்திர பராமரிப்பு தொகை உயர்வு ( ரூபாய் 6.5 கோடி)

13. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்கள் தங்கும் பள்ளி விடுதிகளின் ஆண்டு பராமரிப்பு நிதி பள்ளி விடுதிகளுக்கு ரூபாய் 50 ஆயிரத்தில் இருந்து ரூபாய் 75 ஆயிரமாகவும், கல்லூரி விடுதிகளுக்கு ரூபா் 50 ஆயிரத்தில் இருந்து ரூபாய் 1 லட்சமாகவும் உயர்வு

14. ஆதிதிராவிடர் மக்கள் அதிகம் வாழும் பகுதிகளில் புதிய 100 சமுதாய கூடங்கள்

15. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்கள் படிப்பதற்கு உகந்த சூழ்நிலையை உருவாக்கும் பொருட்டு 150 சமூக நீதி விடுதிகள் ரூபாய் 160 கோடியில் கட்டப்படும்

16. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொழில்முனைவோர்களை ஊக்குவிக்கவும் வருவாய் ஈட்டவும் கோவையில் வணிக மையம்.

17. சிறப்பாக செயல்படும் ஆசிரியர் மற்றும் காப்பாளர்களை ஊக்குவிக்க அறிவொளி ஆசிரியர்/ காப்பாளர் விருது

18. விடுதி மேலாண்மை மற்றும் மாணவர் பாதுகாப்பை மேம்படுத்த அரண் - விடுதி பராமரிப்பு மேலாண்மை அமைப்பு

19. ஆதிதிராவிட மக்களின் சமூக, பொருளாதார மேம்பாட்டிற்காக சமூக நீதிநல வாரியம் அமைக்கப்படும்.

20. மாணவர்களின் வாசிப்பு பழக்கம் மற்றும் போட்டித் தேர்வுத் திறனை வளர்க்க அனைத்து விடுதிகளிலும் அம்பேத்கர் படிப்பகம்.

இவ்வாறு அமைச்சர் வன்னியரசு அறிவிப்பை வெளியிட்டார்.

Source: Read Full Article