Holiday Special Bus : 2 நாள் லீவு வந்தாச்சு! ஊருக்கு செல்ல திட்டமா.? சிறப்பு பேருந்து அறிவிப்பு- எங்கிருந்து எங்கே.? லிஸ்ட் இதோ..

Holiday Special Bus : 2 நாள் லீவு வந்தாச்சு! ஊருக்கு செல்ல திட்டமா.? சிறப்பு பேருந்து அறிவிப்பு- எங்கிருந்து எங்கே.? லிஸ்ட் இதோ..
News Image

விடுமுறைக்கு வெளியூர் பயணம்

விடுமுறை என்றாலே பெரியவர்கள் முதல் பள்ளி மாணவர்கள் வரை கொண்டாட்டம் தான். அந்த வகையில் வார இறுதி நாள் விடுமுறையையொட்டி வெளியூர் செல்ல திட்டமிடுபவர்கள் முதலில் நாடுவது ரயில் பயணத்தை தான். ஆனால் தற்போது அனைத்து ரயில்களிலும் முன்பதிவு முடிவடைந்து விட்டதால் அரசு பேருந்தில் பயணம் செய்ய திட்டமிடுவார்கள். எனவே வார விடுமுறைக்கு வெளியூர் செல்லும் பயணிகளுக்காக சிறப்பு பேருந்து அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அரசு விரைவுப் போக்குவரத்துக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 21/08/2026 (வெள்ளிக்கிழமை) 22/08/2026 (சனிக்கிழமை) மற்றும் 23/08/2026 (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்து இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்து

இதனை கருத்தில் கொண்டு சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர். பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 21/08/2026 வெள்ளிக் கிழமை அன்று 110 பேருந்துகளும் 22/08/2026 சனிக்கிழமை அன்று 110 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்து இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 21/08/2026 (வெள்ளிக்கிழமை) அன்று 890 பேருந்துகளும், 22/08/2026 (சனிக்கிழமை) 820 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

எங்கிருந்து பேருந்துகள் இயக்கம்

இதே போல பெங்களூர், திருப்பூர். ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்து பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாதவரத்திலிருந்து 21/08/2026 மற்றும் 22/08/2026 ஆகிய நாட்களில் கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், வேலூர், ஓசூர் மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களுக்கு ஒவ்வொரு நாளும் 80 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், விடுமுறை முடிந்து சென்னை உள்ளிட்ட இடங்களுக்கு திரும்பும் பயணிகளுக்கு வசதியாக ஞாயிறு அன்று சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் 23/08/2026 (ஞாயிற்றுக்கிழமை) அன்று 465 சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னைக்கு திரும்ப சிறப்பு பேருந்து

இந்த வார இறுதியில் வெள்ளிக்கிழமை அன்று 18762 பயணிகளும் சனிக்கிழமை 10461 பயணிகளும் மற்றும் ஞாயிறு அன்று 17678 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் TNSTC Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுவதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks