" சிங்கப்பெண் படை மிக அவசியம் " Gen Z குறித்து நடிகை ரேவதி பெருமிதம்

" சிங்கப்பெண் படை மிக அவசியம் " Gen Z குறித்து நடிகை ரேவதி பெருமிதம்
News Image

"பாரத் சோகா ( BSG ) - மகளிர் கருத்தரங்கம்"

​சென்னையில் Bharat Soka Gakkai (BSG) சார்பில் நடத்தப்பட்ட 6 - வது மகளிர் கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக நடிகை ரேவதி கலந்து கொண்டார்.

கருத்தரங்கிற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்து அவர் பேசுகையில் ;

பெண்கள் தங்கள் பாதுகாப்பைக் கவனத்தில் கொள்ள வேண்டும். எங்கே செல்ல வேண்டும், எங்குச் செல்லக் கூடாது என்று அவர்களுக்கு அறிவுறுத்துவது ஒரு புறம் இருந்தாலும் , ஆண் குழந்தைகளை நாம் எப்படி வளர்க்கிறோம் என்பது தான் மிகவும் முக்கியமானது.

வீடுகளிலும் , பள்ளிகளிலும், சமுதாயத்திலும் ஆண் குழந்தைகள் எதைப் பார்த்து வளர்கிறார்கள் என்பதைக் கவனிக்க வேண்டும். அவர்களுக்கு நல்லதையும் கெட்டதையும் சரியாகக் கற்றுக் கொடுத்தால் மட்டுமே சமுதாயத்தில் பெரிய அளவிலான மாற்றங்களை உருவாக்க முடியும்.

"சிங்கப்பெண் படை - வரவேற்கத்தக்க நல்ல விஷயம்"

சமுதாயத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய , பெண்களுக்கு அறிவுரைகள் வழங்குவதோடு மட்டும் நின்று விடாமல், ஆண் குழந்தைகளையும் சரியான முறையில் வளர்ப்பது மிக மிக அவசியம்.

சினிமா உட்பட அனைத்து துறைகளிலும் பெண்களுக்கான வாய்ப்புகள் அதிகளவில் உள்ளதாகவும் , அதை பெண்கள் எவ்வாறு பயன்படுத்தி , தங்களது திறமையின் மூலம் முன்னுக்கு வருகிறார்கள் என்பதில் தான் அவர்களின் வளர்ச்சி அடங்கியுள்ளது.

சமுதாயத்தில் பெண்களின் நிலையை மாற்ற வீடுகள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அலுவலகங்கள் என அனைத்து இடங்களிலிருந்தும் மாற்றங்கள் தொடங்க வேண்டும்.

எங்களது தலைமுறையினரால் சாதிக்க முடியாத பல விஷயங்களை தற்போதைய Gen Z தலைமுறையினர் செய்து காட்டுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு அதிகமாக இருக்கிறது. மேலும் , தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பிற்காக "சிங்கப்பெண்" படை உருவாக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்க நல்ல விஷயம்.

தொடர்ந்து ஒரு சில பெண்கள் மது போன்ற போதைப் பழக்கத்திற்கு அடிமை ஆவது குறித்த கேள்வியை செய்தியாளர்கள் எழுப்பியதும் பதில் சொல்லாமல் கடந்து சென்றார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks