முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பு: நிபுணர் குழுவின் 4 நாள் விரிவான ஆய்வு இன்று தொடக்கம்!

முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பு: நிபுணர் குழுவின் 4 நாள் விரிவான ஆய்வு இன்று தொடக்கம்!
News Image

தமிழக-கேரள இரு மாநில எல்லையில் அமைந்துள்ளது முல்லைப் பெரியாறு அணை. இந்த அணையின் நீர் மூலம் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்குவது முல்லை பெரியாறு அணை. முல்லை பெரியாறு அணையின் மொத்த நீர்மட்டம் 155 அடி ஆகும் 142 அடி வரை தண்ணீர் தேக்கி கொள்ளலாம் என்றும், பேபி அணையை பலப்படுத்தி விட்டு முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தி கொள்ளலாம் என்றும் கடந்த 2014 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் வரலாற்று மிக்க சிறப்பு தீர்ப்பு அளித்தது.

அணை குறித்து மத்திய நீர் வளக் குழுக்கள் அவ்வப்போது ஆய்வு செய்து வருகிறது. இந்த நிலையில், முல்லைப்பெரியாறு அணையின் பாதுகாப்பு நிலையை விரிவாக ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்புப் பரிசீலனைக் குழு (Comprehensive Safety Evaluation Committee)  நாளை செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் நான்கு நாட்கள் தேக்கடியில் தங்கி, அணைக்கு நேரில் சென்று விரிவான ஆய்வு மேற்கொள்ளவுள்ளது. தேசிய அணைப் பாதுகாப்பு ஆணையத்தின் (NDSA) கீழ் அமைக்கப்பட்டுள்ள இக்குழுவில், அணைப் பாதுகாப்பு, நிலநடுக்கப் பொறியியல், நீர்வள மேலாண்மை உள்ளிட்ட துறைகளில் அனுபவம் பெற்ற நிபுணர்கள் இடம்பெற்றுள்ளனர். குழுவினர் அணையின் கட்டமைப்பு நிலை, பராமரிப்பு மற்றும் வலுப்படுத்தும் பணிகள், அணையின் பல்வேறு முக்கியப் பகுதிகளின் தற்போதைய நிலை உள்ளிட்ட தொழில்நுட்ப அம்சங்களை ஆய்வு செய்ய உள்ளனர்.

பாதுகாப்புப் பரிசீலனைக் குழுவுக்கு பல்ராஜ் ஜோஷி தலைவராக உள்ளார். இவர் முன்னாள் NHPC தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக (Chairman & Managing Director) பணியாற்றியவர்.எம். எல். சர்மா குழுவின் உறுப்பினராக உள்ளார். இவர் IIT Roorkee-யின் Earthquake Engineering துறை பேராசிரியராகவும், International Centre of Excellence for Dams அமைப்பின் தலைவராகவும் உள்ளார். கோபால் தவான், முன்னாள் NHPC Executive Director, குழு உறுப்பினராக இடம்பெற்றுள்ளார்.குல்ஷன் ராஜ், முன்னாள் Ganga Flood Control Commission தலைவர், மற்றொரு உறுப்பினராக உள்ளார். என். சிவகுமார், முன்னாள் Central Soil and Materials Research Station (CSMRS) விஞ்ஞானி, குழுவில் இடம்பெற்றுள்ளார்.மேலும், கேரள அரசின் பிரதிநிதியாக அசுதோஷ் டாஷ் குழுவில் இடம்பெற்றுள்ளார். இவர் ஒடிசா மாநில நீர்வளத்துறையின் முன்னாள் Special Secretary மற்றும் முன்னாள் Engineer-in-Chief ஆவார். இதனால் அணைப் பாதுகாப்பு தொடர்பான பல்வேறு தொழில்நுட்பத் துறைகளில் அனுபவம் பெற்ற நிபுணர்களைக் கொண்ட குழுவாக இந்தப் பாதுகாப்புப் பரிசீலனைக் குழு அமைந்துள்ளது. நாளை செப்டம்பர் 1-ஆம் தேதி தொடங்கும் ஆய்வுக்காக குழுவினர் நான்கு நாட்கள் தேக்கடியில் தங்கி, அணை மற்றும் அதனைச் சார்ந்த பகுதிகளில் நேரடி ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளனர்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks