Education Scheme: கடனில்லை, ரூ.36 லட்சம் வரை நிதியுதவி - கல்வி திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள்

Education Scheme: கடனில்லை, ரூ.36 லட்சம் வரை நிதியுதவி - கல்வி திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள்
News Image

Ambedkar Ayalaga Kalvi Thittam: தமிழ்நாடு அரசின் அம்பேத்கர் அயலக கல்வி திட்டத்தின் முலம் தகுதியான நபருக்கு, ஒவ்வொரு ஆண்டும் அதிகபட்சமாக 36 லட்சம் ரூபாய் வரை நிதியுதவி வழங்கப்படுகிறது.

அம்பேத்கர் அயலக கல்வி திட்டம்:

அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகை திட்டம் மூலம், தகுதியான மாணவர்கள் தங்களது உயர்படிப்பை வெளிநாடுகளில் மேற்கொள்ள தமிழ்நாடு அரசு நிதியுதவி வழங்குகிறது.  இதில் கல்விக்கட்டணம் மட்டுமின்றி மாணவர்களிடன் தங்குமிடம், உணவு உள்ளிட்ட வாழ்க்கை முறை செலவுகளும் அடங்கும். வெளிநாடுகளில் உள்ள முன்னணி பல்கலைக்கழகங்களில் உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி படிப்பை தொடர இந்த திட்டம் உதவுகிறது. ஆதி திராவிடர், பழங்குடியினர் மற்றும் பிற பின் தங்கிய சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கான இந்த திட்டத்தின் மூலம் அதிகபட்சமாக ஆண்டுக்கு 36 லட்சம் ரூபாய் நிதியுதவியாக வழங்கப்படுகிறது.

விண்ணப்பதாரர்களுக்கான தகுதிகள் என்ன?

QS World University Ranking பட்டியலில் முதல் 1000 இடங்களுக்குள் உள்ள வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் முதுகலைப் பட்டம் (Master's Degree) அல்லது முனைவர் ஆராய்ச்சிப் படிப்பில் (Ph.D. / Post Doctoral Research) சேர்க்கை பெற்றிருக்க வேண்டும்

ஒவ்வொரு ஆண்டும் நிர்ணயம் செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கான வயது வரம்பை கவனத்தில் கொள்ள வேண்டும்

நடப்பாண்டு அறிவிப்பின்படி, Ph.D. / Post Doctoral Research மாணவர்கள்  01.04.2026 அன்று 40 வயதை நிறைவு செய்திருக்கக் கூடாது என தெரிவிக்கப்பட்டு இருந்தது

Master's Degree விண்ணப்பதாரர்கள் 01.04.2026 அன்று 35 வயதை நிறைவு செய்திருக்கக் கூடாது என தெரிவிக்கப்பட்டு இருந்தது

குடும்ப ஆண்டு வருமானம் ரூ.12.00 லட்சத்தை மிகாமல் இருக்க வேண்டும்

விண்ணப்பங்கள், மாணாக்கர்கள் சேர்க்கை பெறும் பல்கலைக்கழகங்களின் QS World University Ranking தரவரிசையின் அடிப்படையிலேயே பரிசீலனை செய்யப்படும்

விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்:

வெளிநாட்டு பல்கலைக்கழகத்திலிருந்து பெறப்பட்ட சேர்க்கை கடிதம் University Offer/Admission Letter (Conditional / Unconditional)

சாதிச் சான்றிதழ் (இணைய வழியில் பெறப்பட்டது)

சமீபத்திய குடும்ப வருமானச் சான்றிதழ் (இணைய வழியில் பெறப்பட்டது)

10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு, இளநிலை பட்டப்படிப்பு (UG) மற்றும் முதுநிலை பட்டப்படிப்பு (மதிப்பெண் சான்றிதழ் (தேவைபட்டால்)

இளநிலை / முதுநிலை பட்டப்படிப்புச் சான்றிதழ் (Degree Certificate / Provisional Certificate / Course Completion Certificate)

ஆதார் அடையாள அட்டை

குடும்ப அட்டை

பாஸ்போர்ட்
பெற்றோரின்/ விண்ணப்பதாரரின் சமீபத்திய 3 மாத சம்பளச் சீட்டு நகல். (payslip ஒருவேளை தேவைப்பட்டால்)

பெற்றோர்/ விண்ணப்பதாரரின் வருமான வரி தாக்கல் (ITR) ஆவணங்கள் (தேவைப்பட்டால்)

மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை (UDID Card) (தேவைப்பட்டால்)

சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படம்.

இதையும் படியுங்கள்: DMK TVK: களேபரமான விவாதம் - அராஜகத்தில் ஈடுபட்ட திமுகவினர்? நாஞ்சில் சம்பத் மீது சேர் தூக்கியடிப்பு

படிவங்களை விண்ணப்பிப்பது எப்படி?

விருப்பமுள்ள மற்றும் தகுதியான நபர்கள் https://www.tnadw.tn.gov.in/overseas_scholarship அல்லது https://www.tnadw.tn.gov.in/overseas_scholarship ஆகிய இணையதள முகவரிகளை அணுகுங்கள். முகப்பு பக்கத்திலேயே உள்ள அயலக உயர்கல்வி உதவித்தொகை எனும் ஆப்ஷனை க்ளிக் செய்யவும். இதையடுத்து திறக்கும் விண்ணப்பத்தில் தேவையான விவரங்களை நிரப்பி, வெளிநாட்டுப் பல்கலைக்கழக சேர்க்கை கடிதம் மற்றும் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்யுங்கள். அனைத்தும் சரியாக இருப்பதை உறுதி செய்த பிறகு விண்ணப்பத்தைச் சமர்ப்பித்து, எதிர்கால பயன்பாட்டிற்காக நகலை ப்ரிண்ட் எடுத்துக்கொள்ளவும். விண்ணப்பிப்பது தொடர்பாக ,மாணவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு தீர்வு காண 1800-599-7638 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை அணுகலாம்.

ரூ.131 கோடி நிதியுதவி

நடப்பு 2026-27 நிதியாண்டில் அம்பேத்கர் அயலக உயர்கல்வி திட்டத்திற்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் ஏற்கனவே முடிந்துவிட்டது. இதையடுத்து புதிய விண்ணப்பதாரர்கள் அடுத்த ஆண்டு மட்டுமே இந்த திட்டத்திற்கு விண்ணபிக்க முடியும். கடந்த 2025-26 நிதியாண்டில் சுமார் 83 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக 2026-27 நிதியாண்டிற்கு 131 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அதன் மூலம் 362 பேர் பயனடைந்துள்ளதாகவும் அமைச்சர் வன்னியரசு சட்டமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks