அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான பதற்றம் மீண்டும் அதிகரித்துள்ளது. அமெரிக்கா நேற்று ஈரானியத் தளங்களை தாக்கியது. இதற்கு பதிலடியாக, ஜோர்டானில் உள்ள அமெரிக்கத் தளங்கள் மீது ஈரான் ஒரு கொடூரமான தாக்குதலை நடத்தியது. இதற்கிடையே, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஒரு முக்கிய கூற்றை முன்வைத்துள்ளார். கார்க் தீவை அமெரிக்கா முற்றிலுமாக அழித்துவிட்டதாக அவர் தனது ட்ரூத் சோசியல் பக்கத்தில் இன்று தெரிவித்துள்ளார்.

ட்ரம்ப் பகிர்ந்த வீடியோ

இது குறித்து ட்ரம்ப் வெளியிட்ட பதிவில், ஒரு காணொளியையும் பகிர்ந்தார். அந்த காணொளி அனிமேஷன் செய்யப்பட்டது போல் தெரிகிறது. அதன் தலைப்பில், "கார்க் தீவு முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிட்டது" என்று ட்ரம்ப் கூறியிருக்கிறார்.

பல ஈரானிய தளங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக அமெரிக்கா கூறியுள்ளது. இதற்கிடையே, ஈரான் ஜோர்டான் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. திங்களன்று தங்கள் வான்வெளிக்குள் நுழைந்த 8 ஏவுகணைகளை இடைமறித்ததாக ஜோர்டான் ராணுவம் தெரிவித்துள்ளது.

லராக் தீவின் மீதான அமெரிக்கத் தாக்குதலைத் தொடர்ந்து, ஜோர்டானில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக ஈரானின் ஐ.ஆர்.ஜி.சி. கூறியதை அடுத்து இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.

ஈரானிய தளங்கள் மீதான அமெரிக்கத் தாக்குதல்கள்

ஈரானின் லராக் தீவில் உள்ள இரண்டு ஏவுகணை ஏவுதளங்கள் மீது அமெரிக்க ராணுவம் நேற்று தாக்குதல் நடத்தியது. "இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படையினர் (IRGC) வீரர்கள், ஹார்முஸ் ஜலசந்திக்குள் கடல் கண்ணிவெடிகள் பொருத்தப்பட்ட ராக்கெட்டுகளை ஏவுவதற்குத் தயாராவதைக் கண்டதாக, அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவின் (CENTCOM) செய்தித் தொடர்பாளர் டிம் ஹாக்கின்ஸ் கூறினார்.

அமெரிக்க ராணுவம் அப்பகுதியை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், இந்த முக்கிய கடல் மார்க்கத்தின் வழியாக வர்த்தகக் கப்பல்கள் பாதுகாப்பாக செல்வதை உறுதிசெய்யத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார். நீண்ட காலமாக தேக்கநிலையில் இருந்த அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான போர், தற்போது மீண்டும் தீவிரமடைந்துள்ளது.

இரு தரப்பும் தாக்குதல்களை தொடர்ந்தால், மீண்டும் இது ஒரு தீவிர போராக மாறும் வாய்ப்புள்ளது. ஏற்கனவே அமெரிக்கா-ஈரான் இடையேயான அமைதி ஒப்பந்தம் இழுபறியில் இருக்கிறது. அது ஒரு பக்கம் இருக்க, இரு தரப்பும் ஏதேனும் ஒரு சாக்கை வைத்து தாக்கதல்களையும் நடத்தி வருகின்றன.

இதனால், கச்சா எண்ணெய் விலையும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், தற்போது தொடங்கியுள்ள இந்த பரஸ்பர தாக்குதல், உலக நாடுகளிடையே மீண்டும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Source: Read Full Article