நேபாளம் நாட்டில் உள்ள கோஷி நதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் ஒட்டுமொத்த நேபாளமும் நிலைகுலைந்து போகியுள்ளது. திடீரென ஏற்பட்ட இந்த காட்டாற்று வெள்ளத்தால் ஏராளமான கட்டிடங்களும், பாலங்களும் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.

நேபாள காட்டாற்று வெள்ளம்:

இதில் சுமார் 400க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர். இதுவரை 95 நபர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. இந்த துயரச்சம்பவத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சிலரும் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்காக தமிழ்நாடு அரசு சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,

தமிழர்களை மீட்க உத்தரவு:

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் தமிழர்கள் உள்பட இந்தியர்கள் பலர் காணாமல் போனதாக வரும் செய்திகள் அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்.

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் தமிழர்கள் உள்பட இந்தியர்கள் பலர் காணாமல் போனதாக வரும் செய்திகள் அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்.

இந்த பேரிடரில் காணாமல் போன தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களை விரைந்து மீட்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான உதவிகளை… pic.twitter.com/nriz60tZKy

— CMOTamilNadu (@CMOTamilnadu) August 26, 2026

இந்த பேரிடரில் காணாமல் போன தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களை விரைந்து மீட்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கவும் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு புதுதில்லியில் உள்ள தமிழ்நாடு இல்ல அரசு உயர் அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

அவசர தொலைபேசி எண்கள்:

நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்களுக்கு உதவி தேவைப்படும் நிலையில் அவர்களோ அல்லது தமிழ்நாட்டில் உள்ள அவர்களது உறவினர்களோ தொடர்பு கொள்ள ஏதுவாக அவசர தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மேலும், இந்திய வெளியுறவு அமைச்சகம் மற்றும் நேபாளத்தில் உள்ள இந்தியத் தூதரகம் ஆகியவற்றின் வாயிலாக, தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் குறித்த தகவல்களைப் பெற்று, அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யத் தேவையான நடவடிக்கைகள் விரைந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்கள் அல்லது தமிழ்நாட்டில் உள்ள அவர்களது குடும்பத்தினர் உதவிக்கு உடனடியாக தொடர்பு கொள்ள

இந்தியாவிற்குள் 1800 309 3793 (கட்டணமில்லா அழைப்பு)

வெளிநாடு - 918069009900 ( மிஸ்ட் கால்)

தொடர்புக்கு - 8069009901

தமிழ்நாடு இல்லம், புதுடெல்லி ( கட்டுப்பாட்டு அறை) - 9289516712

இந்த எண்கள் அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Source: Read Full Article