CM Vijay: சிஎம் கடவுளின் குழந்தையா? .. தற்குறின்னு சும்மா சொல்லல.. விஜயை விளாசிய சீமான்!

CM Vijay: சிஎம் கடவுளின் குழந்தையா? .. தற்குறின்னு சும்மா சொல்லல.. விஜயை விளாசிய சீமான்!
News Image

விஜய் படத்திற்கு பிளாக்கில் டிக்கெட் விற்றவன் எல்லாம் ஜனநாயகன் படம் வரும்போது அமைச்சராகி விட்டார் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக சாடியுள்ளார்.

சென்னையில் நேற்று காவிரி உரிமை மீட்டெடுப்பு தொடர்பான அனைத்துக் கட்சி ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது. இதில் பேசிய சீமான், தமிழக வெற்றிக் கழக அரசை கடுமையாக சாடினார்.

அவர் பேசுகையில், “தமிழக முதலமைச்சர் விஜய், கர்நாடகா முதலமைச்சர் டி.கே.ஷிவக்குமாரை ஆகஸ்ட் 3ம் தேதி சந்திக்கப்போவதாக இருந்தது. ஆனால் அங்கு நிலவரம் சரியில்லை என சொன்னதால் விஜய் அந்த பயணத்தை ரத்து செய்தார். அந்த நேரம் கேரளாவில் பெருமழை பெய்தது. வயநாடு வழியே கர்நாடகாவில் உள்ள கபினி அணை நிறைந்தது. நீரை சேமிக்க முடியாததால் கர்நாடகா அரசு காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடுகிறது. இது தமிழ்நாட்டுக்கு கொடுக்க வேண்டும் என்ற உரிமையில் கொடுக்கவில்லை. இயற்கையாகவே அந்த சம்பவம் நடந்து விட்டது.

ஆனால் தமிழ்நாட்டில் இருப்பவர்கள் முதலமைச்சர் கடவுளின் குழந்தை. அதனால் அவர் போக நினைத்ததும் தண்ணீர் தானாக வந்தது என சொல்கிறார்கள். கடவுளின் குழந்தை என்றால் இங்கே ஏன் மழை பெய்யவில்லை. இப்படியெல்லாம் பேசுவதால் தான் உங்களை தற்குறி என சொல்கிறோம். இதை நாங்கள் போகிற போக்கில் சொல்லவில்லை. நன்கு ஆராய்ந்து தான் சொல்கிறோம். மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் வேறு ஒரு இடத்தில் இருக்கிறார். அவரிடம் தூத்துக்குடி துறைமுகம் சம்பந்தப்பட்ட கேள்வியைக் கேட்டால் அதை தூத்துக்குடிக்கு வந்து கேளுங்கள் என சொல்கிறார். அவர் தமிழ்நாட்டுக்கு மீன்வளத்துறை அமைச்சரா அல்லது தூத்துக்குடிக்கு அமைச்சரா என தெரியவில்லை.

நிதியமைச்சர் மரிய வில்சன் பட்ஜெட் படிக்கும்போது எண்களை சொல்ல சிரமப்படுகிறார். சட்டசபையில் அரை மணி நேரத்திற்கு மேலாக அமைச்சர்கள் முதல்வரை புகழ்ந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள். முதல்வர் எழுந்து அதெல்லாம் வேண்டாம் பட்ஜெட்டை படியுங்கள் என்று சொன்னாரா? அமைதியாக உட்கார்ந்தே இருக்கிறார். அதேபோல் எத்தனையோ சம்பவங்களில் மக்கள் இறந்த போது அவர்களுக்கெல்லாம் அரசு வேலை கொடுக்கப்பட்டதா ? இன்று நீங்கள் முதல்வராகாவிட்டால் யார் கொடுத்திருப்பார்கள்? என கரூர் சம்பவத்திலும் சீமான் கேள்வியெழுப்பினார்.

Also Read: Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்

மேலும், நாங்க போராடாத போராட்டம் இல்லை. பார்க்காத வழக்கும் இல்லை. போகாத சிறையும் இல்லை. எங்களை கோயிலுக்கு நேந்து விட்ட மாடு மாதிரி ரோட்டில் போட்டு விடுகிறார்கள். அதேசமயம் தேர்தல் வந்தால் வருகிறவர் போகிறவரை எல்லாம் கோட்டைக்கு அனுப்பி விட்டு எங்களை ரோட்டில் தான் விட்டு விடுகிறீர்கள். நாங்க இங்க பேசுறது சட்டசபைக்குள்ள இருக்கிறவர்களுக்கு புரியுமா என கூட தெரியவில்லை. கோட் படத்துக்கு பிளாக் டிக்கெட் விற்றவன் ஜனநாயகன் படம் வரும்போது அமைச்சராகி விட்டார்கள் என சீமான் விமர்சித்தார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks