நாட்டு நிலவரம் பற்றி பேப்பர் படித்திருந்தால் திமுகவுக்கு தெரிந்திருக்கும் என முதலமைச்சர் விஜய் சட்டமன்றத்தில் பேசிய நிலையில், அதற்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுக்கும் வகையில் பதிலளித்த சம்பவம் சட்டப்பேரவையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

சட்டப்பேரவை இன்று தொடங்கிய நிலையில் முதலில் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மேகதாது அணை, காவிரி டெல்டா பகுதியில் குறுவை சாகுபடி பற்றி திமுக கொண்டு வந்த சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். அப்போது கர்நாடகாவை விட தமிழ்நாட்டில் மேகதாது விவகாரத்தில் தவெக அரசு மெதுவாக செயல்படுகிறது. இதுவரை அனைத்துக் கட்சிக் கூட்டத்தை தவெக கூட்ட மறுக்கிறது. குறுவை சாகுபடிக்கு சிறப்பு தொகுப்பு என சொல்லி ரூ.134 கோடி ஒதுக்கியிருக்கிறீர்கள். அதை எத்தனை பேருக்கு கொடுத்து இருக்கிறீர்கள் என்பதை அவைக்கு தெரிவிக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

Enna Adiiii 🔥🔥#TVK #TVKVijay‌ #CMJosephVijay‌ pic.twitter.com/uvwow1PW16

— BOSS TVK ❤️💛❤️ (@BossTVK) August 7, 2026

இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய முதலமைச்சர் விஜய், “குறுவை சாகுபடிக்கு நிவாரணத்தொகுப்பு பற்றி கேட்டார்கள். நிவாரணத்தொகை ஏற்கனவே வழங்கப்பட்டு விட்டது. அரசியலே நாங்கள் தான் என சொல்லிக் கொள்ளும் திமுகவுக்கு இது எப்படி தெரியாமல் போனது என தெரியவில்லை. முன்ன பின்னர் பேப்பர் படித்திருந்தால் நாட்டில் என்ன நடக்கும் என்பது தெரிந்திருக்கும்” என பதிலடி கொடுத்தார்.

உடனடியாக இதற்கு பதிலடி கொடுத்த உதயநிதி ஸ்டாலின், “சிறப்பு தொகுப்பு என்பது அனைத்து அரசும் கொடுக்கக்கூடிய தொகை தான். இப்போது வறட்சி நிவாரண நிதியைத் தான் விவசாயிகள் கேட்கிறார்கள். இது இரண்டிற்கும் முதலில் வித்தியாசம் தெரிந்திருக்க வேண்டும். இதனை தெரிந்துக் கொள்ள காலையில் பேப்பர் படித்திருந்தால் மட்டும் போதாது. அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி விவசாயிகளுடன் கலந்து பேசி கோரிக்கைகள் என்னவென்று தெரிந்துக் கொள்ள வேண்டும்” என தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து பேசிய அவை முன்னவரான அமைச்சர் செங்கோட்டையன், எதிர்க்கட்சி தலைவர் வறட்சி நிவாரணம் பற்றி சொன்னார். செப்டம்பர் இறுதி வரை பார்த்து விட்டு வறட்சி நிவாரணம் வழங்கப்படும் என்பதை தெரிவிக்க விரும்புகிறேன் என தெரிவித்தார். இதனால் சட்டப்பேரவையில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Source: Read Full Article