CM Joseph Vijay: பெரம்பூரில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை.. 7 புதிய செவிலியர் கல்லூரிகள்.. அறிவிப்புகளை அள்ளி வீசிய முதலமைச்சர்!

CM Joseph Vijay: பெரம்பூரில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை.. 7 புதிய செவிலியர் கல்லூரிகள்.. அறிவிப்புகளை அள்ளி வீசிய முதலமைச்சர்!
News Image

முதலமைச்சரின் இலவச மருத்துவ சிகிச்சைக்கான மருத்துவக் காப்பீட்டுத் தொகை ரூ.25 லட்சமாக உயர்த்தப்படுவதாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் இன்று மானியக்கோரிக்கை மீதான விவாதம் தொடங்கும் முன் முதலமைச்சர் விஜய் விதி எண் 110ன் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி பால் கொள்முதல் விலை உயர்வு, அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் மக்கள் பணி செய்ய இலவச கார் என பல அறிவிப்புகள் வெளியானது. அப்படியான சுகாதாரத்துறையிலும் அறிவிப்புகளை வெளியிட்டார்.

முதலமைச்சர் விஜய் வெளியிட்ட அறிவிப்புகள்

வடசென்னை மக்களுக்கு உயர்தர மருத்துவ சேவை எளிதில் கிடைக்க பெரம்பூரில் ரூ.300 கோடி மதிப்பீட்டில் 400 படுக்கை வசதிகள் கொண்ட உலக தரத்திலான பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும்.

முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் இலவச மருத்துவ சிகிச்சைக்கான மருத்துவக் காப்பீட்டுத் தொகை ஆண்டொன்றுக்கு, ரூபாய் 5 லட்சத்திலிருந்து ரூபாய் 25 லட்சமாக உயர்த்தப்படும்.

திருநங்கைகளுக்கான மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை சேவைகள் கூடுதலாக சென்னை ஸ்டான்லி மருத்துவமனை, திருநெல்வேலி, தூத்துக்குடி, செங்கல்பட்டு, திருவாரூர், தருமபுரி, கன்னியாகுமரி ஆகிய மாவட்ட மருத்துவமனைகளில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும்.

அரசு மருத்துவக் கல்லூரிகளில் ரூபாய் 351 கோடி மதிப்பீட்டில் கூடுதல் மாணவர் சேர்க்கை இடங்கள் உருவாக்கப்படும்.  தரமான மருத்துவ சேவைக்குத் தேவையான செவிலியர், மருத்துவியல் மற்றும் துணை மருத்துவப் பணியாளர்களை உருவாக்கும் வகையில் 6,098 கூடுதல் மாணாக்கர் இடங்கள் உருவாக்கப்படும்.

தமிழ்நாட்டில் 7 புதிய அரசு செவிலியர் கல்லூரிகள் தொடங்கப்படும். ரேடியோ கதிர்வீச்சு சிகிச்சை, Linear Accelerator (LINAC-நேர்க் கதிர்வீச்சு), கதிர்வீச்சு சிகிச்சை, நவீன கருவிகள், இலக்கு மற்றும் நோய் எதிர்ப்பு சிகிச்சைகளுக்காக, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு ரூ.106.17 கோடி வழங்கப்படும்.

1.22 லட்சம் பெண்களுக்கு HPV DNA பரிசோதனை தருமபுரி, விழுப்புரம், திருவண்ணாமலை, பெரம்பலூர் மற்றும் அரியலூர் ஆகிய மாவட்டங்களில் ரூபாய் 8.70 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும். மருத்துவர்களுக்கு பயிற்சியும், நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து ஆதரவும் ரூ.2.77 கோடிஅளிக்கப்படும்.

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் 471 கோடியே 80 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் G+14 தளங்களுடன் ஒருங்கிணைந்த புற்றுநோய் சிகிச்சைப் பிரிவு அமைக்கப்படும்.

முதற்கட்டமாக மதுரை ராஜாஜி மருத்துவமனையில் ரூபாய் 84 கோடியில் G+ 8 தளங்களுடன் மண்டல புற்றுநோய் மையம் தொடங்கப்படும்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks