CM விஜய்க்கு அறிவில்லையா? என சீண்டிய DMKவினர்..! சீன் போட்டாரா ஸ்டாலின்? என TVK பதிலடி

CM விஜய்க்கு அறிவில்லையா? என சீண்டிய DMKவினர்..! சீன் போட்டாரா ஸ்டாலின்? என TVK பதிலடி
News Image

DMK TVK: சட்டப்பேரவையில் நடைபெற்று வரும் மானியக் கோரிக்கை தொடர்பாக, சமூக வலைதளங்களில் திமுக மற்றும் தவெகவினர் இடையே வார்த்தை மோதல் வெடித்துள்ளது.

ஆன்லைனில் வெடித்த வார்த்தை போர்:

தமிழ்நாடு அரசின் பட்ஜெட் கூட்டத்தொடரின் ஒரு பகுதியாக, சட்டப்பேரவையில் மானியக்கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது. துறை சார்ந்த கேள்விகளுக்கு அந்தந்த  அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர். ஆனால், நகராட்சி நிர்வாகம் உள்ளிட்ட முதலமைச்சர் விஜய் கவனித்து வரும் இலாகாக்கள் தொடர்பான பிரச்னைகள், அவர் பதில் அளிக்காமல் ராஜ்மோகன் போன்ற பொறுப்பு அமைச்சர்கள் பதிலளிக்கின்றனர். இதனை குறிப்பிட்டு முதலமைச்சர் பேரவையில் இருக்கும் போதே, வேறொரு அமைச்சர் ஏன் முதலமைச்சரின் துறைகள் மீதான விவாத பொறுப்பை ஏற்க வேண்டும் என திமுகவினர் கேள்வி எழுப்புகின்றனர். இதனால் எதிர்க்கட்சியினருக்கும், ஆளும் தவெகவினருக்கும் இடையே இணையத்தில் வார்த்தை மோதல் வெடித்துள்ளது.

CM விஜய்க்கு அறிவில்லையா?

இதுதொடர்பான பதிவுகளில், “முதலமைச்சரின் இத்தகைய செயல்பாடுகள் தேவையில்லாமல் பல்வேறு கேள்விகளை எழுப்பிவிடும். தனக்கு அந்த துறையின் மீதான போதுமான அறிவு இல்லை என்று முதல்வர் நினைக்கிறாரா… அல்லது தன்னால் அந்த அமைச்சர் அளவிற்கு எதிர்க்கட்சிகளை சிறப்பாக சமாளிக்க முடியாது என்று நினைக்கிறாரா… அல்லது இதையெல்லாமா நாம் பேசிக்கொண்டு இருக்க வேண்டும் என நினைக்கிறாரா… அல்லது அந்த துறைக்கான அமைச்சர் பொறுப்பு ஏற்கனவே மாற்றப்பட்டுவிட்டதா.. என்றெல்லாம் தேவையற்ற பல கேள்விகளை இது எழுப்பிவிடும் வாய்ப்புண்டு” என கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

ஸ்டாலின் என்ன செய்து கொண்டிருந்தார்?

திமுகவின் விமர்சனங்களுக்கு பதிலளித்து வரும் தவெகவினர், “கடந்த ஐந்தாண்டு கால திமுக ஆட்சியில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அப்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் இருந்தது.  ஒரு நாளும் அந்த துறை சார்ந்து அவர் மானியக் கோரிக்கை தாக்கல் செய்ததும் இல்லை. புதிய அறிவிப்புகளும் வெளியிட்டதும் இல்லை. உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் கூறியதும் இல்லை சமூக நலத்துறை அமைச்சராக இருந்த கீதா ஜீவனே மாற்றுத்திறனாளிகள் நலத்துறையை முழுமையாக பார்த்துக் கொண்டார்.  இப்போது உங்களுக்கு எழும் அடுக்கடுக்கான கேள்விகள் அப்போது ஏன் எழவில்லை என்பது தான் எனக்கு ஏற்படும் கேள்வி” என வினவி வருகின்றனர்.

இரண்டும் ஒன்றா? என திமுக கேள்வி

தவெகவின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் திமுகவினர், “மாற்றுத்திறனாளி நலத்துறை சமூகநலத்துறையோடு பிணைந்த ஒன்று அதனால் கீதா ஜீவன் பதிலளித்ததில் தவறில்லை. ஆனால் நகராட்சி நிர்வாகம் அப்படி இல்லை என குறிப்பிடுகின்றனர். மேலும்,  அப்போது ஏன் கேட்கவில்லை, இப்போது ஏன் கேட்கிறீர் என்பது, தவறுள்ளவர்கள் தப்பிக்கும் குறுகிய வழி” என குற்றம்சாட்டுகின்றனர்.

இதையும் படியுங்கள்: TASMAC: இன்னும் முடியல, அடுத்த அதிரடி ரெடி..! டாஸ்மாக்கை கைகழுவ CM விஜய் முடிவு? அசெம்ப்ளியில் அறிவிப்பு?

ஸ்டாலின் விளம்பரம் தேடினாரா?

சமூக நீதித்துறையுடன் பிண்ணி பிணைந்தது எனில் மாற்றுதிறனாளிகள் நலத்துறையையும் கீதா ஜீவனிடமே ஒப்படைத்து இருக்கலாமே? என தவெகவினர் களமாடி வருகின்றனர். மேலும், “தன் தந்தை உருவாக்கிய துறைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறேன் என வெற்று விளம்பரங்களை தேடிக்கொள்வதற்காக பெயரளவில் மட்டுமே அந்த துறையை ஸ்டாலின் தன் வசம் கொண்டிருந்தாரா? நிர்வாக ரீதியாக குறைகளை சொன்னால் செவிகொடுத்து கேட்டு தீர்வுகளை காண தவெக அரசு தயாராக உள்ளது. ஆனால் எதையாவது குறை சொல்ல வேண்டும் என்பதற்காக சில பிரச்னைகளை எழுப்புவது, திமுகவினர் மட்டும் தான் புத்திசாலிகள் எதிர்தரப்பினருக்கு அறிவே இல்லை என்பதை போன்று அடாவடித்தனமான செயல்பாடுகளால் தான் இன்று அக்கட்சியின் தலைவரே தோற்கடிக்கப்பட்டுள்ளார் என்பதை அறிவாலயம் தரப்பினர் இன்னும் உணர்ந்ததாக தெரியவில்லை” என தவெகவினர் அறிவுறுத்தி வருகின்றனர்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks