இந்தியாவில் ChatGPT-யில் விளம்பரங்கள்: இலவச சேவைக்கு புதிய திருப்பம்!விபரம் இதோ..

இந்தியாவில் ChatGPT-யில் விளம்பரங்கள்: இலவச சேவைக்கு புதிய திருப்பம்!விபரம் இதோ..
News Image

உலகளவில் gen ai தொழில்நுட்பத்தை பெரும்பாலான மக்களிடம் கொண்டு சேர்த்தது ChatGPT தான். ஓபன் ஏஐ (OpenAI) நிறுவனத்தின் ChatGPT கால மாற்றத்துக்கு ஏற்ப பல அப்டேட்களை கொண்டு வருகிறது. அந்த வகையில் இந்தியாவில் ChatGPT விளம்பரங்களை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.

செயற்கை நுண்ணறிவு துறையில் உலகளவில் முன்னணி நிறுவனமாக விளங்கும் ஓபன் ஏஐ, தனது புகழ்பெற்ற ChatGPT செயலியில் விளம்பரங்களை வெளியிடும் திட்டத்தை இந்தியாவிலும் அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது. இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்ட நபர்கள் பயன்படுத்தும் ChatGPT-யின் இலவச மற்றும் 'Go' சந்தாதாரர் திட்டங்களில் இந்த விளம்பரங்கள் காட்டப்படும். ChatGPT Plus, ChatGPT Pro, பிசினஸ் , என்டர்பிரைஸ் மற்றும் எஜுகேஷன் போன்ற கட்டண சந்தாக்களை பயன்படுத்துபவர்களுக்கு வழக்கம் போல விளம்பரங்கள் இல்லாமல் தடையற்ற சேவை தொடரும். இலவசமாக பயன்படுத்துவோருக்கு விளம்பரங்கள் காட்டப்படும். இந்தியாவில் இந்த சேவை தொடங்கும் முதல் வாரத்திலேயே 50-க்கும் மேற்பட்ட முன்னணி பிராண்டுகள் ChatGPT-யில் விளம்பரம் செய்ய முன்வந்துள்ளன.

இதற்காக OpenAI நிறுவனம், இந்தியாவில் பிரபல விளம்பர நிறுவனங்களான WPP மற்றும் Omnicom ஆகியவற்றுடன் கூட்டு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இது ஒரு பிரத்யேக ஒப்பந்தம் அல்ல என்றும், மற்ற விளம்பர ஏஜென்சிகளுடனும் தாங்கள் தொடர்ந்து இணைந்து பணியாற்றுவோம் என ஓபன் ஏஐ கூறியுள்ளது. பெரிய நிறுவனங்கள் மட்டுமின்றி, சிறு வணிகங்கள் மற்றும் வளர்ந்து வரும் இந்திய பிராண்டுகளும் பயனடையும் வகையில், செப்டம்பர் 4-ஆம் தேதி முதல் ChatGPT Ads Manager சேவை இந்தியாவில் தொடங்கப்படவுள்ளது. இதன் மூலம் வணிகங்கள் தாங்களே நேரடியாக விளம்பரங்களை வாங்கிக் கொள்ளலாம். இந்த விளம்பரங்களுக்கான குறைந்தபட்ச தினசரி பட்ஜெட் 725 ரூபாயில் இருந்து தொடங்குகிறது.

பயனர்கள் கேட்கும் கேள்விகளுக்கு ChatGPT அளிக்கும் பதிலுக்கு கீழே, அதற்கு ஏற்ற தொடர்புடைய ஸ்பான்சர் செய்யப்பட்ட தயாரிப்புகள் அல்லது சேவைகள் விளம்பரங்களாக தோன்றும். இந்த விளம்பரங்கள் தெளிவான முறையில் Sponsored என லேபிள் செய்யப்பட்டிருக்கும். எனவே ChatGPT வழங்கும் பதிலுக்கும் இந்த விளம்பரத்திற்கும் இடையே பயனர்களால் எளிதாக வித்தியாசத்தை புரிந்து கொள்ள முடியும். மேலும் விளம்பரதாரர்களுக்கு பயனர்களின் தனிப்பட்ட கலந்துரையாடல்கள், கலந்துரையாடல் வரலாறு அல்லது தனிப்பட்ட விவரங்கள் எங்குமே வழங்கப்படாது என்றும் எந்தவொரு பயனர் தரவையும் விளம்பரதாரர்களுக்கு விற்பனை செய்வதில்லை என்றும் ஓபன் ஏஐ நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது.

மாறாக, விளம்பரதாரர்களுக்கு Impressions மற்றும் Clicks போன்ற ஒட்டுமொத்த தரவுகள் மட்டுமே வழங்கப்படுமாம். பயனர்கள் தங்களுக்கு பிடிக்காத விளம்பரங்களை நிராகரிக்கலாம் என கூறியுள்ளது. 18 வயதுக்குட்பட்டவர்கள் அல்லது குறைந்த வயதுடையவர்கள் என கண்டறியப்பட்ட கணக்குகளுக்கு விளம்பரங்கள் காட்டப்படாது. மேலும், மனநலம் மற்றும் அரசியல் போன்ற தலைப்புகளின் அருகில் விளம்பரங்கள் தோன்றாது.

உலகளவில் AI மாடல்களை உருவாக்குவதற்கும் இயக்குவதற்கும் ஆகும் செலவுகளை சமாளிக்க இந்த விளம்பர வருவாய் வழிவகை செய்யும் என ஓபன் ஏஐ தெரிவித்துள்ளது. இதன் மூலம் பயனர்களுக்கு இலவச மற்றும் குறைந்த விலை சேவைகளை தொடர்ந்து வழங்க முடியும் என்கிறது. அமெரிக்கா, ஐரோப்பா, மெக்சிகோ, பிரேசில், ஜப்பான் மற்றும் தென் கொரியா போன்ற நாடுகளில் விளம்பர திட்டங்களை விரிவுபடுத்தியதைத் தொடர்ந்து, தற்போது இந்தியாவிலும் இந்த சேவை அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்துள்ளது. வரும் காலங்களில் பயனர்கள் மற்றும் விளம்பரதாரர்களின் கருத்துகளுக்கு ஏற்ப மேலும் பல விளம்பர வடிவங்களும் அறிமுகப்படுத்தப்படும் என OpenAI கூறுகிறது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks