Car Accident: 7 பைக்குகளை முட்டி மோதிய சிறுவன், காருக்கு அடியில் சிக்கிய முதியவர் - நையப்புடைத்த பொதுமக்கள்

Car Accident: 7 பைக்குகளை முட்டி மோதிய சிறுவன், காருக்கு அடியில் சிக்கிய முதியவர் - நையப்புடைத்த பொதுமக்கள்
News Image

Car Accident: சிறுவன் ஓட்டி வந்த கார் 7 பைக்குகளை முட்டி மோதியதோடு, முதியவர் ஒருவரும் தூக்கி வீசப்பட்ட சம்பவம் ஐதராபாத்தில் அரங்கேறியுள்ளது.

பயங்கர விபத்து - சிசிடிவி காட்சிகள்

ஐதராபாத் நகரின் போர்பந்தா பகுதியில் ஓட்டுனர் உரிமம் இல்லாத 17 வயது சிறுவன், மாருதி பலேனோ காரை ஓட்டி வந்து சாலையோரம் நிறுத்தி வைத்து இருந்த 7 இருசக்கர வாகனங்களை முட்டி மோதியுள்ளார், தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த சகோதரர்கள் மீதும் போது, அவர்கள் இருவருமே தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்துள்ளனர்.  இதுதொடர்பான சிசிடிவி காட்சிகளில் சிறுவனின் கட்டுப்பட்டை இழந்த கார் சாலையில் தறிகெட்டு ஓடி, வாகனங்களை இடித்து தள்ளிய பிறகு இரண்டு பேர் மீது மோதியதும் பதிவாகியுள்ளது.

#Telangana #Hyderabad

A 17-Year-old #Minor Allegedly lost control of a #Rentedcar in #KarmikaNagar on Sunday, injuring two brothers on their way to #Church and damaging seven parked #Motorcycles#MadhurNagar Police have registered a #Case & are investigating.@hydcitypolice pic.twitter.com/FUrc0jiOLv
— Gummalla Lakshmana (@GUMMALLALAKSHM3) August 2, 2026

உறைய வைக்கும் சிசிடிவி காட்சிகள்

இதுதொடர்பான சிசிடிவி காட்சிகளின்படி, கார் தறிகெட்டு வருவதை கண்டதும், எதிர்திசையில் தனது வயது முதிர்ந்த சகோதரருடன் இருசக்கர வாகனத்தில் வந்தவர் சாலையோரம் ஒதுங்கியுள்ளார். இதனிடையே, கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து நிறுத்தப்பட்டு இருந்த இருசக்கர வாகனங்கள் மீது மோதியதோடு, சாலையோரம் ஒதுங்கிய சகோதரர்கள் மீதும் பாய்ந்துள்ளது. இதில் வாகனத்தை ஓட்டி வந்தவர் மீது காரின் பக்கவாட்டு அமைப்பு மட்டும் உரசி கீழே தள்ளியுள்ளது. அதேநேரம், இருசக்கர வாகனத்தின் பின்புறம் அமர்ந்து இருந்த முதியவர் மீது காரின் முன்பக்கம் முழுமையாக மோதி தூக்கிவீசப்பட்டுள்ளார். அதோடு, ஒட்டுமொத்த காரும் அவர் மீது ஏறிய நின்ற நிலையில் நகர முடியாமல் வாகனங்களுக்கு மேலே சிக்கிக் கொண்டது.

காரை தூக்கி முதியவரை மீட்ட பொதுமக்கள்

விபத்து தொடர்பான பெரும் சத்தத்தை கேட்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக அங்கு குவிந்தனர். கூட்டாக சேர்ந்து காரை மேல்நோக்கி தூக்கி சக்கரத்தின் அடியில் சிக்கியிருந்த முதியவரை காப்பாற்ற முயன்றனர். அப்போது காரை ஓட்டி வந்த 17 வயது சிறுவன் கருப்பு சட்டை அணிந்தபடி வாகனத்தில் இருந்து வெளியே வந்துள்ளான். பின்பு காரை சுற்றி பார்த்தபடி சென்று பொதுமக்களுடன் சேர்ந்து சக்கரத்தின் கீழ் சிக்கியிருந்த முதியவரை வெளியே இழுக்க உதவியுள்ளான். பின்பு, சூழல் மோசமாவதை உணர்ந்ததும் எதுவுமே நடைபெறாததை போன்று மெதுவாக நடந்து சம்பவ இடத்தில் இருந்து தப்பிக்க முயன்றுள்ளான்.

இதையும் படியுங்கள்: TN Cabinet: காங்., ஷாக்.. ”4 பேர் நீக்கம், 3 பேர் இலாகா மாற்றம், புதுசா 3 பேர்” CM விஜய் அமைச்சரவை மாற்றம் அப்டேட்

பொளந்துகட்டிய பொதுமக்கள்

அந்த சிறுவன் தப்பித்துச் செல்வதை கண்ட அங்கிருந்த இளைஞர் ஒருவர் பார்த்ததும் ஓடிச் சென்று மடக்கி பிடித்தார். சரமாரியாக தாக்கியபடியே மீண்டும் சம்பவ இடத்திற்கு இழுத்து வந்துள்ளார். அவருடன் சேர்ந்து மேலும் சிலரும் சிறுவனை நையப்புடைத்துள்ளனர். இதனிடியே தகவலறிந்து வந்த போலீசார் காரை பறிமுதல் செய்து, வழக்குப்பதிவு செய்துள்ளனர். காவல்துறையின் தகவலின்படி, வாகனம் சுத்தம் செய்யப்பட்ட பிறகு அதனுள்ளேயே இருந்த சாவியை எடுத்துக்கொண்டு அந்தச் சிறுவன் காரை எடுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks