அன்பு அக்கா திரிஷாவிற்க்கு தமிழக அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட முதல் சங்கம் - மதுரையில் திரிஷா நற்பணி மன்றத்தினர் ஒட்டியுள்ள போஸ்டர்கள்.

கிரேஸ் குறையாத திரிஷா

தமிழ் சினிமாவில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகையாக கொஞ்சம் கூட ரசிகர்கள் மத்தியில் அவருக்கான கிரேஸ் குறையாமல் அன்று பார்த்தது போலவே இன்றும் மின்னும் ஒரு நடிகை திரிஷா. 96 திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்த துவங்கிய திரிஷா மீண்டும் முன்னணி நடிகையின் இடத்தை பிடித்து விட்டார். நடிகை திரிஷாவுக்கு முன்னணி நடிகை என்ற அந்தஸ்து உடனே கிடைத்துவிடவில்லை. பல படங்களிலும் துணை நடிகையாக இருந்து பின்னர் மெல்ல மெல்ல நடிப்பு திறனை மெருகேற்றி படிப்படியாக வளர்ந்தவர். அவரின் திரை பயணத்தின் ஆரம்ப காலகட்டம் முதலே ஏராளமான அவதூறுகளை சந்தித்தே திரைத்துறையில் பயணித்து வருகிறார். பல நடிகர்களுடன் சேர்த்து வைத்து கிசுகிசுக்கப்பட்டார். திரிஷாவின் ஆபாச வீடியோ என இணையத்தில் வெளியாகி அவர் மீது அவதூறுகளை பரப்பியது. தொடர்ந்து நடிகர் மன்சூர் அலிகான் மேடையில் நடிகை திரிஷா பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியது பூதகரம் எடுத்து வழக்குப்பதிவு வரை சென்றது. மிகப்பெரிய சர்ச்சைக்கு பிறகு மன்சூர் அலிகான், திரிஷாவிடம் மன்னிப்பு கேட்டார். இப்படி பல்வேறு சர்ச்சைகள் கடந்த வந்துகொண்டிருக்கும் திரிஷாவிற்கு மதுரையில் போஸ்டர் ஒட்டியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலுநாச்சியாரின் படம் மற்றும் திரிஷா படங்களும் இடம்பெற்றுள்ளது

தமிழ் சினிமா உலகின் பிரபல நடிகையான திரிஷா தற்போது பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வரும் நிலையில் அரசியலுக்கு வருவாரா ? என்ற பல்வேறு கேள்விகளும் இருந்துவருகிறது. இந்நிலையில் மதுரையில் முதன்முறையாக திரிஷா நற்பணி மன்றம் தொடங்கப்பட்டு ரசிகர் மன்றத்தின் சார்பில் மதுரை முழுவதிலும் போஸ்டர் ஒட்டப்பட்டு திரிஷாவிற்கு அரசியலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழக வீரமங்கை வேலுநாச்சியார் வழியில் தமிழக சங்க வரலாற்றில் முதல் முறையாக எங்கள் அன்பு அக்கா திரிஷா விற்க்கு தமிழக அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட முதல் சங்கம் என்ற வாசகத்தோடும், எந்த ஒரு அரசியல் கட்சியும் ஆரம்பிக்கும் முதல் மண் எங்கள் மதுரை, என்றும் மதுரை மீனாட்சி தாய் ஆசிர்வாதத்தால்

என்ற வாசகங்களுடன் போஸ்டர் ஒட்டியுள்ளனர். அந்த போஸ்டரின் வீரமங்கை வேலுநாச்சியாரின் படம் மற்றும் திரிஷா படங்களும் இடம்பெற்றுள்ளது

Source: Read Full Article