தமிழ்நாட்டின் தலைநகரமாக திகழ்வது சென்னை. சுமார் 1 கோடி மக்கள் தொகை கொண்ட சென்னை. தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் இல்லாத பல்வேறு வளர்ச்சியும், வாய்ப்புகளும் சென்னையில் இருந்தாலும் அதே அளவு பல்வேறு பிரச்சினைகளும் உள்ளது.

சென்னையின் பிரதான சிக்கல்:

சென்னை சமீபகாலமாக சந்திக்கும் மிகவும் முக்கியமான பிரச்சினை மழை காலங்களில் சாலைகளில் தேங்கும் மழைநீரும், அதனால் உருவாகும் பெரும் போக்குவரத்து நெருக்கடியும் ஆகும். சென்னையின் போக்குவரத்து நெருக்கடியை குறைப்பதற்காக மெட்ரோ ரயில் நிலையங்களும், வழித்தடமும் அமைக்கும் பணிகளும், பால பணிகளும் பல இடங்களில் நடைபெற்று வருகிறது.

போக்குவரத்து நெரிசல்:

புதியதாக அமைந்துள்ள தவெக அரசுக்கு பல்வேறு சவால்கள் அவர்களின் முன்பாக உள்ள நிலையில், சென்னையை அச்சுறுத்தும் பெருமழை மிகவும் பிரதானமாக உள்ளது. வானிலை மாற்றத்தால் கடந்த சில நாட்களில் அவ்வப்போது பெய்யும் மழைக்கே சென்னையின் சாலைகளில் ஆங்காங்கே மழை நீர் தேங்கிவிடுகிறது. இதனால், போக்குவரத்து நெருக்கடி நிரம்பிய காலை மற்றும் மாலை, இரவு நேரங்களில் வழக்கத்தை விட அதிக போக்குவரத்து நெரிசல் உண்டாகி வருகிறது.

சென்னையைப் பொறுத்தமட்டில் அக்டோபருக்கு பிறகே அதிக மழைப்பொழிவு இருப்பது வழக்கம். குறிப்பாக, டிசம்பர் மாத காலகட்டத்தில் பெருமழை பெய்வது வழக்கமாக உள்ளது. அதுபோன்ற சமயத்தில் மொத்த சென்னையும் மிதப்பதும் வாடிக்கையாக உள்ளது.

தீர்வு காணுமா தவெக அரசு?

புதியதாக அமைந்துள்ள தவெக அரசு தற்போது சென்னையை பெருமழை பெய்தால் அதிலிருந்து காப்பது எப்படி? என்ற திட்டத்தை வகுக்க வேண்டியது அவசியமாக உள்ளது. தற்போது அவ்வப்போது பெய்து வரும் மழை அதன் அவசியத்தை உணர்த்தி வருகிறது.

சென்னையின் பல்வேறு நீர்வழித்தடங்கள் ஆக்கிரமிப்புகளாலும், கடலுக்குச் செல்லும் கால்வாய்கள் பலவும் முறையாக தூர்வாரப்படாமலும் இருக்கிறது. 2016 பெருவெள்ளத்திற்கு பிறகு கூவம், அடையாறு கரையோர ஆக்கிரமிப்புகள் பெரும்பாலும் அகற்றப்பட்டு வந்தாலும் தற்போதும் சில இடங்களில் ஆக்கிரமிப்புகள் இருப்பதாக குற்றச்சாட்டு உள்ளது. அதை உடனடியாக அகற்றினால் மட்டுமே சென்னையின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

மோசமான சாலைகள்:

இதுமட்டுமின்றி, சென்னையின் பல இடங்களில் சாலைகளில் பள்ளமும், மேடும் பரவலாகவே காணப்படுகிறது. பிரதான சாலையான அண்ணாசாலையில் சைதாப்பேட்டை, நந்தனம், தேனாம்பேட்டை போன்ற பல இடங்களில் சாலைகள் சேதம் அடைந்துள்ளது. இதனால், இதற்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் சாலைகளையும் தரமான முறையில் செப்பனிட முதலமைச்சர் விஜய் உடனடி உத்தரவிட வேண்டியது அவசியமாகிறது.

தவெக ஆட்சிக்கு மிகப்பெரிய சவாலாக மாறியுள்ள சென்னை பெருமழை மற்றும் மழைக்கால போக்குவரத்து நெருக்கடியை முறையாக விஜய் கையாண்டால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறுவார்.

Source: Read Full Article