மருத்துவமனையா... எலி பொந்தா?” குழந்தையை பாதுகாப்பதா? தூங்குவதா? - மகப்பேறு வார்டில் அலறும் தாய்மார்கள்

மருத்துவமனையா... எலி பொந்தா?” குழந்தையை பாதுகாப்பதா? தூங்குவதா? - மகப்பேறு வார்டில் அலறும் தாய்மார்கள்
News Image

திருப்பத்தூர்: வாணியம்பாடி அரசு மருத்துவமனையின் மகப்பேறு பிரிவில் எலிகள் சுற்றி திரியும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகரின் மைய பகுதியில் அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது.இந்த மருத்துவமனை பழைய கட்டிடத்தின் பின்புறம் 6 மாடிகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டப்பட்டு செயல்பட்டு வருகிறது. ஆனால் மகப்பேறு மருத்துவ பிரிவு, குழந்தைகள் பிரிவு ஆகியவை  மட்டும் நுழைவாயிலில் உள்ள பழைய கட்டிடத்தில் இயங்கி வருகிறது. பழைய கட்டிடத்தில் உள்ள உள்நோயளிகள் பிரிவை புதிய கட்டிடத்திற்கு மாற்றிவிட்டு தற்போது உள்நோயாளிகள் பிரிவு மகப்பேறு பிரிவாக செயல்பட்டு வருகிறது.இந்த பிரிவில் வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த தாய்மார்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், அந்த மகப்பேறு பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள தாய்மார்கள் மற்றும் நோயாளிகளை அச்சுறுத்தும் வகையில் அதிக அளவில் எலிகள் சுற்றி திரிகிறது. இதனால்  தாய்மார்கள் அச்சத்திலேயே தங்கள் சிசுக்களை பராமரிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அந்த மருத்துவமனை பழைய கட்டிடத்தில் ஆங்காங்கே உள்ள துளைகள் வழியாக எலிகள் மகப்பேறு பிரிவுக்குள் செல்வதாக கூறப்பகிறது.

தற்போது மகப்பேறு பிரிவில் எலிகள் சுற்றி திரியும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குழந்தைகள் சிசுக்கள் உள்ள இந்த மகப்பேறு பிரிவை பாதுகாப்பான கட்டிடத்துக்கு மாற்ற வேண்டும் அல்லது அங்கு எலிகள் உள்ளே செல்லாதவாறு பாதுகாப்பு ஏற்பாடுகளை ஏற்படுத்த வேண்டும் என்று நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks