ஆஸ்திரேலியா முதல் ஜெர்மனி வரை.. முதலமைச்சர் விஜய் முன்பு அக்ரிமென்ட் போட்ட டாப் 10 கம்பெனி இதுதான்!

ஆஸ்திரேலியா முதல் ஜெர்மனி வரை.. முதலமைச்சர் விஜய் முன்பு அக்ரிமென்ட் போட்ட டாப் 10 கம்பெனி இதுதான்!
News Image

முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று சென்னையில் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த முதலீட்டாளர் மாநாட்டில் 67 ஆயிரத்து 452 கோடி ரூபாய் உறுதியளிக்கப்பட்ட முதலீட்டில் 1 லட்சத்து 6 ஆயிரத்து 998 நபர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் வகையில், 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

புரிந்துணர்வு மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களில் சில முக்கிய திட்டங்கள் என்னென்ன? என்பதை காணலாம்.

1. ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்:

தூத்துக்குடியில் ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம் இந்தியாவின் முதல் தனியார் சுற்றுப்பாதை ஏவுகலன் தயாரிப்பு நிறுவனமாக, ஏவுகலன்களின் உற்பத்தி, சேமிப்பு, ஒருங்கிணைப்பு மற்றும் சோதனை வசதிகளை அமைக்க உள்ளது. இதற்காக ரூபாய் 250 கோடி ரூபாய் முதலீடு செய்து 500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட உள்ளது.

2. அக்னிகுல் காஸ்மோஸ்:

இந்தியாவின் முதல் தனியார் மீண்டும் பயன்படுத்தக்கூடிய திரவ உந்துவிசை ஏவுகலன் தயாரிப்பு நிறுவனமாக மீண்டும் பயன்படுத்தக்கூடிய திரவ உந்துவிசை  ஏவுகலன்களின் ஒருங்கிணைப்பு மற்றும் தயாரிப்பு வசதிகளை அமைக்க உள்ளது. இதற்காக 400 கோடி ரூபாய் முதலீடு செய்து 1500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட உள்ளது.

3. அல்ட்ராவயலட்:

கிருஷ்ணகிரியில் அல்ட்ராவயலட் நிறுவனம் மின்சார இரு சக்கர வாகனங்களுக்கான உற்பத்தி ஆலையை அமைக்க உள்ளது. இதற்காக ரூபாய் 779 கோடி ரூபாய் முதலீடு செய்து 4 ஆயிரம் நபர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட உள்ளது.

4. சூப்பர் மைக்ரோ:

சென்னையில் அமெரிக்காவைச் சேர்ந்த ஃபார்ச்சுன் 500 நிறுவனமான சூப்ரப் மைக்ரோ சர்வர்கள் உற்பத்தி மற்றும் ஒருங்கிணைப்ப மையத்தை அமைக்க உள்ளது. இதற்காக ரூபாய் 477 கோடி ரூபாய் முதலீடு செய்து 150 நபர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட உள்ளது.

5. YKK ஜப்பான்:

திருவள்ளூரில் ஜப்பானைச் சேர்ந்த YKK நிறுவனம் ஜிப்பர்கள் மற்றும் இணைப்பு சாதனங்கள் உற்பத்தி செய்யும் ஆலையை அமைக்க உள்ளது. உலகின் மிகப்பெரிய ஜிப்பர் மற்றும் இணைப்பு சாதனங்கள் உற்பத்தியாளரான இந்த நிறுவனம் இதற்காக ரூபாய் 1651 கோடி ரூபாய் முதலீடு செய்து 4 ஆயிரத்து 316 நபர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க உள்ளது.

6. ஷைலி இன்ஜினியரிங் ப்ளாஸ்டிக்ஸ்:

இந்த நிறுவனம் நுகர்வோர் மின்னனு சாதனங்களுக்கான உதிரிபாகங்கள் உற்பத்தி செய்யும் ஆலையைத் தமிழ்நாட்டில் அமைக்க உள்ளது. குஜராத்திற்கு வெளியே இந்த நிறுவனம் மேற்கொள்ளும் முதல் முதலீடு இதுவாகும். இதற்காக 500 கோடி ரூபாய் முதலீடு செய்து 400 நபர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட உள்ளது.

7. ஆவிட் குழுமம்:

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இந்த குழுமம் அடுத்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்கட்டமைப்பு மற்றும் சுற்றுலா, சுகாதாரம், சுரங்க உபகரண உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முதலீடு செய்ய முன்வந்துள்ளது. முதற்கட்டமாக 7 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு மற்றும் 12 ஆயிரம் நபர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பு என்ற வகையில் மேற்கண்ட துறைகளில் திருவள்ளூர் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் முதலீடு மேற்கொள்ள உள்ளது.

8. பிட்சர் ஜெர்மனி:

ஜெர்மனியின் முன்னணி நிறுவனமான இந்த பிட்சர் நிறுவனம் இந்தியாவில் தனது முதல் எச்விஏசி கம்ப்ரசர் உற்பத்தி ஆலையை சுமார் 300 கோடி ரூபாய் முதலீட்டில் காஞ்சிபுரத்தில் அமைக்கிறது.

9. ஜேகே டயர்:

இந்த நிறுவனம் காஞ்சிபுரத்தில் தனது டயர் உற்பத்தி திட்டத்தை ரூபாய் 5 ஆயிரத்து 143 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 3 ஆயிரத்து 510 நபர்களுக்கு வேலைவாய்ப்பு என்ற வகையில் விரிவாக்கம் மேற்கொள்ள உள்ளது.

10. டைம்லர், ஜெர்மனி:

ஜெர்மனியின் டைம்லர் தற்போது காஞ்சிபுரத்தில் உள்ள சிப்காட் ஒரகடம் தொழிற்பூங்காவில் வணிக வாகனங்கள் உற்பத்தி மேற்கொண்டு வருகிறது. இந்த நிறுவனம் ஒரகடத்தில் அமைந்துள்ள தனது 400 ஏக்கர் பரப்பிலான உற்பத்தி மற்றும் ஆராய்ச்சி மையத்தை 4 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு மற்றும் 400 நபர்களுக்கு வேலைவாய்ப்பு என்ற வகையில் வணிக வாகனங்களுக்கான வடிவமைப்பு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, உற்பத்தி ஆகிய பணிகளுக்கு இந்த மையத்தை மேம்படுத்த உள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks