தென்னை மற்றும் பனங்கள்ளுக்கான தடையை மறு ஆய்வு செய்து, விற்பனை செய்ய அனுமதிக்கும் வகையில் உரிய கொள்கை கோரிய வழக்கில், தமிழக உள்துறை முதன்மைச் செயலர் பதில் மனு தாக்கல் செய்ய மதுரை அமர்வு உத்தரவு.

பனங்கள், தென்னங்கள்

மாநிலம் முழுவதும் பனை மற்றும் தென்னை மரங்களின் எண்ணிக்கையை துல்லியமாக அறியும் நோக்கில் கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் மூலம் மாவட்ட வாரியாக பனை மற்றும் தென்னை மரங்களின் இருப்பு, சாகுபடி பரப்பு, உற்பத்தித் திறன் உள்ளிட்ட விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன. இந்த கணக்கெடுப்பின் அடிப்படையில் எதிர்காலத்தில் பனை மற்றும் தென்னை விவசாயிகளுக்கான திட்டங்களை சிறப்பாக வடிவமைக்கவும், உற்பத்தியை அதிகரிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், அரசு நலத்திட்டங்களை திட்டமிட்டு செயல்படுத்தவும் உதவியாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே, கணக்கெடுப்புப் பணிக்கு வரும் அதிகாரிகளுக்கு விவசாயிகள் தேவையான தகவல்களை வழங்கவும் கோரப்பட்டுள்ளது. பலரும் பனங்கள் மற்றும் தென்னங்கள் ஆகியவற்றை உற்பத்தி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற கிளையில் தென்னை மற்றும் பனங்கள்ளுக்கான தடையை மறு ஆய்வு செய்து, விற்பனை செய்ய அனுமதிக்கும் வகையில் உரிய கொள்கை வகுக்க கோரப்பட்டுள்ளது.

வழக்கு தொடர்பாக தமிழக உள்துறை முதன்மைச் செயலர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு

மதுரை ஒத்தக்கடையை சேர்ந்த தீரன் திருமுருகன் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில், "கள்ளுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதை மறு ஆய்வு செய்வதோடு தென்னை மற்றும் பனங்கள்ளை விற்பனை செய்ய அனுமதிக்கும் வகையில் உரிய கொள்கையை உருவாக்கவும் உத்தரவிட கோரி பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், சக்திவேல் அமர்வு, "வழக்கு தொடர்பாக தமிழக உள்துறை முதன்மைச் செயலர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, இது தொடர்பாக நிலுவையில் இருக்கும் வழக்கோடு சேர்த்து பட்டியலிட உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

Source: Read Full Article